சங்கீதம் 136 : 1 (ERVTA)
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 2 (ERVTA)
தேவாதி தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 3 (ERVTA)
கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 4 (ERVTA)
ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 5 (ERVTA)
வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 6 (ERVTA)
தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 7 (ERVTA)
தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 8 (ERVTA)
தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 9 (ERVTA)
தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்கலையும் உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 10 (ERVTA)
எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 11 (ERVTA)
தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 12 (ERVTA)
தேவன் அவரது மிகுந்த வல்லமையையும், பெலத்தையும் காட்டினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 13 (ERVTA)
தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 14 (ERVTA)
தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 15 (ERVTA)
தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 16 (ERVTA)
தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 17 (ERVTA)
தேவன் வல்லமையுள்ள அரசர்களைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 18 (ERVTA)
தேவன் பலமுள்ள அரசர்களைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 19 (ERVTA)
தேவன் எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 20 (ERVTA)
தேவன் பாஷானின் அரசனாகிய ஓகைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 21 (ERVTA)
தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 22 (ERVTA)
இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 23 (ERVTA)
நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 24 (ERVTA)
தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 25 (ERVTA)
தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136 : 26 (ERVTA)
பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26