நீதிமொழிகள் 23 : 1 (ERVTA)
— 6 — ஒரு முக்கியமான மனிதனோடு அமர்ந்து உண்ணும்போது நீ யாருடன் இருக்கிறாய் என்பதை எண்ணிப்பார்.
நீதிமொழிகள் 23 : 2 (ERVTA)
எவ்வளவுதான் பசியோடு இருந்தாலும் அளவுக்கு மீறி உண்ணாதே.
நீதிமொழிகள் 23 : 3 (ERVTA)
அவன் கொடுக்கும் உயர்ந்த உணவை அதிகமாக உண்ணாதே. இது ஒரு தந்திரமாக இருக்கலாம்.
நீதிமொழிகள் 23 : 4 (ERVTA)
— 7 — செல்வந்தனாக முயன்று உனது உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளாதே. நீ அறிவுள்ளவனாக இருந்தால் பொறுமையாக இரு.
நீதிமொழிகள் 23 : 5 (ERVTA)
ஒரு பறவை சிறகு முளைத்துப் பறந்துசென்றுவிடுவதைப்போல செல்வம் மிக வேகமாகக் கரைந்துவிடும்.
நீதிமொழிகள் 23 : 6 (ERVTA)
— 8 — கருமியோடு அமர்ந்து உணவு உண்ணாதே. அவன் விரும்பும் சிறப்பு உணவிலிருந்து தூர விலகியிரு.
நீதிமொழிகள் 23 : 7 (ERVTA)
எப்பொழுதும் அவன் அதன் விலையையே நினைத்துக்கொண்டிருக்கும் தன்மையுடையவன். அவன் உன்னிடம், “உண்ணு, பருகு” என்று கூறலாம். ஆனால் அவனது விருப்பம் உண்மையானது அல்ல.
நீதிமொழிகள் 23 : 8 (ERVTA)
அவனது உணவை உண்டால், நீ நோயாளி ஆவாய். உனது வார்த்தைகளின் புகழுரையும், நன்றிகளும் வீணாகப் போய்விடும்.
நீதிமொழிகள் 23 : 9 (ERVTA)
— 9 — முட்டாளுக்குக் கற்றுக்கொடுக்க முயலாதே. அவன் உனது புத்திமதி வார்த்தைகளைக் கேலிச் செய்வான்.
நீதிமொழிகள் 23 : 10 (ERVTA)
— 10 — பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே.
நீதிமொழிகள் 23 : 11 (ERVTA)
கர்த்தர் உனக்கு எதிராக இருப்பார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். அந்த அநாதைகளை அவரே பாதுகாக்கிறார்.
நீதிமொழிகள் 23 : 12 (ERVTA)
— 11 — உனது போதகரைக் கவனி, உன்னால் முடிந்தவரை கற்றுக்கொள்.
நீதிமொழிகள் 23 : 13 (ERVTA)
— 12 — தேவைப்படும்பொழுது குழந்தைக்குத் தண்டனை கொடு. அவனைப் பிரம்பால் அடித்தால் அது அவனை அழிக்காது.
நீதிமொழிகள் 23 : 14 (ERVTA)
அவனைப் பிரம்பால் அடிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையைக் காப்பாற்றிவிடுகிறாய்.
நீதிமொழிகள் 23 : 15 (ERVTA)
— 13 — என் மகனே! நீ அறிவாளியானால், நான் மிகவும் மகிழ்வேன்.
நீதிமொழிகள் 23 : 16 (ERVTA)
நீ சரியானவற்றைப் பேசுவதை நான்கேட்டால் என் மனதில் மிகவும் மகிழ்வேன்.
நீதிமொழிகள் 23 : 17 (ERVTA)
— 14 — தீயவர்களைப் பார்த்து பொறாமைப்படாதே. ஆனால் எப்பொழுதும் உறுதியாக கர்த்தருக்கு மரியாதை செலுத்து.
நீதிமொழிகள் 23 : 18 (ERVTA)
எப்பொழுதும் நம்பிக்கைக்கு இடம் உண்டு. உனது நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23 : 19 (ERVTA)
— 15 — என் மகனே கவனி. அறிவுள்ளவனாக இரு. சரியான வழியில் வாழ்வதில் எச்சரிக்கையாக இரு.
நீதிமொழிகள் 23 : 20 (ERVTA)
மிகுதியான இறைச்சியை உண்பவர்களோடும் மிகுதியான மதுவைக் குடிப்பவர்களோடும் நட்பாக இருக்காதே!
