சங்கீதம் 115 : 1 (ERVTA)
கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை. மகிமை உமக்கே உரியது. உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது.
சங்கீதம் 115 : 2 (ERVTA)
எங்கள் தேவன் எங்கே என்று ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்?
சங்கீதம் 115 : 3 (ERVTA)
தேவன் பரலோகத்தில் இருக்கிறார். அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
சங்கீதம் 115 : 4 (ERVTA)
அத்தேசங்களின் "தெய்வங்கள்" பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே. அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே.
சங்கீதம் 115 : 5 (ERVTA)
அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது. அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது.
சங்கீதம் 115 : 6 (ERVTA)
அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது. அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது.
சங்கீதம் 115 : 7 (ERVTA)
அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது. அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது. அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
சங்கீதம் 115 : 8 (ERVTA)
அச்சிலைகளைச் செய்து, அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
சங்கீதம் 115 : 9 (ERVTA)
இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்! கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர்.
சங்கீதம் 115 : 10 (ERVTA)
ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்! கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
சங்கீதம் 115 : 11 (ERVTA)
கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்! கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
சங்கீதம் 115 : 12 (ERVTA)
கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார், கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார். கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 115 : 13 (ERVTA)
கர்த்தர் தம்மைப் பின்பற்றும் உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 115 : 14 (ERVTA)
கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
சங்கீதம் 115 : 15 (ERVTA)
கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.கர்த்தர்உங்களைவரவேற்கிறார்!
சங்கீதம் 115 : 16 (ERVTA)
பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது. ஆனால்பூமியைஜனங்களுக்குக்கொடுத்தார்.
சங்கீதம் 115 : 17 (ERVTA)
மரித்தவர்களும், கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.
சங்கீதம் 115 : 18 (ERVTA)
நாம் கர்த்தரை துதிப்போம். இதுமுதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம். அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

BG:

Opacity:

Color:


Size:


Font: