நீதிமொழிகள் 10 : 1 (ERVTA)
{சாலொமோனின் நீதிமொழிகள்} [PS] இவை அனைத்தும் சாலொமோனின் நீதி மொழிகள் (ஞானவார்த்தைகள்): [PE][PS] ஒரு ஞானமுள்ள மகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் ஒரு முட்டாள் மகனோ தன் தாயைத் துன்பப்படுத்துகிறான். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 2 (ERVTA)
ஒருவன் தீயச் செயல்கள் மூலம் பொருள் சம்பாதித்திருந்தால் அவை பயனற்றவை. ஆனால் நல்ல செயல்களைச் செய்வது உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 3 (ERVTA)
கர்த்தர் நல்லவர்களைப் பற்றியே அக்கறைகொள்கிறார். அவர் அவர்களுக்குத் தேவையான உணவைக் கொடுக்கிறார். தீய ஜனங்கள் விரும்புகிறவற்றை கர்த்தர் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறார். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 4 (ERVTA)
ஒரு சோம்பேறி ஏழ்மையாக இருப்பான். ஆனால் கடினமாக உழைக்கிற ஒருவன் செல்வந்தனாகிறான். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 5 (ERVTA)
சுறுசுறுப்பானவன் சரியான நேரத்தில் அறுவடை செய்துகொள்கிறான். ஆனால் அறுவடைக் காலத்தில் தூங்கிவிட்டு, பயிர்களைச் சேகரிக்காமல் இருப்பவன், வெட்கத்திற்குரியவனாவான். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 6 (ERVTA)
நல்லவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜனங்கள் தேவனை வேண்டுகின்றனர். தீயவர்களும் நல்லவற்றைப் பற்றிக் கூறலாம். ஆனால் அது, அவர்களின் கெட்ட செயல்களுக்கான திட்டங்களை மறைப்பதாக இருக்கும். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 7 (ERVTA)
நல்லவர்கள் நல்ல நினைவுகளை விட்டுவிட்டுச் செல்கின்றனர். தீயவர்கள் விரைவில் மறக்கப்படுகின்றனர். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 8 (ERVTA)
யாராவது நல்லவற்றைச் செய்யவேண்டும் எனக்கூறினால் அறிவாளி அதற்குக் கீழ்ப்படிகிறான். ஆனால் அறிவில்லாதவனோ வீண்விவாதம் செய்து தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொள்கிறான். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 9 (ERVTA)
ஒரு நல்ல நேர்மையான மனிதன் பாதுகாப்பாக இருக்கிறான். ஆனால் கோணல் வழியில் செல்பவன் பிடிபடுவான். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 10 (ERVTA)
உண்மையை மறைக்கிறவன் துன்பங்களுக்குக் காரணமாகிறான். வெளிப்படையாகப் பேசுபவன் சமாதானத்தை உருவாக்குகிறான். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 11 (ERVTA)
நல்லவனின் வார்த்தைகள் வாழ்வைச் சிறப்புள்ளதாக்கும். ஆனால் தீயவனின் வார்த்தைகள் அவனுக்குள்ளிருக்கும் தீயவற்றையே வெளிக்காட்டும். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 12 (ERVTA)
வெறுப்பு விவாதங்களுக்குக் காரணமாகும். ஆனால் அன்பானது ஜனங்கள் செய்கிற தவறுகளை மன்னித்து விடும். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 13 (ERVTA)
அறிவுள்ளவர்கள் கேட்கத்தக்கவற்றைப் பேசுகிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ பாடம் கற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே தண்டிக்கப்படவேண்டும். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 14 (ERVTA)
அறிவுள்ளவர்கள் அமைதியாக இருந்து புதியவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்கள் வீணாகப் பேசி தமக்குத்தாமே துன்பத்தை வரவ ழைத்துக்கொள்கிறார்கள். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 15 (ERVTA)
செல்வமானது செல்வந்தர்களைக் காப்பாற்றுகிறது. வறுமையோ ஏழைகளை அழிக்கிறது. [PE][PS]
