நீதிமொழிகள் 31 : 1 (ERVTA)
லேமுவேல் என்னும் அரசனது ஞானமொழிகள் இவை, லேமுவேல் அரசன் சொன்ன ஞான மொழிகள். இவற்றை அவனது தாய் அவனுக்குக் கற்பித்தாள்.
நீதிமொழிகள் 31 : 2 (ERVTA)
ஜெபத்தின் மூலம் பெற்ற நீயே என் அன்பிற்குரிய மகன்.
நீதிமொழிகள் 31 : 3 (ERVTA)
உனது வல்லமையைப் பெண்களிடம் இழக்காதே. பெண்கள் அரசர்களை அழித்திருக்கிறார்கள். எனவே உன்னை அவர்களிடத்தில் தராதே.
நீதிமொழிகள் 31 : 4 (ERVTA)
லேவமுவேலே, அரசர்கள் மதுவைக் குடிப்பது அறிவுள்ள செயல் அல்ல. ஆளுபவர்கள் மதுவை விரும்புவது அறிவுடையது அல்ல.
நீதிமொழிகள் 31 : 5 (ERVTA)
அவர்கள் மிகுதியாகக் குடித்துவிட்டு சட்டங்களை மறந்துவிடுவார்கள். பின் அவர்கள் ஏழை ஜனங்களின் உரிமைகளை எடுத்துவிடக்கூடும்.
நீதிமொழிகள் 31 : 6 (ERVTA)
ஏழை ஜனங்களுக்கு மதுவைக் கொடு. திராட்சைரசத்தை துன்பப்படுகிற ஜனங்களுக்குக் கொடு.
நீதிமொழிகள் 31 : 7 (ERVTA)
பிறகு அவர்கள் அதனைக் குடித்துவிட்டு தாம் ஏழை என்பதை மறக்கட்டும். அவர்கள் குடித்துவிட்டு தம் எல்லா துன்பங்களையும் மறக்கட்டும்.
நீதிமொழிகள் 31 : 8 (ERVTA)
ஒருவன் தனக்குத்தானே உதவிக்கொள்ள முடியாவிட்டால், நீ அவனுக்கு உதவவேண்டும். எவனால் பேசமுடியாதோ, அவனுக்காக பேசு. துன்பப்படுகிற அனைத்து ஜனங்களுக்கும் நீ உதவ வேண்டும்.
நீதிமொழிகள் 31 : 9 (ERVTA)
சரியென்று தெரிந்தவற்றின் பக்கம் நில். நேர்மையாக நியாயம்தீர்த்துவிடு. ஏழை ஜனங்களின் உரிமையைக் காப்பாற்று. தேவையிலிருக்கும் ஜனங்களுக்கு உதவு.
நீதிமொழிகள் 31 : 10 (ERVTA)
பரிபூரணமுள்ள மனைவி * வசனங்கள் 10-31 எபிரெய மொழியில், இப்பாடலின் ஒவ்வொரு வசனமும் அகர வரிசையின் அடுத்தடுத்த எழுத்தில் தொடங்கும். இந்தப் பாடல் ஒரு பெண்ணின் அனைத்து நல்ல குணங்களையும் காட்டுகின்றது. “பரிபூரணமுள்ள மனைவியைக்” கண்டுபிடிப்பது கடினம். ஆனால் அவள் நகைகளைவிட அதிக விலைமதிப்புடையவள்.
நீதிமொழிகள் 31 : 11 (ERVTA)
அவள் கணவன் அவளைச் சார்ந்திருப்பான். அவன் ஒருபோதும் ஏழையாகமாட்டான்.
நீதிமொழிகள் 31 : 12 (ERVTA)
தன் வாழ்வு முழுவதும் அவள் தன் கணவனுக்கு நன்மையே செய்வாள். அவனுக்கு ஒருபோதும் துன்பம் உண்டாக்கமாட்டாள்.
நீதிமொழிகள் 31 : 13 (ERVTA)
அவள் எப்பொழுதும் ஆட்டு மயிரையும் சணல்நூலையும் சேகரிப்பாள். தனது கைகளினாலேயே ஆடைகளை மகிழ்ச்சியோடு தயாரிப்பாள்.
