சங்கீதம் 118 : 1 (ERVTA)
கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள். அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் தொடரும்!
சங்கீதம் 118 : 2 (ERVTA)
இஸ்ரவேலே, இதைக்கூறு, "அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!"
சங்கீதம் 118 : 3 (ERVTA)
ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்: "அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!"
சங்கீதம் 118 : 4 (ERVTA)
கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்களே, இதைக் கூறுங்கள்: "அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!"
சங்கீதம் 118 : 5 (ERVTA)
நான் தொல்லையில் உழன்றேன். எனவே உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டேன். கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார்.
சங்கீதம் 118 : 6 (ERVTA)
கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன். என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.
சங்கீதம் 118 : 7 (ERVTA)
கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர். என் பகைவர்கள் தோல்வியுறுவதை நான் காண்பேன்.
சங்கீதம் 118 : 8 (ERVTA)
ஜனங்களை நம்புவதைக் காட்டிலும் கர்த்தரை நம்புவது நல்லது.
சங்கீதம் 118 : 9 (ERVTA)
உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும் கர்த்தரை நம்புவது நல்லது.
சங்கீதம் 118 : 10 (ERVTA)
பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன்.
சங்கீதம் 118 : 11 (ERVTA)
பகைவர்கள் பலர் என்னை மீண்டும் மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள். கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
சங்கீதம் 118 : 12 (ERVTA)
தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள். கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
சங்கீதம் 118 : 13 (ERVTA)
என் பகைவர்கள் என்னைத் தாக்கி அழிக்க முயன்றனர். ஆனால் கர்த்தர் எனக்கு உதவினார்.
சங்கீதம் 118 : 14 (ERVTA)
கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார். கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்!
சங்கீதம் 118 : 15 (ERVTA)
நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும். கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
சங்கீதம் 118 : 16 (ERVTA)
கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன. கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
சங்கீதம் 118 : 17 (ERVTA)
நான் வாழ்வேன், மரிக்கமாட்டேன். கர்த்தர் செய்தவற்றை நான் கூறுவேன்.
சங்கீதம் 118 : 18 (ERVTA)
கர்த்தர் என்னைத் தண்டித்தார், ஆனால் அவர் என்னை மரிக்கவிடமாட்டார்.
சங்கீதம் 118 : 19 (ERVTA)
நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள், நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன்.
சங்கீதம் 118 : 20 (ERVTA)
அவை கர்த்தருடைய கதவுகள், நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும்.
சங்கீதம் 118 : 21 (ERVTA)
கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன். நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
சங்கீதம் 118 : 22 (ERVTA)
கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று.
சங்கீதம் 118 : 23 (ERVTA)
கர்த்தரே இதைச் செய்தார். அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம்.
சங்கீதம் 118 : 24 (ERVTA)
இந்நாள் கர்த்தர் செய்த நாள். இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்!
சங்கீதம் 118 : 25 (ERVTA)
ஜனங்கள், "கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
சங்கீதம் 118 : 26 (ERVTA)
கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்" என்றார்கள். ஆசாரியர்கள், "நாங்கள் உங்களைக் கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்!
சங்கீதம் 118 : 27 (ERVTA)
கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார். பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்" என்றார்கள்.
சங்கீதம் 118 : 28 (ERVTA)
கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன். நான்உம்மைத் துதிக்கிறேன்.
சங்கீதம் 118 : 29 (ERVTA)
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

BG:

Opacity:

Color:


Size:


Font: