சங்கீதம் 119 : 1 (ERVTA)
ஆலெப பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.
சங்கீதம் 119 : 2 (ERVTA)
கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
சங்கீதம் 119 : 3 (ERVTA)
அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை. அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
சங்கீதம் 119 : 4 (ERVTA)
கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர். அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர்.
சங்கீதம் 119 : 5 (ERVTA)
கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன்.
சங்கீதம் 119 : 6 (ERVTA)
நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.
சங்கீதம் 119 : 7 (ERVTA)
உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும்.
சங்கீதம் 119 : 8 (ERVTA)
கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன். எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்!
சங்கீதம் 119 : 9 (ERVTA)
பேத் ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்? உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே.
சங்கீதம் 119 : 10 (ERVTA)
நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன். தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும்.
சங்கீதம் 119 : 11 (ERVTA)
நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன்.
சங்கீதம் 119 : 12 (ERVTA)
ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
சங்கீதம் 119 : 13 (ERVTA)
உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன்.
சங்கீதம் 119 : 14 (ERVTA)
வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக் கற்பதில் களிப்படைவேன்.
சங்கீதம் 119 : 15 (ERVTA)
நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன். உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன்.
சங்கீதம் 119 : 16 (ERVTA)
நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன். உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன்.
சங்கீதம் 119 : 17 (ERVTA)
கிமெல் உமது ஊழியனாகிய என்னிடம் நல்ல வராயிரும். அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
சங்கீதம் 119 : 18 (ERVTA)
கர்த்தாவே, எனது கண்களைத் திறவும். நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும், நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும்.
சங்கீதம் 119 : 19 (ERVTA)
நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன். கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.
சங்கீதம் 119 : 20 (ERVTA)
நான் எப்போதும் உமது நியாயங்களைக் கற்க விரும்புகிறேன்.
சங்கீதம் 119 : 21 (ERVTA)
கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர். அவர்களுக்குத் தீமைகள் நேரிடும். அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.
சங்கீதம் 119 : 22 (ERVTA)
நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும். நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன்.
சங்கீதம் 119 : 23 (ERVTA)
தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள். ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
சங்கீதம் 119 : 24 (ERVTA)
உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது. அது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது.
சங்கீதம் 119 : 25 (ERVTA)
டாலெத் நான் விரைவில் மரிப்பேன். கர்த்தாவே, கட்டளையிடும், என்னை வாழவிடும்.
சங்கீதம் 119 : 26 (ERVTA)
நான் என் வாழ்க்கையைப்பற்றி உமக்குக் கூறினேன். நீர் எனக்கு பதிலளித்தீர். இப்போது, உமது சட்டங்களை எனக்குக் கற்பியும்.
சங்கீதம் 119 : 27 (ERVTA)
கர்த்தாவே, உமது சட்டங்களை நான் புரிந்துகொள்ள எனக்கு உதவும். நீர் செய்த அற்புதமான காரியங்களை நான் படிக்கட்டும்.
சங்கீதம் 119 : 28 (ERVTA)
நான் வருத்தமடைந்து களைத்துப்போனேன். நீர் கட்டளையிடும், என்னை மீண்டும் பலப்படுத்தும்.
சங்கீதம் 119 : 29 (ERVTA)
கர்த்தாவே, நான் பொய்யாக வாழாதபடிச் செய்யும். உமது போதனைகளால் என்னை வழிநடத்தும்.
சங்கீதம் 119 : 30 (ERVTA)
கர்த்தாவே, நான் உம்மிடம் நேர்மையாயிருப்பதைத் தேர்ந்தெடுத்தேன். உமது ஞானமுள்ள முடிவுகளை நான் கவனமாகக் கற்கிறேன்.
சங்கீதம் 119 : 31 (ERVTA)
கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையில் உறுதியாயிருக்கிறேன். நான் வெட்கமடையவிடாதிரும்.
சங்கீதம் 119 : 32 (ERVTA)
நான் மகிழ்ச்சியோடு உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன். கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை மகிழ்ச்சியாக்கும்.
சங்கீதம் 119 : 33 (ERVTA)
எ கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும், நான் அவற்றைப் பின்பற்றுவேன்.