நீதிமொழிகள் 10 : 16 (ERVTA)
ஒருவன் நன்மை செய்தால் அதற்காகப் பாராட்டப்படுவான். அவனுக்கு வாழ்க்கை கொடுக்கப்படுகிறது. தீமையோ தண்டனையை மட்டுமே பெற்றுத் தருகிறது. [PE][PS]
நீதிமொழிகள் 10 : 17 (ERVTA)
ஒருவன் தனது தண்டனைகளிலிருந்து கற்றுக்கொண்டால் அது மற்றவர்களின் வாழ்க்கைக்கு உதவும். ஆனால் கற்றுக் கொள்ள மறுக்கிறவன் ஜனங்களைத் தவறான வழியிலேயே அழைத்துச் செல்வான். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 18 (ERVTA)
வெறுப்பை மறைக்கிறவனால் பொய் சொல்ல முடியும். ஆனால் ஒரு முட்டாளால் வதந்தியை மட்டுமே பரப்ப முடியும். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 19 (ERVTA)
அதிகமாகப் பேசுகிற ஒருவன் துன்பத்திற்கு ஆளாகிறான். ஞானம் உள்ளவன் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 20 (ERVTA)
நல்லவனின் வார்த்தைகள் சுத்தமான வெள்ளியைப் போன்றவை. தீயவனின் எண்ணங்களோ பயனற்றவை. [PE][PS]
நீதிமொழிகள் 10 : 21 (ERVTA)
நல்லவனின் வார்த்தைகள் பலருக்கு உதவியாக இருக்கும். ஆனால் முட்டாள்களோ அறிவீனத்தால் அழிந்துபோவார்கள். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 22 (ERVTA)
கர்த்தருடைய ஆசீர்வாதம் உனக்கு உண்மையான செல்வத்தைக் கொண்டுவரும். அது துன்பத்தைக் கொண்டு வராது. [PE][PS]
நீதிமொழிகள் 10 : 23 (ERVTA)
அறிவில்லாதவர்களோ தவறு செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். அறிவுள்ளவனோ ஞானத்தால் மகிழ்ச்சி அடைகிறான். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 24 (ERVTA)
தீயவர்கள் தாங்கள் அஞ்சுகிறவற்றாலேயே தோற்கடிக்கப்படுவார்கள். ஆனால் நல்லவர்களோ தாங்கள் விரும்புவதைப் பெறுவார்கள். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 25 (ERVTA)
தங்களுக்கு நேரும் பிரச்சனைகளாலேயே தீயவர்கள் அழிவார்கள். ஆனால் நல்லவர்களோ எல்லாக் காலங்களிலும் உறுதியாக நிற்பார்கள். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 26 (ERVTA)
ஒரு சோம்பேறியை உனக்காக எதுவும் செய்ய அனுமதிக்காதே. ஏனென்றால் அவர்கள் பற்களுக்குக் காடியைப் போன்றும் கண்களுக்குப் புகையைப் போன்றும் இருப்பார்கள். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 27 (ERVTA)
நீ கர்த்தரை மதித்தால் நீண்டகாலம் வாழலாம். ஆனால் தீயவர்களோ தம் வாழ் நாளில் பல ஆண்டுகளை இழப்பார்கள். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 28 (ERVTA)
நல்லவர்கள் நம்புகிறவை மகிழ்ச்சியைக் கொண்டுவரும். கெட்டவர்கள் நம்புகிறவையோ அழிவைக் கொண்டுவரும். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 29 (ERVTA)
கர்த்தர் நல்லவர்களைப் பாதுகாக்கிறார். ஆனால் தவறு செய்பவர்களையோ கர்த்தர் அழிக்கிறார். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 30 (ERVTA)
நல்ல மனிதர்கள் எப்பொழுதும் பாதுகாக்கப்படுவார்கள். தீயவர்கள் தேசத்தைவிட்டுப் போகக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆண்டவர் நல்ல ஜனங்களை பாதுகாப்பார். அவர் தீய செயல்களைச் செய்யும் ஜனங்களை அழிப்பார். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 31 (ERVTA)
நல்லவர்கள் ஞானமுள்ளவற்றைப் பேசுவார்கள். தொல்லை உண்டாக்கும் காரியங்களைப் பேசுபவர்களின் வார்த்தைகளை ஜனங்கள் கேட்காமல் நிறுத்திவிடுவார்கள். [PE][PS]
நீதிமொழிகள் 10 : 32 (ERVTA)
நல்லவர்கள் சரியானவற்றைச் சொல்ல அறிந்துள்ளனர். ஆனால் கெட்டவர்களோ தொல்லை தருவதையே பேசுகின்றனர். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

BG:

Opacity:

Color:


Size:


Font: