எண்ணாகமம் 26 : 1 (ERVTA)
ஜனங்கள் கணக்கிடப்படுதல் பெருநோய் ஏற்பட்ட பிறகு கர்த்தர் மோசேயிடமும் ஆரோனின் மகனும், ஆசாரியனுமாகிய எலெயாசரிடமும் பேசினார்.
எண்ணாகமம் 26 : 2 (ERVTA)
அவர், “இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிடுங்கள். 20 வயதும் அதற்கு மேலுமுள்ள ஆண்களைக் குடும்ப வாரியாகக் கணக்கிட்டு பட்டியல் செய்யுங்கள். இவர்களே இஸ்ரவேல் படையில் சேர்ந்து பணியாற்றும் தகுதி உடையவர்கள்” என்றார்.
எண்ணாகமம் 26 : 3 (ERVTA)
இந்த நேரத்தில் ஜனங்கள் மோவாபின் யோர்தான் பள்ளத்தாக்குப் பகுதியில் முகாமிட்டிருந்தார்கள். இது, யோர்தான் ஆறு எரிகோவிலிருந்து வந்து கடக்கும் இடமாகும். எனவே மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஜனங்களிடம் இங்கே பேசினர். அவர்கள்,
எண்ணாகமம் 26 : 4 (ERVTA)
“நீங்கள் 20 வயதும் அதற்கு மேற்பட்டுமுள்ள ஆண்களை எண்ணிக் கணக்கிட வேண்டும். கர்த்தர் மோசேயிடம் இந்த ஆணையை அளித்திருக்கிறார்” என்றனர். எகிப்திலிருந்து வெளியேறி வந்த ஜனங்களின் பட்டியல் இதுதான்:
எண்ணாகமம் 26 : 5 (ERVTA)
5 ரூபன் குடும்பத்தில் உள்ளவர்கள் இவர்கள் தான்: (ரூபன் இஸ்ரவேலின் மூத்த மகன்.) அந்தக் குடும்பங்களாவன: ஆனோக்கியர் குடும்பத்துக்குத் தந்தையான ஆனோக், பல்லூவியர் குடும்பத்துக்குத் தந்தையான பல்லூ,
எண்ணாகமம் 26 : 6 (ERVTA)
எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தந்தையான எஸ்ரோன், கர்மீயர் குடும்பத்துக்குத் தந்தையான கர்மீ.
எண்ணாகமம் 26 : 7 (ERVTA)
7 இவர்கள் ரூபனின் குழுவில் உள்ள குடும்பத்தினர். இவர்களில் மொத்தம் 43,730 ஆண்கள் கணக்கிடப்பட்டனர்.
எண்ணாகமம் 26 : 8 (ERVTA)
பல்லூவின் மகன் எலியாப்.
எண்ணாகமம் 26 : 9 (ERVTA)
எலியாப்புக்கு மூன்று மகன்கள். அவர்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் ஆகியோர். இவர்களில் தாத்தான் அபிராம் என்ற இரு தலைவர்களும், மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகத் திரும்பினவர்கள் ஆவார்கள். இவர்கள் கர்த்தருக்கு எதிராகச் செயல்பட்ட கோராகைப் பின்பற்றினார்கள்.
எண்ணாகமம் 26 : 10 (ERVTA)
அப்போது பூமி பிளந்து கோராகையும் அவனைப் பின்பற்றியவர்களையும் விழுங்கிவிட்டது. அதினால் 250 பேர் மரித்துப் போனார்கள்! அது இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் எச்சரிக்கையாய் இருந்தது.
எண்ணாகமம் 26 : 11 (ERVTA)
ஆனால் கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் மரிக்கவில்லை.
எண்ணாகமம் 26 : 12 (ERVTA)
12 சிமியோனின் கோத்திரத்திலும் பல குடும்பங்கள் இருந்தன: நேமுவேல் குடும்பத்தின் தந்தையான நேமுவேல், யாமினியர் குடும்பத்தின் தந்தையான யாமினி, யாகீனியர் குடும்பத்தின் தந்தையான யாகீன்,
எண்ணாகமம் 26 : 13 (ERVTA)
சேராகியர் குடும்பத்தின் தந்தையான சேராகி, சவுலியர் குடும்பத்தின் தந்தையான சவுல்.
