சங்கீதம் 109 : 1 (ERVTA)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களில் ஒன்று தேவனே, என் ஜெபத்திற்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதேயும்.
சங்கீதம் 109 : 2 (ERVTA)
தீயோர் என்னைப்பற்றிப் பொய்களைக் கூறுகிறார்கள். உண்மையற்ற காரியங்களை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
சங்கீதம் 109 : 3 (ERVTA)
என்னைப்பற்றி ஜனங்கள் வெறுப்படையும் காரியங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எந்தக் காரணமுமின்றி அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
சங்கீதம் 109 : 4 (ERVTA)
நான் அவர்களை நேசித்தேன், அவர்களோ என்னைப் பகைக்கிறார்கள். எனவே இப்போது, தேவனே, உம்மை நோக்கி ஜெபம் செய்கிறேன்.
சங்கீதம் 109 : 5 (ERVTA)
நான் அந்த ஜனங்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்தேன். ஆனால் அவர்களோ எனக்குத் தீய காரியங்களைச் செய்கிறார்கள். நான் அவர்களை நேசித்தேன். ஆனால் அவர்களோ, என்னைப் பகைத்தார்கள்.
சங்கீதம் 109 : 6 (ERVTA)
அவன் செய்த தீயக் காரியங்களுக்காக எனது பகைவனைத் தண்டியும். அவன் தவறானவனென்று நிரூபிக்கும் ஒருவனைக் கண்டுபிடியும்.
சங்கீதம் 109 : 7 (ERVTA)
என் பகைவன் தவறு செய்ததையும், அவனே குற்றவாளி என்பதையும் நீதிபதி முடிவு செய்யட்டும். என் பகைவன் கூறுபவை யாவும் அவனுக்கே மேலும் தீமையைத் தேடித்தரட்டும்.
சங்கீதம் 109 : 8 (ERVTA)
என் பகைவன் உடனே மடியட்டும். அவன் பதவியை மற்றொருவன் பெறட்டும்.
சங்கீதம் 109 : 9 (ERVTA)
என் பகைவனின் குழந்தைகள், அநாதைகளாகி, அவன் மனைவி விதவையாகட்டும்.
சங்கீதம் 109 : 10 (ERVTA)
அவர்கள் தங்கள் வீட்டை இழந்து பிச்சைக்காரர்களாகட்டும்.
சங்கீதம் 109 : 11 (ERVTA)
என் பகைவனிடம் கடன்பட்டிருக்கிற ஜனங்கள் அவனுக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளட்டும். அவன் உழைத்த எல்லாப் பொருட்களையும் எவராவது எடுத்துக்கொள்ளட்டும்.
சங்கீதம் 109 : 12 (ERVTA)
என் பகைவனுக்கு ஒருவனும் இரக்கம் காட்டமாட்டான் என நான் நம்புகிறேன். ஒருவனும் அவனது குழந்தைகளுக்குக் கிருபை காட்டமாட்டான் எனவும் நான் நம்புகிறேன்.
சங்கீதம் 109 : 13 (ERVTA)
என் பகைவனை முற்றிலும் அழியும். அடுத்த தலைமுறையினர் அவன் பெயரை எல்லாவற்றிலிருந்தும் அகற்றிப்போடட்டும்.
சங்கீதம் 109 : 14 (ERVTA)
என் பகைவனின் தந்தையின் பாவங்களை கர்த்தர் நினைவில்கொள்வார் என்று நான் நம்புகிறேன். அவனது தாயின் பாவங்கள் என்றும் நீக்கப்படுவதில்லை என நான் நம்புகிறேன்.
சங்கீதம் 109 : 15 (ERVTA)
கர்த்தர் அப்பாவங்களை என்றென்றும் நினைவு கூருவார் என நான் நம்புகிறேன். ஜனங்கள் என் பகைவனை முற்றிலும் மறந்துப்போகும்படி அவர் ஜனங்களை வற்புறுத்துவார் என நான் நம்புகிறேன்.
