சங்கீதம் 116 : 1 (ERVTA)
கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை நான் நேசிக்கிறேன்.
சங்கீதம் 116 : 2 (ERVTA)
நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை நான் நேசிக்கிறேன்.
சங்கீதம் 116 : 3 (ERVTA)
நான் மரித்தவன் போலானேன்! மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று. நான் அஞ்சிக் கலங்கினேன்.
சங்கீதம் 116 : 4 (ERVTA)
அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன். நான்: “கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!” என்று கூறினேன்.
சங்கீதம் 116 : 5 (ERVTA)
கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார். தேவன் தயவுள்ளவர்.
சங்கீதம் 116 : 6 (ERVTA)
கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார். நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
சங்கீதம் 116 : 7 (ERVTA)
என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு! கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.
சங்கீதம் 116 : 8 (ERVTA)
தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர். நீர் என் கண்ணீரை நிறுத்தினீர். நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர்.
சங்கீதம் 116 : 9 (ERVTA)
நான் உயிருள்ளோரின் தேசத்தில் தொடர்ந்து கர்த்தருக்குச் சேவைசெய்வேன்.
சங்கீதம் 116 : 10 (ERVTA)
“நான் அழிந்துபோனேன்!” என்று கூறியபோதும் நான் தொடர்ந்து நம்பிக்கை வைத்தேன்.
சங்கீதம் 116 : 11 (ERVTA)
நான் பயப்பட்டபோதும் “மனிதர்கள் எல்லோரும் பொய்யர்களே!” என்றேன்.
சங்கீதம் 116 : 12 (ERVTA)
நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்? என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தரே கொடுத்தார்.
சங்கீதம் 116 : 13 (ERVTA)
அவர் என்னைக் காப்பாற்றினார். எனவே நான் அவருக்கு ஒரு பானங்களின் காணிக்கையை அளிப்பேன். நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
சங்கீதம் 116 : 14 (ERVTA)
நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன். இப்போது அவரது ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் போவேன்.
சங்கீதம் 116 : 15 (ERVTA)
கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது! கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்!
சங்கீதம் 116 : 16 (ERVTA)
நான் உமது பணியாள். உமது பணிப் பெண் ஒருத்தியின் பிள்ளைகளுள் ஒருவன் நான். கர்த்தாவே, நீரே என்னுடைய முதல் போதகர்.
சங்கீதம் 116 : 17 (ERVTA)
நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன். நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.
சங்கீதம் 116 : 18 (ERVTA)
நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன். நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன்.
சங்கீதம் 116 : 19 (ERVTA)
நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன். கர்த்தரைத் துதிப்போம்!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19