சங்கீதம் 132 : 1 (ERVTA)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் சங்கீதம் கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும்.
சங்கீதம் 132 : 2 (ERVTA)
தாவீது கர்த்தருக்கு ஒரு வாக்குறுதி அளித்தான். யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்கு தாவீது ஒரு விசேஷ வாக்குறுதி அளித்தான்.
சங்கீதம் 132 : 3 (ERVTA)
தாவீது, “நான் என் வீட்டிற்குள் போகமாட்டேன், நான் என் படுக்கையில் படுக்கமாட்டேன்,
சங்கீதம் 132 : 4 (ERVTA)
நான் தூங்கமாட்டேன், என் கண்கள் ஓய்வெடுக்க விடமாட்டேன்,
சங்கீதம் 132 : 5 (ERVTA)
கர்த்தருக்கு ஒரு வீட்டை நான் கண்டுபிடிக்கும் மட்டும், யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குரிய வீட்டை நான் காணும்மட்டும், இக்காரியங்களில் ஒன்றையும் நான் செய்யமாட்டேன்!” என்றான்.
சங்கீதம் 132 : 6 (ERVTA)
எப்பிராத்தாவில் நாங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டோம். கீரியாத் யாரீமில் உடன்படிக்கைப் பெட்டியை நாங்கள் கண்டோம்.
சங்கீதம் 132 : 7 (ERVTA)
நாம் பரிசுத்தக் கூடாரத்திற்குச் செல்வோம். தேவன் பாதங்களை ஓய்வாக வைக்கும் பாதப்படியில் நாம் தொழுதுகொள்வோம்.
சங்கீதம் 132 : 8 (ERVTA)
கர்த்தாவே நீர் ஓய்வுக்கொள்ளும் இடத்திலிருந்து எழும்பும். கர்த்தாவே, உமது வல்லமையுள்ள பெட்டியோடு எழும்பும்.
சங்கீதம் 132 : 9 (ERVTA)
கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் நன்மையை அணிந்திருக்கிறார்கள். உம்மைப் பின்பற்றுவோர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
சங்கீதம் 132 : 10 (ERVTA)
உமது பணியாளகிய தாவீதின் நன்மைக்காக, நீர் தேர்ந்தெடுத்த அரசனைத் தள்ளிவிடாதேயும்.
சங்கீதம் 132 : 11 (ERVTA)
கர்த்தர் தாவீதுக்கு ஒரு வாக்குறுதியை அருளினார். தாவீதிடம் நேர்மையோடிருப்பதாகக் கர்த்தர் வாக்களித்தார். தாவீதின் குடும்பத்திலிருந்து அரசர்கள் வருவார்கள் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்தார்.
சங்கீதம் 132 : 12 (ERVTA)
கர்த்தர், “தாவீதே, உனது பிள்ளைகள் என் உடன்படிக்கைக்கும் நான் கற்பிக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்தால், உன் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் என்றென்றும் அரசராக இருப்பார்கள்” என்றார்.
சங்கீதம் 132 : 13 (ERVTA)
அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார். அந்த இடத்தையே தம்முடைய ஆலயத்திற்காக விரும்பினார்.
சங்கீதம் 132 : 14 (ERVTA)
கர்த்தர், “என்றென்றைக்கும் எப்போதும் இதுவே என் இடமாக இருக்கும். நான் இருக்கப்போகும் இடமாக இதனைத் தேர்ந்தெடுக்கிறேன்.
சங்கீதம் 132 : 15 (ERVTA)
நான் இந்நகரை மிகுதியான உணவினால் நிரப்பி ஆசீர்வதிப்பேன். ஏழைகளுக்கும் உண்ணும் உணவு மிகுதியாகக் கிடைக்கும்.
சங்கீதம் 132 : 16 (ERVTA)
மீட்பினால் ஆசாரியர்களை நான் உடுத்துவிப்பேன். என்னைப் பின்பற்றுவோர் இங்கு மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.
சங்கீதம் 132 : 17 (ERVTA)
இங்கு நான் தாவீதைப் பலப்படுத்துவேன். நான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு ஒரு விளக்கை அளிப்பேன்.
சங்கீதம் 132 : 18 (ERVTA)
தாவீதின் பகைவர்களை வெட்கத்தால் மூடுவேன். ஆனால் நான் தாவீதின் அரசைப் பெருகும்படி செய்வேன்” என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18