{இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்} [PS] கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன். [QBR] ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்? [QBR2] நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள்.
சங்கீதம் 11 : 2 (ERVTA)
தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள். [QBR2] அவர்கள் வில்லை வளைத்து அம்பைக் குறிவைப்பார்கள். [QBR2] நல்ல, நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் மேல் எய்வார்கள். [QBR]
சங்கீதம் 11 : 3 (ERVTA)
நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்? [QBR2] நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்?
சங்கீதம் 11 : 4 (ERVTA)
கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். [QBR2] பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார். [QBR] நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார். [QBR2] கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும். [QBR]