சங்கீதம் 119 : 34 (ERVTA)
நான் புரிந்துகொள்ள உதவும். நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன். நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன்.
சங்கீதம் 119 : 35 (ERVTA)
கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும். நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.
சங்கீதம் 119 : 36 (ERVTA)
செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது உடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும்.
சங்கீதம் 119 : 37 (ERVTA)
கர்த்தாவே, பயனற்ற காரியங்களைப் பார்க்கவிடாதேயும், உமது வழியில் வாழ எனக்கு உதவும்.
சங்கீதம் 119 : 38 (ERVTA)
ஜனங்கள் உம்மை மதிக்கும்படி உமது ஊழியனுக்கு உறுதியளித்தபடியே செய்யும்.
சங்கீதம் 119 : 39 (ERVTA)
கர்த்தாவே, நான் அஞ்சும் வெட்கத்தை எடுத்துப்போடும். உமது ஞானமுள்ள முடிவுகள் நல்லவை.
சங்கீதம் 119 : 40 (ERVTA)
பாரும், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன். எனக்கு நல்லவராக இருந்து, என்னை வாழவிடும்.
சங்கீதம் 119 : 41 (ERVTA)
வௌ கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டும். நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 119 : 42 (ERVTA)
அப்போது என்னை அவமானப்படுத்திய ஜனங்களுக்கு நான் பதிலளிக்கமுடியும். கர்த்தாவே, நீர் கூறும் காரியங்களை நான் உண்மையாகவே நம்புகிறேன்.
சங்கீதம் 119 : 43 (ERVTA)
உமது உண்மையான போதனைகளை நான் எப்போதும் பேசட்டும். கர்த்தாவே, நான் உமது ஞானமுள்ள முடிவுகளை சார்ந்திருக்கிறேன்.
சங்கீதம் 119 : 44 (ERVTA)
கர்த்தாவே, என்றென்றைக்கும் எப்போதும் உமது போதனைகளைப் பின்பற்றுவேன்.
சங்கீதம் 119 : 45 (ERVTA)
நான் விடுதலையாவேன், ஏனெனில் நான் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.
சங்கீதம் 119 : 46 (ERVTA)
நான் உமது உடன்படிக்கையை அரசர்களோடு கலந்து ஆலோசிப்பேன். அவர்கள் என்னை ஒருபோதும் அவமானப்படுத்தமாட்டார்கள்.
சங்கீதம் 119 : 47 (ERVTA)
கர்த்தாவே, உமது கட்டளைகளைக் கற்பதில் களிப்படைகிறேன். நான் அக்கட்டளைகளை நேசிக்கிறேன்.
சங்கீதம் 119 : 48 (ERVTA)
கர்த்தாவே, நான் உமது கட்டளைகளைத் துதிக்கிறேன். அவற்றை நேசிக்கிறேன். நான் அவற்றைக் கற்பேன்.
சங்கீதம் 119 : 49 (ERVTA)
சாயீன் கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த வாக்குறுதியை நினைவுக்கூரும். அவ்வாக்குறுதி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது.
சங்கீதம் 119 : 50 (ERVTA)
நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன், நீர் எனக்கு ஆறுதல் கூறினீர். உமது வார்த்தைகள் என்னை மீண்டும் வாழச் செய்தன.
சங்கீதம் 119 : 51 (ERVTA)
என்னைவிட உயர்ந்தோராகக் கருதிக்கொள்வோர் என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டிருந்தனர். ஆனால் நான் உமது போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
சங்கீதம் 119 : 52 (ERVTA)
உமது ஞானமுள்ள முடிவுகளை நான் எப்போதும் நினைவுக்கூருகிறேன். கர்த்தாவே, உமது ஞானமுள்ள முடிவுகள் எனக்கு ஆறுதல் தருகின்றன.
சங்கீதம் 119 : 53 (ERVTA)
தீயோர் உமது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிடுகின்றனர். அதைப் பார்க்கும்போது நான் கோபமடைகிறேன்.
சங்கீதம் 119 : 54 (ERVTA)
உமது சட்டங்கள் எனது வீட்டின்* வீட்டில் அல்லது “நான் வாழுகின்ற ஆலயத்தில்.” பாடல்களாகின்றன.
