சங்கீதம் 137 : 1 (ERVTA)
பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து சீயோனை நினைத்தவாறே அழுதோம்.
சங்கீதம் 137 : 2 (ERVTA)
அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.
சங்கீதம் 137 : 3 (ERVTA)
பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள். சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
சங்கீதம் 137 : 4 (ERVTA)
ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய பாடல்களைப் பாட முடியவில்லை!
சங்கீதம் 137 : 5 (ERVTA)
எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன்.
சங்கீதம் 137 : 6 (ERVTA)
எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால், நான் என்றும் பாடேன். நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன்.
சங்கீதம் 137 : 7 (ERVTA)
ஆண்டவரே ஏதோமியர்களை நினையும். எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், “அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
சங்கீதம் 137 : 8 (ERVTA)
பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்! நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். எங்களை நீ துன்புறுத்தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
சங்கீதம் 137 : 9 (ERVTA)
உனது குழந்தைகளை இழுத்துச்சென்று, அவர்களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

1 2 3 4 5 6 7 8 9