சங்கீதம் 100 : 1 (ERVTA)
நன்றி கூறும் பாடல் பூமியே, கர்த்தரைப் பாடு.
சங்கீதம் 100 : 2 (ERVTA)
கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்! மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
சங்கீதம் 100 : 3 (ERVTA)
கர்த்தரே தேவனென்று அறியுங்கள். அவரே நம்மை உண்டாக்கினார். நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
சங்கீதம் 100 : 4 (ERVTA)
நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள். துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள். அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
சங்கீதம் 100 : 5 (ERVTA)
கர்த்தர் நல்லவர். அவர் அன்பு என்றென்றும் உள்ளது. என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.

1 2 3 4 5