சங்கீதம் 1 : 1 (ERVTA)
புத்தகம் 1 (சங்கீதம் 1-41) சங்கீதம் தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும், தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான்.
சங்கீதம் 1 : 2 (ERVTA)
ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான். அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான்.
சங்கீதம் 1 : 3 (ERVTA)
அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான். தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான். உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான். அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான்.
சங்கீதம் 1 : 4 (ERVTA)
ஆனால் தீயோர் அப்படியிரார்கள். அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள்.
சங்கீதம் 1 : 5 (ERVTA)
ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள். அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
சங்கீதம் 1 : 6 (ERVTA)
ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார். தீயோரை அவர் அழிக்கிறார்.

1 2 3 4 5 6