சங்கீதம் 119 : 55 (ERVTA)
கர்த்தாவே, நான் உமது நாமத்தை நினைவுக்கூருகிறேன். நான் உமது போதனைகளை நினைவுக்கூருகிறேன்.
சங்கீதம் 119 : 56 (ERVTA)
நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிவதால் இவ்வாறு நிகழ்கிறது.
சங்கீதம் 119 : 57 (ERVTA)
கேத் கர்த்தாவே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே என் கடமை என நான் முடிவு செய்தேன்.
சங்கீதம் 119 : 58 (ERVTA)
கர்த்தாவே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன். நீர் வாக்குறுதியாளித்தபடியே என்னிடம் தயவாயிரும்.
சங்கீதம் 119 : 59 (ERVTA)
என் வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவனமாக சிந்தித்தேன். உமது உடன்படிக்கைக்கு நேராகத் திரும்பி வந்தேன்.
சங்கீதம் 119 : 60 (ERVTA)
தாமதமின்றி உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கென விரைந்துவந்தேன்.
சங்கீதம் 119 : 61 (ERVTA)
தீயோர்களின் கூட்டமொன்று என்னைப் பற்றி தீயவற்றைக் கூறின. ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
சங்கீதம் 119 : 62 (ERVTA)
உமது நல்ல முடிவுகளுக்காக நன்றி கூறும்படி நள்ளிரவில் நான் எழுகிறேன்.
சங்கீதம் 119 : 63 (ERVTA)
உம்மைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவருக்கும் நான் நண்பன். உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு வருக்கும் நான் நண்பன்.
சங்கீதம் 119 : 64 (ERVTA)
கர்த்தாவே, உமது உண்மை அன்பு பூமியை நிரப்புகிறது. உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
சங்கீதம் 119 : 65 (ERVTA)
தேத் கர்த்தாவே, நீர் உமது பணியாளாகிய எனக்கு நல்லவற்றைச் செய்தீர். நீர் செய்வதாக எனக்கு உறுதியளித்தபடியே செய்தீர்.
சங்கீதம் 119 : 66 (ERVTA)
கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும். உமது கட்டளைகளை நான் நம்புகிறேன்.
சங்கீதம் 119 : 67 (ERVTA)
நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன். ஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
சங்கீதம் 119 : 68 (ERVTA)
தேவனே, நீர் நல்லவர், நீர் நல்ல காரியங்களைச் செய்கிறீர். உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
சங்கீதம் 119 : 69 (ERVTA)
என்னைக் காட்டிலும் உயர்ந்தோரெனத் தங்களைக் கருதியவர்கள் என்னைப் பற்றித் தீய பொய்களைக் கூறினார்கள். ஆனால் கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடும் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்ந்தேன்.
சங்கீதம் 119 : 70 (ERVTA)
அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
சங்கீதம் 119 : 71 (ERVTA)
துன்புறுவது எனக்கு நல்லது. நான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன்.
சங்கீதம் 119 : 72 (ERVTA)
கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை. ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை.
சங்கீதம் 119 : 73 (ERVTA)
யோட் கர்த்தாவே, நீர் என்னை உருவாக்கினீர். உமது கைகளால் நீர் என்னைத் தாங்குகிறீர். உமது கட்டளைகளைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் நீர் எனக்கு உதவும்.
சங்கீதம் 119 : 74 (ERVTA)
கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைப் பார்க்கிறார்கள், என்னை மதிக்கிறார்கள். நீர் சொல்வதை நான் நம்புவதால் அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
சங்கீதம் 119 : 75 (ERVTA)
கர்த்தாவே, உமது முடிவுகள் நியாயமானவை என்பதை நான் அறிகிறேன். நீர் என்னைத் தண்டிப்பதும் நியாயமேயாகும்.
சங்கீதம் 119 : 76 (ERVTA)
இப்போதும், உமது உண்மை அன்பினால் எனக்கு ஆறுதலளியும். நீர் உறுதியளித்தபடியே எனக்கு ஆறுதல் தாரும்.
சங்கீதம் 119 : 77 (ERVTA)
கர்த்தாவே, எனக்கு ஆறுதல் தந்து என்னை வாழவிடும். நான் உண்மையாகவே உமது போதனைகளில் களிப்படைகிறேன்.