எண்ணாகமம் 26 : 14 (ERVTA)
14 இவர்களே சிமியோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 22,200 பேர் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 15 (ERVTA)
15 காத் கோத்திரத்தில் கீழ்க்கண்டவர்கள் இருந்தனர். சிப்போனியர் குடும்பத்தின் தந்தையான சிப்போன், ஆகியரின் குடும்பத்தின் தந்தையான ஆகி, சூனியர் குடும்பத்தின் தந்தையான சூனி,
எண்ணாகமம் 26 : 16 (ERVTA)
ஒஸ்னியர் குடும்பத்தின் தந்தையான ஒஸ்னி, ஏரியர் குடும்பத்தின் தந்தையான ஏரி,
எண்ணாகமம் 26 : 17 (ERVTA)
ஆரோதியர் குடும்பத்தின் தந்தையான ஆரோத், அரேலியர் குடும்பத்தின் தந்தையான அரேலி,
எண்ணாகமம் 26 : 18 (ERVTA)
18 இவர்களே காத்தின் குடும்பத்திலுள்ளவர்கள். இவர்களின் ஆண்கள் மொத்தம் 40,500 பேர் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 19 (ERVTA)
19 (19-20) யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்களின் பெயர்கள்: சேலாவியர் குடும்பத்தின் தந்தையான சேலாவி, பாரேசியர் குடும்பத்தின் தந்தையான பாரேசி, சேராவியர் குடும்பத்தின் தந்தையான சேரா ஆகியோர். (யூதாவின் ஏர், ஓனான் எனும் இரு மகன்களும் கானான் நாட்டில் மரித்துப் போனார்கள்.)
எண்ணாகமம் 26 : 20 (ERVTA)
எண்ணாகமம் 26 : 21 (ERVTA)
21 பாரேசின் மகன்களின் குடும்பத்தில், எஸ்ரோனியர் குடும்பத்தின் தந்தையாக எஸ்ரோனியும், ஆமூலியர் குடும்பத்தின் தந்தையாக ஆமூலும் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 22 (ERVTA)
22 இவர்கள் அனைவரும் யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 76,500 பேர் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 23 (ERVTA)
23 இசக்காரின் கோத்திரத்தில், தோலாவியர் குடும்பத்தின் தந்தையாக தோலாவும் பூவாவியர் குடும்பத்தின் தந்தையாக பூவாவும்.
எண்ணாகமம் 26 : 24 (ERVTA)
யாசூபியர் குடும்பத்தின் தந்தையாக யாசூபும் சிம்ரோனியர் குடும்பத்தின் தந்தையாக சிம்ரோனும் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 25 (ERVTA)
25 இவர்கள் இசக்காரின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 64,300 பேர் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 26 (ERVTA)
26 செபுலோனியர் கோத்திரத்தில், சேரேத்தியர் குடும்பத்தின் தந்தையாக சேரேத்தும், ஏலோனியர் குடும்பத்தின் தந்தையாக ஏலோனும், யாலேயேலியர் குடும்பத்தின் தந்தையாக யாலேயேலும் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 27 (ERVTA)
27 இவர்கள் செபுலோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களின் ஆண்கள் மொத்தம் 60,500 பேர் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 28 (ERVTA)
28 யோசேப்பிற்கு மனாசே, எப்பிராயீம் எனும் இரண்டு மகன்கள் இருந்தனர், இரு வரும் தம் சொந்தக் குடும்பங்களோடு, ஒரு கோத்திரமாக உருவானார்கள்.
எண்ணாகமம் 26 : 29 (ERVTA)
மனாசேயின் குடும்பங்கள் பின்வருமாறு: மாகீர்-மாகீரியர் குடும்பம் (மாகீர் கிலெயாத்தின் தந்தை) கிலெயாத்-கிலெயாத்தின் குடும்பம்.
