நீதிமொழிகள் 27 : 1 (ERVTA)
எதிர்காலத்தில் நடப்பதைப்பற்றிப் பெருமையாகப் பேசாதே. நாளை நடப்பதைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.
நீதிமொழிகள் 27 : 2 (ERVTA)
உன்னைப்பற்றி நீயே புகழ்ந்துகொள்ளாதே. மற்றவர்கள் உன்னைப் புகழும்படி செய்.
நீதிமொழிகள் 27 : 3 (ERVTA)
கல் கனமானது. மணலும் சுமப்பதற்கு கனமானது. ஆனால் மிகுந்த கோபமுடைய முட்டாளால் ஏற்படும் துன்பம் இவ்விரண்டையும்விட சுமப்பதற்கு அதிகக் கனமானது.
நீதிமொழிகள் 27 : 4 (ERVTA)
கோபம் கொடுமையும் பயங்கரமுமானது. இது அழிவுக்குக் காரணமாகும். ஆனால் பொறாமை இதைவிட மோசமானது.
நீதிமொழிகள் 27 : 5 (ERVTA)
வெளிப்படையான விமரிசனமானது மறைத்து வைக்கப்படும் அன்பைவிடச் சிறந்தது.
நீதிமொழிகள் 27 : 6 (ERVTA)
உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அதை விரும்பிச் செய்யவில்லை. எதிரியோ வித்தியாசமானவன். அவன் உன்னிடம் கருணையோடு இருந்தாலும் காயப்படுத்தவே விரும்புவான்.
நீதிமொழிகள் 27 : 7 (ERVTA)
உனக்குப் பசி இல்லாதபோது, நீ தேனைக்கூட பருக முடியாது. ஆனால் நீ பசியோடு இருந்தால் சுவையற்றவற்றையும் கூட தின்றுவிடுவாய்.
நீதிமொழிகள் 27 : 8 (ERVTA)
ஒருவன் வீட்டைவிட்டு விலகியிருப்பது கூட்டைவிட்டுப் பிரிந்து இருக்கிற பறவையைப் போன்றதாகும்.
நீதிமொழிகள் 27 : 9 (ERVTA)
மணப்பொருட்களும் இனிய வாசனைப் பொருட்களும் உன்னை மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால் துன்பங்களோ உனது அமைதியான மனதை அழித்துவிடும்.
நீதிமொழிகள் 27 : 10 (ERVTA)
நீ உனது நண்பர்களையும் உனது தந்தையின் நண்பர்களையும் மறந்துவிடாதே. உனக்குத் துன்பம் நேரும்போது, உதவிக்காகத் தூரத்தில் உள்ள உன் சகோதரனை நாடிப்போகாதே. தூரத்தில் உள்ள உன் சகோதரனைத் தேடிப்போவதைவிட அருகில் உள்ளவனிடம் சென்று உதவி கேட்பது நல்லது.
நீதிமொழிகள் 27 : 11 (ERVTA)
என் மகனே, ஞானியாக இரு. அது என்னை மகிழ்ச்சிப்படுத்தும். அப்போது என்னை விமர்சிக்கிற எவனுக்கும் நான் பதில் சொல்ல இயலும்.
நீதிமொழிகள் 27 : 12 (ERVTA)
துன்பம் வருவதை உணர்ந்து ஞானிகள் விலகிவிடுவார்கள். அறிவற்றவர்களோ நேராகப் போய் துன்பத்தில் அகப்பட்டுக்கொண்டு அதனால் பாடுபடுகிறார்கள்.
நீதிமொழிகள் 27 : 13 (ERVTA)
அடுத்தவன் பட்ட கடனுக்கு நீ பொறுப்பேற்றால் உனது சட்டையையும் நீ இழந்துவிடுவாய்.
நீதிமொழிகள் 27 : 14 (ERVTA)
நீ உனது அயலானை உரத்த குரலில், “காலை வணக்கம்” கூறி எழுப்பாதே. இது அவனை எரிச்சல்படுத்தும். அவன் இதனை வாழ்த்தாக எடுத்துக்கொள்ளாமல் சாபமாக எடுத்துக்கொள்வான்.
நீதிமொழிகள் 27 : 15 (ERVTA)
எப்போதும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை விரும்பும் மனைவி அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதைப் போன்றவள்.
நீதிமொழிகள் 27 : 16 (ERVTA)
அவனைத் தடுத்துநிறுத்த முயல்வது காற்றைத் தடுப்பது போன்றதாகும். அது கையில் எண்ணெயைப் பிடிக்க முயற்சி செய்வது போன்றதாகும்.
நீதிமொழிகள் 27 : 17 (ERVTA)
இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடையமுடியும்.
நீதிமொழிகள் 27 : 18 (ERVTA)
அத்திமரத்தை வளர்ப்பவன் அதன் பழத்தை உண்பான். இதுபோலவே, தன் எஜமானனைக் கவனிக்கிறவனும் அதனால் பல்வேறு பயன்களைப் பெறுவான். எஜமானனும் அவனைக் கவனித்துக் கொள்வான்.
நீதிமொழிகள் 27 : 19 (ERVTA)
ஒருவன் தண்ணீருக்குள் பார்க்கும்போது, தன் முகத்தையே பார்த்துக்கொள்ள முடியும். இதைப் போன்றே, ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவனது இதயமே காட்டிவிடும்.
நீதிமொழிகள் 27 : 20 (ERVTA)
ஜனங்கள் ஏறக்குறைய சவக்குழியைப் போன்றவர்கள். சாவுக்கும் அழிவுக்கும் இடமாக விளங்கும் சவக்குழியைப் போன்ற ஜனங்கள் எப்போதும் மேலும் மேலும் ஆசையுடையவர்களாக இருப்பார்கள்.
நீதிமொழிகள் 27 : 21 (ERVTA)
தங்கத்தையும் வெள்ளியையும் சுத்தப்படுத்த ஜனங்கள் நெருப்பைப் பயன்படுத்துகின்றனர். இது போலவே மனிதனும் ஜனங்கள் தனக்கு அளிக்கும் புகழ்ச்சியால் சோதிக்கப்படுகிறான்.
நீதிமொழிகள் 27 : 22 (ERVTA)
ஒரு முட்டாளை நீ நசுக்கி அழித்துவிட முடியும். ஆனால் உன்னால் அவனது முட்டாள்தனத்தை அவனிடமிருந்து பலவந்தமாக அகற்ற முடியாது.
நீதிமொழிகள் 27 : 23 (ERVTA)
உனது ஆடுகளையும் மந்தையையும் கவனமாகப் பார்த்துக்கொள். உன்னால் இயன்றவரை அவற்றைக் கவனமாக காத்துக்கொள்.
நீதிமொழிகள் 27 : 24 (ERVTA)
செல்வம் எப்பொழுதும் நிலைப்பதில்லை. தேசங்களும் எப்பொழுதும் நிலைக்காது.
நீதிமொழிகள் 27 : 25 (ERVTA)
புல்லை வெட்டினால் புதிய புற்கள் முளைக்கும். எனவே மலை மீது வளரும் புல்லை வெட்டு.
நீதிமொழிகள் 27 : 26 (ERVTA)
உனது ஆட்டுக்குட்டி மீதுள்ள மயிரை வெட்டி கம்பளிச் செய். உனது ஆடுகளை விற்று நிலத்தை வாங்கு.
நீதிமொழிகள் 27 : 27 (ERVTA)
உனக்கும் உனது குடும்பத்திற்கும் தேவையான பால் ஏராளமாக இருக்கும். உனது வேலைக்காரிகளின் உடல் நலத்திற்கும் அது உதவும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27