சங்கீதம் 14 : 1 (ERVTA)
தாவீது இராகத் தலைவனுக்கு அளித்த பாடல் “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான். கொடிய, சீர்கெட்ட காரியங்களை மூடர்கள் செய்வார்கள். அவர்களுள் ஒருவனும் நல்லதைச் செய்வதில்லை.
சங்கீதம் 14 : 2 (ERVTA)
கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார். ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார். (ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.)
சங்கீதம் 14 : 3 (ERVTA)
ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள். எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை.
சங்கீதம் 14 : 4 (ERVTA)
தீயோர் என் ஜனங்களை அழித்தனர். அத்தீயோர் தேவனை அறியார்கள். தீயோருக்கு மிகுதியாய் உணவு உண்டு. கர்த்தரை அவர்கள் ஆராதிப்பதில்லை.
சங்கீதம் 14 : 5 (ERVTA)
(5-6)ஏழையின் அறிவுரையை அத்தீயோர் கேளார்கள். ஏனெனில் ஏழை தேவனை நம்பி வாழ்வான். தேவன் நல்லவர்களோடு இருப்பார். எனவே தீயோர் மிகவும் அச்சம் கொள்வார்கள்.
சங்கீதம் 14 : 7 (ERVTA)
சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும். கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்! கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர். ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார். அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும்.
❮
❯
1
2
3
4
5
6
7