சங்கீதம் 110 : 1 (ERVTA)
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, “என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் வைப்பேன்” என்றார்.
சங்கீதம் 110 : 2 (ERVTA)
உமது அரசு பெருக கர்த்தர் உதவுவார். உமது அரசு சீயோனில் ஆரம்பிக்கும். பிற நாடுகளிலும்நீர் உமது பகைவர்களை ஆளும்வரைக்கும் அது பெருகும்.
சங்கீதம் 110 : 3 (ERVTA)
நீர் உமது படையை ஒன்று திரட்டும்போது உமது ஜனங்கள் தாங்களே விருப்பத்துடன் வருவார்கள் அவர்கள் சிறப்பு ஆடைகளை அணிவார்கள். அவர்கள் அதிகாலையில் சந்திப்பார்கள். அந்த இளைஞர்கள் தரைமேல் உள்ள பனித்துளியைப்போல் உம்மைச் சுற்றி இருப்பார்கள்.
சங்கீதம் 110 : 4 (ERVTA)
கர்த்தர் ஒரு வாக்குறுதி அளித்தார். அவர் மனம் மாறமாட்டார். “நீர் என்றென்றும் ஆசாரியராயிருப்பீர். மெல்கிசேதேக்கைப் போன்ற ஆசாரியராயிருப்பீர்.”
சங்கீதம் 110 : 5 (ERVTA)
என் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார். அவர் கோபமடையும்போது மற்ற அரசர்களைத் தோற்கடிப்பார்.
சங்கீதம் 110 : 6 (ERVTA)
தேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார். பூமி பிரேதங்களால் நிரப்பப்படும். தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார்.
சங்கீதம் 110 : 7 (ERVTA)
வழியின் நீரூற்றில் அரசர் தண்ணீரை பருகுகிறார். அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்!

1 2 3 4 5 6 7