சங்கீதம் 105 : 1 (ERVTA)
கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள். அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள்.
சங்கீதம் 105 : 2 (ERVTA)
கர்த்தரை நோக்கிப் பாடுங்கள். அவருக்குத் துதி களைப் பாடுங்கள். அவர் செய்யும் வியக்கத் தக்க காரியங்களைக் குறித்துக் கூறுங்கள்.
சங்கீதம் 105 : 3 (ERVTA)
கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள். ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரைத் தேடிவந்தீர்கள். சந்தோஷமாயிருங்கள்!
சங்கீதம் 105 : 4 (ERVTA)
வல்லமைக்காகக் கர்த்தரிடம் போங்கள். உதவிக்காக எப்போதும் அவரிடம் போங்கள்.
சங்கீதம் 105 : 5 (ERVTA)
அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள். அவர் செய்த அதிசயங்களை யும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள்.
சங்கீதம் 105 : 6 (ERVTA)
நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர். நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாக்கோபின் சந்ததியினர்.
சங்கீதம் 105 : 7 (ERVTA)
கர்த்தரே நமது தேவன். கர்த்தர் உலகம் முழுவதையும் ஆளுகிறார்.
சங்கீதம் 105 : 8 (ERVTA)
தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள். ஆயிரம் தலைமுறை வரையிலும் அவரது கட்டளைகளை நினைவுகூருங்கள்.
சங்கீதம் 105 : 9 (ERVTA)
தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார். தேவன் ஈசாக்கோடு ஒரு வாக்குறுதி யைச் செய்தார்.
சங்கீதம் 105 : 10 (ERVTA)
பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார். தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார். அது என்றென்றும் தொடரும்!
சங்கீதம் 105 : 11 (ERVTA)
தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன். அத்தேசம் உனக்குச் சொந்தமாகும்” என்றார்.
சங்கீதம் 105 : 12 (ERVTA)
ஆபிரகாமின் குடும்பம் சிறியதாயிருந்தபோது தேவன் அவ்வாக்குறுதியை அளித்தார். அவர்கள் அங்கு அந்நியராகச் சில காலத்தைக் கழித்தனர்.
சங்கீதம் 105 : 13 (ERVTA)
அவர்கள் ஒரு அரசிலிருந்து மற்றோர் அரசிற்கும், ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கும் பயணம் செய்தார்கள்.
சங்கீதம் 105 : 14 (ERVTA)
ஆனால் ஜனங்கள் அவர்களைத் தகாதபடி நடத்த தேவன் அனுமதிக்கவில்லை. அவர்களைத் துன்புறுத்தாதபடிக்கு தேவன் அரசர்களை எச்சரித்தார்.
சங்கீதம் 105 : 15 (ERVTA)
தேவன், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்குத் தீமை செய்யாதீர்கள். எனது தீர்க்கதரிசிகளுக்கு எந்தத் தீமையும் செய்யாதீர்கள்” என்றார்.
சங்கீதம் 105 : 16 (ERVTA)
தேவன் தேசத்தில் பஞ்சம் வரப்பண்ணினார். ஜனங்களுக்கு உண்பதற்குத் தேவையான உணவு இருக்கவில்லை.
சங்கீதம் 105 : 17 (ERVTA)
ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார். யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டான்.
சங்கீதம் 105 : 18 (ERVTA)
யோசேப்பின் கால்களை அவர்கள் ஒரு கயிற்றால் கட்டினார்கள். அவன் கழுத்தைச் சுற்றிலும் ஒரு இரும்பு வளையத்தை அணிவித்தார்கள்.
சங்கீதம் 105 : 19 (ERVTA)
அவர் சொன்ன காரியங்கள் அப்படியே நிகழும்வரை யோசேப்பு அடிமையாக இருந்தான். யோசேப்பு நேர்மையானவன் என்பதைக் கர்த்தருடைய செய்தி நிரூபித்தது.
சங்கீதம் 105 : 20 (ERVTA)
எனவே எகிப்திய அரசன் அவனை விடுதலை செய்தான். தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான்.
சங்கீதம் 105 : 21 (ERVTA)
அவர் அவனுக்குத் தமது வீட்டின் பொறுப்பைக் கொடுத்தார். அவருக்குச் சொந்தமான அனைத்தையும் யோசேப்பு கண்காணித்து வந்தான்.
சங்கீதம் 105 : 22 (ERVTA)
பிற தலைவர்களுக்கு யோசேப்பு ஆணைகள் அளித்தான். யோசேப்பு முதியவர்களுக்குக் கற்பித்தான்.
சங்கீதம் 105 : 23 (ERVTA)
பின்பு இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான். யாக்கோபு காமின் நாட்டில் வாழ்ந்தான்.
