எண்ணாகமம் 34 : 1 (ERVTA)
கானான் நாட்டின் எல்லைகள் மோசேயிடம் கர்த்தர் பேசினார். அவர்,
எண்ணாகமம் 34 : 2 (ERVTA)
“இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த கட்டளைகளைக் கூறு: நீங்கள் கானான் நாட்டிற்குபோய்க் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் கானான் நாடு முழுவதையும் பெற்றுக்கொள்வீர்கள்.
எண்ணாகமம் 34 : 3 (ERVTA)
தெற்குப் பக்கம் ஏதோம் அருகிலுள்ள சீன் பாலைவனத்தின் ஒரு பகுதியைப் பெறுவீர்கள். உங்களது தெற்கு எல்லையானது கிழக்கே இருக்கிற சவகடலின் கடைசியில் தொடங்கும்.
எண்ணாகமம் 34 : 4 (ERVTA)
இது ஸ்கார்ப்பியன் கணவாயின் தெற்காகக் கடந்து செல்லும். சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ்பர்னேவுக்கும் பிறகு ஆத்சார் ஆதாருக்கும், பின் அங்கிருந்து அஸ்மோனாவுக்கும் செல்லும்.
எண்ணாகமம் 34 : 5 (ERVTA)
அஸ்மோனிலிருந்து எல்லையானது எகிப்து நதியில் போய், பிறகு அது மத்தியத்தரைக் கடலில் போய் முடியும்.
எண்ணாகமம் 34 : 6 (ERVTA)
மத்தியத்தரைக் கடல் உங்களது மேற்கு எல்லையாக இருக்கும்.
எண்ணாகமம் 34 : 7 (ERVTA)
உங்கள் வடக்கு எல்லையானது மத்தியத்தரைக் கடலில் தொடங்கி, லெபனானில் உள்ள ஓர் மலைக்குச் செல்லும்.
எண்ணாகமம் 34 : 8 (ERVTA)
ஓர் என்னும் மலையிலிருந்து, இது லெபோ ஆமாத்திற்குப் போகும். பிறகு சேதாத்திற்குப் போகும்.
எண்ணாகமம் 34 : 9 (ERVTA)
பின்னர் அவ்வெல்லையானது, சிப்ரோனுக்குப் போய் ஆத்சார் ஏனானிலே முடியும். அதுதான் உங்கள் வடக்கு எல்லையாகும்.
எண்ணாகமம் 34 : 10 (ERVTA)
உங்கள் கிழக்கு எல்லையானது ஏனானிலே தொடங்கி, அது சேப்பாமுக்குப் போகும்,
எண்ணாகமம் 34 : 11 (ERVTA)
சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாவிற்குப் போகும். எல்லையானது தொடர்ந்து கலிலேயா ஏரிக்குத் தொடரும்.
எண்ணாகமம் 34 : 12 (ERVTA)
பிறகு அந்த எல்லையானது யோர்தான் நதிவரைத் தொடரும். அது மரணக் கடலில் போய் முடியும். இவை தான் உங்கள் நாட்டைச் சுற்றியுள்ள எல்லைகள் ஆகும்” என்றார்.
எண்ணாகமம் 34 : 13 (ERVTA)
எனவே, மோசே இந்த கட்டளைகளை இஸ்ரவேல் ஜனங்களிடம் கொடுத்தான். “அதுதான் நீங்கள் பெறப்போகிற நாடு. இதனைச் சீட்டுக்குலுக்கல் மூலமாக 9 கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதி குடும்பத்திற்கும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.
எண்ணாகமம் 34 : 14 (ERVTA)
ரூபன் மற்றும் காத்தின் கோத்திரத்தினரும் மனாசேயின் பாதிக் குடும்பத்தினரும் ஏற்கெனவே தங்கள் நாட்டைப் பெற்றுள்ளனர்.
எண்ணாகமம் 34 : 15 (ERVTA)
அந்த இரண்டரைக் கோத்திரத்தினரும் எரிகோவின் அருகில் யோர்தானுக்குக் கிழக்கே உள்ள நாடுகளைப் பெற்றுள்ளனர்” என்றான்.
எண்ணாகமம் 34 : 16 (ERVTA)
பிறகு கர்த்தர் மோசேயோடு பேசினார்.
எண்ணாகமம் 34 : 17 (ERVTA)
அவர், “நாட்டைப் பங்கு வைக்க ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனான யோசுவாவும்,
எண்ணாகமம் 34 : 18 (ERVTA)
கோத்திரங்களின் தலைவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு தலைவர் இருப்பார். அவர்கள் நாட்டைப் பங்கு போட்டுக் கொடுப்பார்கள்.
எண்ணாகமம் 34 : 19 (ERVTA)
பின் வருபவை அந்த தலைவர்களின் பெயர்களாகும்: யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேபு;
எண்ணாகமம் 34 : 20 (ERVTA)
சிமியோனின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான சாமுவேல்;
எண்ணாகமம் 34 : 21 (ERVTA)
பென்யமீனின் கோத்திரத்திலிருந்து கிஸ்லோனின் மகனான எலிதாது;
எண்ணாகமம் 34 : 22 (ERVTA)
தாணின் கோத்திரத்திலிருந்து யொக்லியின் மகனான புக்கி;
எண்ணாகமம் 34 : 23 (ERVTA)
யோசேப்பின் மகனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து எபோதின் மகனாகிய அன்னியேல்:
எண்ணாகமம் 34 : 24 (ERVTA)
எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து சிப்தானின் மகனாகிய கேமுவேல்;
எண்ணாகமம் 34 : 25 (ERVTA)
செபுலோனின் கோத்திரத்திலிருந்து பர்னாகின் மகனாகிய எலிசாப்பான்;
எண்ணாகமம் 34 : 26 (ERVTA)
இசக்காரின் கோத்திரத்திலிருந்து ஆசானின் மகனாகிய பல்த்தியேல்;
எண்ணாகமம் 34 : 27 (ERVTA)
ஆசேரின் கோத்திரத்திலிருந்து செலோமியின் மகனான அகியூத்;
எண்ணாகமம் 34 : 28 (ERVTA)
நப்தலியின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான பெதாக்கேல்” என்றார்.
எண்ணாகமம் 34 : 29 (ERVTA)
இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் கானான் தேசத்தைப் பங்கிடும்படி கர்த்தர் இவர்களைத் தெரிந்தெடுத்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29