சங்கீதம் 119 : 78 (ERVTA)
என்னிலும் உயர்ந்தோராகத் தங்களைக் கருதும் ஜனங்கள் என்னைப் பற்றிப் பொய் கூறினார்கள். அந்த ஜனங்கள் வெட்கமடைந்தார்கள் என நான் நம்புகிறேன். கர்த்தாவே, நான் உமது சட்டங்களைக் கற்கிறேன்.
சங்கீதம் 119 : 79 (ERVTA)
உமது உடன்படிக்கையை அறியும்படி உம்மைப் பின்பற்றுவோர் என்னிடம் திரும்பி வருவார்கள் என நான் நம்புகிறேன்.
சங்கீதம் 119 : 80 (ERVTA)
கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குச் சிறிதும் பிசகாது கீழ்ப்படியச் செய்யும், எனவே நான் வெட்கப்படமாட்டேன்.
சங்கீதம் 119 : 81 (ERVTA)
கப் நீர் என்னை மீட்கும்படி காத்திருந்து சாகும் தறுவாயில் உள்ளேன். ஆனால் கர்த்தாவே, நீர் கூறியவற்றை நான் நம்புகிறேன்.
சங்கீதம் 119 : 82 (ERVTA)
நீர் உறுதியளித்தவற்றிற்காக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் கண்களோ தளர்ந்து போகின்றன. கர்த்தாவே, நீர் எப்போது எனக்கு ஆறுதலளிப்பீர்?
சங்கீதம் 119 : 83 (ERVTA)
குப்பை மேட்டில் கிடக்கும் காய்ந்த தோல்பைப்போல ஆனாலும் நான் உமது சட்டங்களை மறக்கமாட்டேன்.
சங்கீதம் 119 : 84 (ERVTA)
எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேன்? கர்த்தாவே, என்னைத் துன்பப்படுத்துகிற ஜனங்களை நீர் எப்போது தண்டிப்பீர்?
சங்கீதம் 119 : 85 (ERVTA)
சில பெருமைக்காரர்கள் தங்கள் பொய்களால் என்னைக் குத்தினார்கள். அது உமது போதனைகளுக்கு எதிரானது.
சங்கீதம் 119 : 86 (ERVTA)
கர்த்தாவே, ஜனங்கள் உமது கட்டளைகளையெல்லாம் நம்பமுடியும். அவர்கள் என்னைத் தவறாகத் துன்புறுத்துகிறார்கள், எனக்கு உதவும்!
சங்கீதம் 119 : 87 (ERVTA)
அந்த ஜனங்கள் ஏறக்குறைய என்னை அழித்துவிட்டார்கள். ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தவில்லை.
சங்கீதம் 119 : 88 (ERVTA)
கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டி என்னை வாழவிடும். நீர் கூறிய காரியங்களை நான் செய்வேன்.
சங்கீதம் 119 : 89 (ERVTA)
லாமேட் கர்த்தாவே, உமது வார்த்தை என்றென்றும் தொடரும். உமது வார்த்தை என்றென்றும் பரலோகத்தில் தொடரும்.
சங்கீதம் 119 : 90 (ERVTA)
நீர் என்றென்றும் எப்போதும் நேர்மையானவர். கர்த்தாவே, நீர் பூமியை உண்டாக்கினீர், அது இன்னும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 119 : 91 (ERVTA)
உமது சட்டங்களாலும், அவற்றிற்கு ஒரு அடிமையைப்போன்று பூமி கீழ்ப்படிவதாலும் அது இன்றுவரை நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 119 : 92 (ERVTA)
உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால் எனது துன்பங்களே என்னை அழித்திருக்கும்.
சங்கீதம் 119 : 93 (ERVTA)
கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன். ஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன.
சங்கீதம் 119 : 94 (ERVTA)
கர்த்தாவே, நான் உம்முடையவன், எனவே என்னைக் காப்பாற்றும். ஏனெனில் நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மிகவும் முயல்கிறேன்.
சங்கீதம் 119 : 95 (ERVTA)
தீயோர் என்னை அழிக்க முயன்றார்கள். ஆனால் உமது உடன்படிக்கை என்னை ஞானமுள்ளவனாக்கிற்று.