சங்கீதம் 105 : 24 (ERVTA)
யாக்கோபின் குடும்பம் பெருகிற்று. அவர்களின் பகைவர்களைக் காட்டிலும் அவர்கள் பலவான்களானார்கள்.
சங்கீதம் 105 : 25 (ERVTA)
எனவே எகிப்தியர்கள் யாக்கோபின் குடும்பத்தைப் பகைக்கத் தொடங்கினார்கள். அவர்களின் அடிமைகளுக்கு எதிரான திட்டங்கள் வகுத்தார்கள்.
சங்கீதம் 105 : 26 (ERVTA)
எனவே தேவன் தமது தாசனாகிய மோசேயை அனுப்பினார். தேவன் தேர்ந்தெடுத்த ஆசாரியனாக ஆரோன் இருந்தான்.
சங்கீதம் 105 : 27 (ERVTA)
காமின் நாட்டில் பல அதிசயங்களைச் செய்வதற்கு தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினார்.
சங்கீதம் 105 : 28 (ERVTA)
தேவன் மிகக் கடும் இருளை அனுப்பினார். ஆனால் எகிப்தியர்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை.
சங்கீதம் 105 : 29 (ERVTA)
எனவே தேவன் தண்ணீரை இரத்தமாக்கினார். எல்லா மீன்களும் மடிந்தன.
சங்கீதம் 105 : 30 (ERVTA)
அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று. அரசனின் படுக்கையறையில் கூட தவளைகள் இருந்தன.
சங்கீதம் 105 : 31 (ERVTA)
தேவன் கட்டளையிட்டார். ஈக்களும் பேன்களும் வந்தன. அவை எங்கும் நிரம்பின.
சங்கீதம் 105 : 32 (ERVTA)
தேவன் கல்மழையைப் பெய்யப்பண்ணினார். நாடு முழுவதையும் மின்னல் பாதித்தது.
சங்கீதம் 105 : 33 (ERVTA)
தேவன் அவர்களது திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார். அந்நாட்டின் ஒவ்வொரு மரத்தையும் தேவன் அழித்தார்.
சங்கீதம் 105 : 34 (ERVTA)
தேவன் கட்டளையிட்டார், வெட்டுக்கிளிகளும் புல்புழுக்களும் வந்தன. அவை எண்ணமுடியாத அளவு இருந்தன!
சங்கீதம் 105 : 35 (ERVTA)
வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் நாட்டின் எல்லா தாவரங்களையும், வயலின் எல்லா பயிர்களையும் தின்றன.
சங்கீதம் 105 : 36 (ERVTA)
பின்பு தேவன் நாட்டின் முதற்பேறான ஒவ்வொன்றையும் கொன்றார். தேவன் முதலில் பிறந்த மகன்களைக் கொன்றார்.
சங்கீதம் 105 : 37 (ERVTA)
பின்பு தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார். அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துச் சென்றனர். தேவனுடைய ஜனங்கள் எவரும் தடுக்கிவிழவில்லை.
சங்கீதம் 105 : 38 (ERVTA)
தேவனுடைய ஜனங்கள் செல்வதைக் கண்டு எகிப்து மகிழ்ந்தது. ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு அஞ்சினார்கள்.
சங்கீதம் 105 : 39 (ERVTA)
தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார். தமது ஜனங்களுக்கு இரவில் ஒளி தரும்படி ஒரு நெருப்புத்தூணைத் தேவன் பயன்படுத்தினார்.
சங்கீதம் 105 : 40 (ERVTA)
ஜனங்கள் உணவுக்காக வேண்டினார்கள், தேவன் காடைகளைக் கொணர்ந்தார். தேவன் பரலோகத்திலிருந்து மிகுதியான உணவைக் கொடுத்தார்.
சங்கீதம் 105 : 41 (ERVTA)
தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று. பாலைவனத்தில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது.
சங்கீதம் 105 : 42 (ERVTA)
தேவன் அவரது பரிசுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார். தேவன் அவரது தாசனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
சங்கீதம் 105 : 43 (ERVTA)
தேவன் அவரது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வரவழைத்தார். மகிழ்ச்சியான பாடல்களைப் பாடிக்கொண்டு ஜனங்கள் களிப்போடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டு வந்தார்கள்!
சங்கீதம் 105 : 44 (ERVTA)
பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார். பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர்.
சங்கீதம் 105 : 45 (ERVTA)
ஏன் தேவன் இதைச் செய்தார்? அப்போதுதான் அவரது ஜனங்கள் அவரளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய முடியும். அவர்கள் கவனமாக அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும். கர்த்தரைத் துதியுங்கள்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45