நீதிமொழிகள் 31 : 14 (ERVTA)
அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப் போன்றவள். எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள்.
நீதிமொழிகள் 31 : 15 (ERVTA)
அதிகாலையில் எழும்பி தன் குடும்பத்துக்கு உணவு சமைப்பாள். வேலைக்காரர்களுக்கு அவர்களுடைய பங்கைக் கொடுப்பாள்.
நீதிமொழிகள் 31 : 16 (ERVTA)
அவள் நிலத்தைப் பார்த்து வாங்குவாள். அவள் பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்து திராட்சைக் கொடிகளை நடுவாள்.
நீதிமொழிகள் 31 : 17 (ERVTA)
அவள் கடினமாக உழைப்பாள். அவள் தனது எல்லா வேலைகளையும் செய்யும் பலம் கொண்டவள்.
நீதிமொழிகள் 31 : 18 (ERVTA)
தன் உழைப்பால் உருவான பொருட்களை விற்கும்போது எப்பொழுதும் அவள் லாபத்தை அடைவாள். அவள் இரவில் அதிக நேரம் வேலைச் செய்த பிறகே ஓய்வெடுக்கிறாள்.
நீதிமொழிகள் 31 : 19 (ERVTA)
அவள் தனக்குத் தேவையான நூலைத் தானே தயாரிக்கிறாள். தனக்குத் தேவையான ஆடைகளைத் தானே நெய்கிறாள்.
நீதிமொழிகள் 31 : 20 (ERVTA)
ஏழைகளுக்கு எப்போதும் அள்ளித் தருகிறாள். தேவையானவர்களுக்கு உதவி செய்கிறாள்.
நீதிமொழிகள் 31 : 21 (ERVTA)
பனிக் காலத்தில் அவள் தன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டாள். ஏனென்றால் அனைவருக்கும் நல்ல வெப்பமான ஆடைகளை அவள் தந்துள்ளாள்.
நீதிமொழிகள் 31 : 22 (ERVTA)
அவள் கம்பளங்களைச் செய்து படுக்கையில் விரிக்கிறாள். மிக அழகான புடவையை அணிகிறாள்.
நீதிமொழிகள் 31 : 23 (ERVTA)
ஜனங்கள் அவளது கணவனை மதிக்கின்றனர். அவன் அந்நாட்டுத் தலைவர்களுள் ஒருவன்.
நீதிமொழிகள் 31 : 24 (ERVTA)
அவள் ஒரு நல்ல வியாபாரி. அவள் ஆடைகளையும் கச்சைகளையும் தயாரிக்கிறாள். இவற்றை வியாபாரிகளிடம் விற்கிறாள்.
நீதிமொழிகள் 31 : 25 (ERVTA)
அவள் போற்றப்படுவாள். அவள் போற்றப்படுவாள் அல்லது “அவள் பலமுள்ள வளாக இருக்கிறாள்.” ஜனங்கள் அவளை மதிக்கின்றனர். அவள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குகிறாள்.
நீதிமொழிகள் 31 : 26 (ERVTA)
அவள் ஞானத்தோடு பேசுகிறாள். ஜனங்கள் அன்போடும் கருணையோடும் இருக்கவேண்டும் என்று அவள் போதிக்கின்றாள்.
நீதிமொழிகள் 31 : 27 (ERVTA)
அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை. தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறாள்.
நீதிமொழிகள் 31 : 28 (ERVTA)
அவளது குழந்தைகள் அவளைப் பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள். அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான்.
நீதிமொழிகள் 31 : 29 (ERVTA)
“எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நீதான் சிறந்தவள்” என்கிறான்.
நீதிமொழிகள் 31 : 30 (ERVTA)
ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம். ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே பாராட்டுக்குரியவள்.
நீதிமொழிகள் 31 : 31 (ERVTA)
அவளுக்குப் பொருத்தமான பரிசைக் கொடு. எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31