சங்கீதம் 119 : 96 (ERVTA)
உமது சட்டங்களைத் தவிர, எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.
சங்கீதம் 119 : 97 (ERVTA)
மேம் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன். எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
சங்கீதம் 119 : 98 (ERVTA)
கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும். உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.
சங்கீதம் 119 : 99 (ERVTA)
உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என் ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.
சங்கீதம் 119 : 100 (ERVTA)
நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால், முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
சங்கீதம் 119 : 101 (ERVTA)
வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர். எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
சங்கீதம் 119 : 102 (ERVTA)
கர்த்தாவே, நீரே என் ஆசிரியர். ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
சங்கீதம் 119 : 103 (ERVTA)
என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.
சங்கீதம் 119 : 104 (ERVTA)
உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின. எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.
சங்கீதம் 119 : 105 (ERVTA)
நூன் கர்த்தாவே, உமது வார்த்தைகள் என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.
சங்கீதம் 119 : 106 (ERVTA)
உமது சட்டங்கள் நல்லவை. நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன். நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
சங்கீதம் 119 : 107 (ERVTA)
கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன். தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.
சங்கீதம் 119 : 108 (ERVTA)
கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும். உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
சங்கீதம் 119 : 109 (ERVTA)
என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது. ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
சங்கீதம் 119 : 110 (ERVTA)
தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை.
சங்கீதம் 119 : 111 (ERVTA)
கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன். அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
சங்கீதம் 119 : 112 (ERVTA)
உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.
சங்கீதம் 119 : 113 (ERVTA)
சாமெக் கர்த்தாவே, உம்மிடம் முற்றிலும் நேர்மையாக இராத ஜனங்களை நான் வெறுக்கிறேன். ஆனால் நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
சங்கீதம் 119 : 114 (ERVTA)
என்னை மூடிமறைத்துப் பாதுகாத்துக்கொள்ளும். கர்த்தாவே, நீர் கூறுகிற ஒவ்வொன்றையும் நான் நம்புகிறேன்.
சங்கீதம் 119 : 115 (ERVTA)
கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும். நான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
சங்கீதம் 119 : 116 (ERVTA)
கர்த்தாவே, நீர் வாக்குறுதியளித்தபடியே என்னைத் தாங்கி உதவும். நானும் வாழ்வேன். நான் உம்மை நம்புகிறேன், நான் ஏமாற்றமடையாதபடிச் செய்யும்.
சங்கீதம் 119 : 117 (ERVTA)
கர்த்தாவே, எனக்கு உதவும், நான் காப்பாற்றப்படுவேன். நான் உமது கட்டளைகளை என்றென்றைக்கும் கற்பேன்.
சங்கீதம் 119 : 118 (ERVTA)
கர்த்தாவே, உமது சட்டங்களை மீறுகிற ஒவ்வொருவரையும் நீர் தள்ளிவிடுகிறீர். ஏனெனில் அந்த ஜனங்கள் உம்மைப் பின்பற்ற சம்மதித்தபோது பொய் கூறினார்கள்.
சங்கீதம் 119 : 119 (ERVTA)
கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர். எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன்.
சங்கீதம் 119 : 120 (ERVTA)
கர்த்தாவே, நான் உம்மைக் கண்டு பயப்படுகிறேன். நான் உமது சட்டங்களுக்குப் பயந்து அவற்றை மதிக்கிறேன்.
சங்கீதம் 119 : 121 (ERVTA)
ஆயின் நான் நியாயமும் நல்லதுமானவற்றைச் செய்கிறேன். கர்த்தாவே, என்னைத் துன்புறுத்த விரும்புவோரிடம் என்னை ஒப்புவியாதேயும்.
சங்கீதம் 119 : 122 (ERVTA)
என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும். நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும்.
சங்கீதம் 119 : 123 (ERVTA)
கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும், என் கண்கள் தளர்ந்து போய்விட்டன.
சங்கீதம் 119 : 124 (ERVTA)
நான் உமது ஊழியன். உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும். உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
சங்கீதம் 119 : 125 (ERVTA)
நான் உமது ஊழியன். உமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும்.
சங்கீதம் 119 : 126 (ERVTA)
கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம். ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள்.