நீதிமொழிகள் 23 : 21 (ERVTA)
மிகுதியாக உண்பவனும் குடிப்பவனும் ஏழையாகிவிடுகிறான். அவர்கள் செய்பவையெல்லாம் உண்பது, குடிப்பது மற்றும் தூங்குவது மட்டுமே. விரைவில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போகிறார்கள்.
நீதிமொழிகள் 23 : 22 (ERVTA)
— 16 — உன் தந்தை சொல்வதைக் கவனமாகக் கேள். உன் தந்தை இல்லாவிட்டால் நீ பிறந்திருக்க முடியாது. எவ்வளவுதான் முதியவளாக இருந்தாலும் உன் தாய்க்கு மரியாதை கொடு.
நீதிமொழிகள் 23 : 23 (ERVTA)
உண்மை, ஞானம், கல்வி, புரிந்துகொள்ளுதல் ஆகியவை விலை மதிப்புள்ளவை. இவைகளை விற்கமுடியாது. ஏனெனில் இவை மிகவும் விலையுயர்ந்தவை.
நீதிமொழிகள் 23 : 24 (ERVTA)
நல்லவனின் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒருவன் அறிவுள்ள பிள்ளையைப் பெற்றால் அப்பிள்ளை மகிழ்ச்சியைத் தருகிறான்.
நீதிமொழிகள் 23 : 25 (ERVTA)
எனவே உன் தந்தையையும் தாயையும் உன்னோடு மகிழ்ச்சியாக இருக்கும்படிசெய். உன் தாயை ஆனந்தமாக வைத்திரு.
நீதிமொழிகள் 23 : 26 (ERVTA)
— 17 — என் மகனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். என் வாழ்க்கை உனக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.
நீதிமொழிகள் 23 : 27 (ERVTA)
வேசிகளும் மோசமான பெண்களும் வலைகளைப் போன்றவர்கள். அவர்கள் உன்னால் வெளியேற முடியாத அளவுக்கு ஆழமான கிணற்றைப் போன்றவர்கள்.
நீதிமொழிகள் 23 : 28 (ERVTA)
மோசமான பெண் திருடனைப்போன்று உனக்காகக் காத்திருப்பாள். பலரை அவள் பாவிகளாக்குகிறாள்.
நீதிமொழிகள் 23 : 29 (ERVTA)
— 18 — (29-30)நிறைய மது குடிப்பவர்களுக்கு அநேகத் தீங்கு உண்டாகிறது. தங்களுக்குள் அடித்துக் கொண்டு சண்டைகளும் விவாதங்களும் செய்வார்கள். அவர்களின் கண்கள் சிவக்கின்றன. தங்களுக்குள் சண்டையிட்டுப் புலம்பி தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களால் இத்துன்பங்களைத் தவிர்த்திருக்க முடியும்.
நீதிமொழிகள் 23 : 30 (ERVTA)
நீதிமொழிகள் 23 : 31 (ERVTA)
மதுவைப் பற்றி எச்சரிக்கையாக இரு. அது அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அது கிண்ணத்திற்குள் பளபளப்பாக உள்ளது. குடிக்கும்போது அது மென்மையாகவும் மெதுவாகவும் வயிற்றில் இறங்குகிறது.
நீதிமொழிகள் 23 : 32 (ERVTA)
முடிவில் அது ஒரு பாம்பைப்போன்று கடித்துவிடுகிறது.
நீதிமொழிகள் 23 : 33 (ERVTA)
மதுவானது உன்னை விநோதமானவற்றைப் பார்க்கவைக்கும். உன் மனம் குழப்பமடையும்.
நீதிமொழிகள் 23 : 34 (ERVTA)
நீ படுத்திருக்கும்போது, நீ கடலுக்குமேல் படுத்திருப்பதுபோல தோன்றும். நீ கப்பலில் படுத்திருப்பதுபோல் தோன்றும்.
நீதிமொழிகள் 23 : 35 (ERVTA)
“அவர்கள் என்னை அடித்தார்கள். ஆனால் அதை நான் உணரவில்லை. அவர்கள் என்னைத் தாக்கினார்கள். அது எனக்கு நினைவில்லை. இப்போது என்னால் எழ முடியவில்லை. எனக்கு மேலும் குடிக்க வேண்டும்போல உள்ளது” என்று நீ சொல்வாய்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35