சங்கீதம் 103 : 1 (ERVTA)
தாவீதின் ஒரு பாடல் என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
சங்கீதம் 103 : 2 (ERVTA)
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
சங்கீதம் 103 : 3 (ERVTA)
நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார். அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
சங்கீதம் 103 : 4 (ERVTA)
தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார். அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.
சங்கீதம் 103 : 5 (ERVTA)
தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார். அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.
சங்கீதம் 103 : 6 (ERVTA)
கர்த்தர் நியாயமானவர். பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.
சங்கீதம் 103 : 7 (ERVTA)
தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார். அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.
சங்கீதம் 103 : 8 (ERVTA)
கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர். தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
சங்கீதம் 103 : 9 (ERVTA)
கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை. கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.
சங்கீதம் 103 : 10 (ERVTA)
நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம், ஆனால் நமக்குரிய தண்டனையைத் தேவன் வழங்கவில்லை.
சங்கீதம் 103 : 11 (ERVTA)
வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ, அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.
சங்கீதம் 103 : 12 (ERVTA)
மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
சங்கீதம் 103 : 13 (ERVTA)
தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார்.
சங்கீதம் 103 : 14 (ERVTA)
தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதையும் தேவன் அறிகிறார்.
சங்கீதம் 103 : 15 (ERVTA)
நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார். நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார்.
சங்கீதம் 103 : 16 (ERVTA)
நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார். அம்மலர் சீக்கிரம் மலர்கிறது. வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது. பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது.
சங்கீதம் 103 : 17 (ERVTA)
ஆனால் தேவன் எப்போதும் தம்மைப் பின் பற்றுவோரை நேசிக்கிறார். என்றென்றைக்கும் எப்போதும் அவர் தம்மைப் பின்பற்றுவோரை நேசிப்பார். தேவன் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நல்லவர்.
சங்கீதம் 103 : 18 (ERVTA)
அவரது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர். அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
சங்கீதம் 103 : 19 (ERVTA)
பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது. அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார்.
சங்கீதம் 103 : 20 (ERVTA)
தேவதூதர்களே, கர்த்தரைத் துதியுங்கள்! தேவ தூதர்களாகிய நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற வல்லமை வாய்ந்த வீரர்களாவீர்கள். நீங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியங்கள்.
சங்கீதம் 103 : 21 (ERVTA)
அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள். நீங்கள் அவரது பணியாட்கள். தேவன் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்யுங்கள்.
சங்கீதம் 103 : 22 (ERVTA)
எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர். எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார். அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும். என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22