சங்கீதம் 119 : 127 (ERVTA)
கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும் நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
சங்கீதம் 119 : 128 (ERVTA)
நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன். தவறான போதனைகளை நான் வெறுக்கிறேன்.
சங்கீதம் 119 : 129 (ERVTA)
பே கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது. அதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன்.
சங்கீதம் 119 : 130 (ERVTA)
ஜனங்கள் உமது வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது சரியானபடி வாழ்வதற்கு வழிகாட்டும் ஒளியைப் போன்றிருக்கிறது. உமது வார்த்தை சாதாரண ஜனங்களையும் ஞானமுள்ளோராக்கும்.
சங்கீதம் 119 : 131 (ERVTA)
கர்த்தாவே, நான் உண்மையாகவே உமது கட்டளைகளைக் கற்க விரும்புகிறேன். நான் சிரமமாய் மூச்சுவிட்டுக்கொண்டு பொறுமையின்றிக் காத்திருக்கும் மனிதனைப் போல் இருக்கிறேன்.
சங்கீதம் 119 : 132 (ERVTA)
தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும். உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும்.
சங்கீதம் 119 : 133 (ERVTA)
கர்த்தாவே, நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வழிநடத்தும். தீமையேதும் எனக்கு நிகழாதபடி பார்த்துக்கொள்ளும்.
சங்கீதம் 119 : 134 (ERVTA)
கர்த்தாவே, என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
சங்கீதம் 119 : 135 (ERVTA)
கர்த்தாவே, உமது ஊழியனை ஏற்றுக் கொள்ளும். உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
சங்கீதம் 119 : 136 (ERVTA)
ஜனங்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியாததால் என் கண்ணீர் ஆற்றைப்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
சங்கீதம் 119 : 137 (ERVTA)
த்சாதே கர்த்தாவே, நீர் நல்லவர், உமது சட்டங்கள் நியாயமானவை.
சங்கீதம் 119 : 138 (ERVTA)
நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர். நாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும்.
சங்கீதம் 119 : 139 (ERVTA)
என் ஆழமான உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன. என் பகைவர்கள் உமது கட்டளைகளை மறந்தபடியால் நான் மிகவும் கலங்கியிருக்கிறேன்.
சங்கீதம் 119 : 140 (ERVTA)
கர்த்தாவே, உமது வார்த்தைகளை நாங்கள் நம்பமுடியும் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது. நான் அதை நேசிக்கிறேன்.
சங்கீதம் 119 : 141 (ERVTA)
நான் ஒரு இளைஞன், ஜனங்கள் என்னை மதிப்பதில்லை. ஆனால் நான் உமது கட்டளைகளை மறக்கமாட்டேன்.
சங்கீதம் 119 : 142 (ERVTA)
கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும். உமது போதனைகள் நம்பக் கூடியவை.
சங்கீதம் 119 : 143 (ERVTA)
எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன. ஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன்.
சங்கீதம் 119 : 144 (ERVTA)
உமது உடன்படிக்கை என்றென்றைக்கும் நல்லது. நான் வாழும்படி, அதைப் புரிந்துக்கொள்ள எனக்கு உதவும்.
சங்கீதம் 119 : 145 (ERVTA)
கோப் கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன். எனக்குப் பதில் தாரும்! நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.
சங்கீதம் 119 : 146 (ERVTA)
கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்! நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன்.
சங்கீதம் 119 : 147 (ERVTA)
நான் உம்மிடம் ஜெபம் செய்வதற்கு அதிகாலையில் எழுந்தேன். நீர் சொல்பவற்றை நான் நம்புகிறேன்.
சங்கீதம் 119 : 148 (ERVTA)
உமது வார்த்தைகளைக் கற்பதற்கு இரவில் வெகுநேரம் நான் விழித்திருந்தேன்.
சங்கீதம் 119 : 149 (ERVTA)
உமது முழு அன்பினாலும் எனக்குச் செவி கொடும். கர்த்தாவே, நீர் சரியெனக் கூறும் காரியங்களைச் செய்து, என்னை வாழவிடும்.
சங்கீதம் 119 : 150 (ERVTA)
ஜனங்கள் எனக்கெதிராக கொடிய திட்டங்களை வகுக்கிறார்கள். அந்த ஜனங்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை.
