சங்கீதம் 140 : 1 (ERVTA)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல் கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும். கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
சங்கீதம் 140 : 2 (ERVTA)
அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள்.
சங்கீதம் 140 : 3 (ERVTA)
அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை. அவர்களது நாவுகளின் கீழ் பாம்பின் விஷம் இருக்கும்.
சங்கீதம் 140 : 4 (ERVTA)
கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள்.
சங்கீதம் 140 : 5 (ERVTA)
அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள். என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள். அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள்.
சங்கீதம் 140 : 6 (ERVTA)
கர்த்தாவே, நீரே என் தேவன். கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
சங்கீதம் 140 : 7 (ERVTA)
கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர். நீரே என் மீட்பர். போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர்.
சங்கீதம் 140 : 8 (ERVTA)
கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும். அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும்.
சங்கீதம் 140 : 9 (ERVTA)
கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும். அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள். ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும்.
சங்கீதம் 140 : 10 (ERVTA)
நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும். என் பகைவர்களை நெருப்பில் வீசும். அவர்களைக் குழியில் தள்ளும், அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும்.
சங்கீதம் 140 : 11 (ERVTA)
கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும். அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும்.
சங்கீதம் 140 : 12 (ERVTA)
கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன். தேவன் திக்கற்றோருக்கு உதவுவார்.
சங்கீதம் 140 : 13 (ERVTA)
கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள். நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13