சங்கீதம் 109 : 16 (ERVTA)
ஏனெனில் அத்தீய மனிதன் ஒருபோதும் நன்மை செய்ததில்லை. அவன் ஒருபோதும் எவரையும் நேசித்ததில்லை. அவன் ஏழைகள், திக்கற்றோர் ஆகியோரின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தான்.
சங்கீதம் 109 : 17 (ERVTA)
பிறருக்குத் தீயவை நிகழ வேண்டுமெனக் கேட்பதில் அத்தீயவன் ஆர்வமுடையவனாக இருந்தான். எனவே அத்தீமைகள் அவனுக்கு நேரிடட்டும். அத்தீய மனிதன் ஒருபோதும் ஜனங்களுக்கு நல்லவை நிகழ வேண்டுமெனக் கேட்டதில்லை.
சங்கீதம் 109 : 18 (ERVTA)
சாபங்கள் அவன் ஆடைகளாகட்டும். சாபங்கள் அவன் பருகும் தண்ணீராகட்டும். சாபங்கள் அவன் சரீரத்தின் மீது எண்ணெயாகட்டும்.
சங்கீதம் 109 : 19 (ERVTA)
சாபங்கள் அத்தீயோனைச் சுற்றியிருக்கும் ஆடைகளாகட்டும். சாபங்கள் அவன் இடுப்பைச் சுற்றியிருக்கும் கச்சையாகட்டும்.
சங்கீதம் 109 : 20 (ERVTA)
என் பகைவனுக்கு அக்காரியங்கள் அனைத்தையும் கர்த்தர் செய்வார் என நான் நம்புகிறேன். என்னைக் கொல்ல முயன்றுக்கொண்டிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் அவற்றைச் செய்வார் என நான் நம்புகிறேன்.
சங்கீதம் 109 : 21 (ERVTA)
கர்த்தாவே, நீரே என் ஆண்டவர். எனவே உமது நாமத்துக்குப் பெருமைதரும் வழியில் என்னைக் கவனியும். உமக்கு மிகுதியான அன்பு உண்டு எனவே என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 109 : 22 (ERVTA)
நான் ஏழையும் திக்கற்றவனுமான மனிதன். நான் உண்மையிலேயே கவலையடைகிறேன். என் இருதயம் நொறுங்கிப்போகிறது.
சங்கீதம் 109 : 23 (ERVTA)
என் வாழ்க்கை பகலின் முடிவை அறிவிக்கும் நீண்ட நிழலைப்போன்றது என நான் உணர்கிறேன். சிலர் தள்ளிவிடும் பூச்சியைப்போல் உணருகிறேன்.
சங்கீதம் 109 : 24 (ERVTA)
நான் பசியாயிருப்பதால் என் முழங்கால்கள் சோர்ந்துள்ளன. நான் எடை குறைந்து மெலிந்து போகிறேன்.
சங்கீதம் 109 : 25 (ERVTA)
தீய ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் என்னைப் பார்த்துத் தலையைக் குலுக்கிக்கொள்கிறார்கள்.
சங்கீதம் 109 : 26 (ERVTA)
என் தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவும்! உமது உண்மையான அன்பை வெளிப்படுத்தி, என்னைக் காப்பாற்றும்!
சங்கீதம் 109 : 27 (ERVTA)
நீர் எனக்கு உதவினீரென்று அப்போது அந்த ஜனங்கள் அறிவார்கள். உமது வல்லமை எனக்கு உதவிற்று என்பதையும் அவர்கள் அப்போது அறிவார்கள்.
சங்கீதம் 109 : 28 (ERVTA)
அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும். அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும். அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன்.
சங்கீதம் 109 : 29 (ERVTA)
என் பகைவர்களை வெட்கப்படுத்தும்! அவர்கள் தங்கள் வெட்கத்தை ஒரு மேலாடையைப் போல் அணிந்துகொள்ளட்டும்.
சங்கீதம் 109 : 30 (ERVTA)
நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன். பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன்.
சங்கீதம் 109 : 31 (ERVTA)
ஏனெனில் கர்த்தர் திக்கற்றோருக்கு சார்பாக இருக்கிறார். அவர்களை மரணத்திற்கென்று குற்றம்சாட்ட முயல்வோரிடமிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31