சங்கீதம் 119 : 151 (ERVTA)
கர்த்தாவே, நீர் எனக்கு நெருக்கமானவர். உமது கட்டளைகள் நம்பக்கூடியவை.
சங்கீதம் 119 : 152 (ERVTA)
பல காலத்திற்கு முன்பு நான் உமது உடன்படிக்கையின் மூலம், உமது போதனைகள் என்றென்றும் தொடரும் என்பதை கற்றேன்.
சங்கீதம் 119 : 153 (ERVTA)
ரேஷ் கர்த்தாவே, என் துன்பங்களைக் கண்டு, என்னை விடுவியும். நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
சங்கீதம் 119 : 154 (ERVTA)
கர்த்தாவே, எனக்காக நீர் போரிட்டு, என்னைக் காப்பாற்றும். நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வாழவிடும்.
சங்கீதம் 119 : 155 (ERVTA)
தீயோர் உமது சட்டங்களைப் பின்பற்றாததால் அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள்.
சங்கீதம் 119 : 156 (ERVTA)
கர்த்தாவே, நீர் மிகுந்த தயவுள்ளவர். நீர் சரியென நினைப்பவற்றைச் செய்யும, என்னை வாழவிடும்.
சங்கீதம் 119 : 157 (ERVTA)
என்னைத் துன்புறுத்த முயலும் பல பகைவர்கள் எனக்குண்டு. ஆனால் நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
சங்கீதம் 119 : 158 (ERVTA)
நான் அந்தத் துரோகிகளைப் பார்க்கிறேன். கர்த்தாவே, அவர்கள் உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை. நான் அதை வெறுக்கிறேன்.
சங்கீதம் 119 : 159 (ERVTA)
பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன். கர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும்.
சங்கீதம் 119 : 160 (ERVTA)
கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை. உமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
சங்கீதம் 119 : 161 (ERVTA)
ஷீன் எக்காரணமுமின்றி வல்லமையுள்ள தலைவர்கள் என்னைத் தாக்கினார்கள். ஆனால் நான் உமது சட்டத்திற்கு மட்டுமே பயந்து, அதை மதிக்கிறேன்.
சங்கீதம் 119 : 162 (ERVTA)
கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும் சந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.
சங்கீதம் 119 : 163 (ERVTA)
நான் பொய்களை வெறுக்கிறேன்! நான் அவற்றை அருவருக்கிறேன்! ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
சங்கீதம் 119 : 164 (ERVTA)
உமது நல்ல சட்டங்களுக்காக ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
சங்கீதம் 119 : 165 (ERVTA)
உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள். அந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது.
சங்கீதம் 119 : 166 (ERVTA)
கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன். நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
சங்கீதம் 119 : 167 (ERVTA)
நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன். கர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன்.
சங்கீதம் 119 : 168 (ERVTA)
நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன். கர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
சங்கீதம் 119 : 169 (ERVTA)
தௌ கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும். நீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவானாக்கும்.
சங்கீதம் 119 : 170 (ERVTA)
கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும். நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 119 : 171 (ERVTA)
நான் துதிப் பாடல்களைப் பாடிக்களிப்படைகிறேன். ஏனெனில் நீர் உமது சட்டங்களை எனக்குப் போதித்தீர்.
சங்கீதம் 119 : 172 (ERVTA)
உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும். கர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை.
சங்கீதம் 119 : 173 (ERVTA)
என்னருகில் வந்து எனக்கு உதவும். ஏனெனில் நான் உமது கட்டளைகளைப் பின்பற்றுவதெனத் தீர்மானித்தேன்.
சங்கீதம் 119 : 174 (ERVTA)
கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றவேண்டுமென விரும்புகிறேன். ஆனால் உமது போதனைகள் என்னை மகிழ்விக்கின்றன.
சங்கீதம் 119 : 175 (ERVTA)
கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும். உமது சட்டங்கள் எனக்கு உதவட்டும்.
சங்கீதம் 119 : 176 (ERVTA)
காணாமற்போன ஆட்டைப்போன்று நான் அலைந்து திரிந்தேன். கர்த்தாவே, என்னைத் தேடிவாரும். நான் உமது ஊழியன், நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.
❮
❯