எண்ணாகமம் 26 : 30 (ERVTA)
30 கிலெயாத்தின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: ஈயேசேர்-ஈயேசேரியரின் குடும்பம். ஏலேக்-ஏலேக்கியரின் குடும்பம்.
எண்ணாகமம் 26 : 31 (ERVTA)
அஸ்ரியேல்-அஸ்ரியேலரின் குடும்பம். சேகேம்-சேகேமியரின் குடும்பம்.
எண்ணாகமம் 26 : 32 (ERVTA)
செமீதா-செமீதாவியரின் குடும்பம். ஏப்பேர்-ஏப்பேரியரின் குடும்பம்.
எண்ணாகமம் 26 : 33 (ERVTA)
ஏப்பேரின் மகன் செலோப்பியாத். ஆனால் அவனுக்கு மகன்கள் இல்லை. மகள்கள் மட்டுமே இருந்தனர். மக்லாள், நோவாள், ஓக்லாள், மில்காள், திர்சாள் என்பவை அவர்களின் பெயர்களாகும்.
எண்ணாகமம் 26 : 34 (ERVTA)
34 இவர்கள் மனாசேயின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 52,700 பேர் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 35 (ERVTA)
35 எப்பிராயீமுடைய கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: சுத்தெலாகி-சுத்தெலாகியரின் குடும்பம், பெகேர்-பெகேரியரின் குடும்பம், தாகான்-தாகானியரின் குடும்பம்,
எண்ணாகமம் 26 : 36 (ERVTA)
ஏரான் சுத்தெலாகியர் குடும்பத்தவன். இவனது குடும்பம் ஏரானியர் குடும்பம் ஆயிற்று.
எண்ணாகமம் 26 : 37 (ERVTA)
37 இவர்கள் எப்பிராயீமுடைய கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 32,500 பேர் இருந்தனர். இந்த ஜனங்கள் அனைவரும் யோசேப்பின் குடும்பத்தில் உள்ளவர்கள்:
எண்ணாகமம் 26 : 38 (ERVTA)
38 பென்யமீனின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: பேலா-பேலாவியரின் குடும்பம், அஸ்பேல்-அஸ்பேலியரின் குடும்பம், அகிராம்-அகிராமியரின் குடும்பம்,
எண்ணாகமம் 26 : 39 (ERVTA)
சுப்பாம்-சுப்பாமியரின் குடும்பம், உப்பாம்-உப்பாமியரின் குடும்பம்,
எண்ணாகமம் 26 : 40 (ERVTA)
போலாவின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: ஆரேது-ஆரேதியரின் குடும்பம், நாகமான்-நாகமானியரின் குடும்பம்,
எண்ணாகமம் 26 : 41 (ERVTA)
41 இவர்கள் அனைவரும் பென்யமீனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 45, 600 பேர் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 42 (ERVTA)
42 தாணின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: சூகாம்-சூகாமியரின் குடும்பம். இது தாணின் கோத்திரத்திலிருந்து வந்த கோத்திரங்களாகும்.
எண்ணாகமம் 26 : 43 (ERVTA)
சூகாமியரின் கோத்திரத்தில் ஏராளமான குடும்பங்கள் இருந்தன. இவர்களில் ஆண்கள் மொத்தம் 64,400 பேர் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 44 (ERVTA)
44 ஆசேருடைய கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: இம்னா-இம்னாவியரின் குடும்பம், இஸ்வி-இஸ்வியரின் குடும்பம், பெரீயா-பெரீயாவியரின் குடும்பம்,
எண்ணாகமம் 26 : 45 (ERVTA)
45 பெரீயாவின் குடும்பங்களில் உள்ளவர்கள்: ஏபேர்-ஏபேரியரின் குடும்பம், மல்கியேல்-மல்கியேலியரின் குடும்பம்.
எண்ணாகமம் 26 : 46 (ERVTA)
46 சாராள் என்ற பேரில் ஆசேருக்கு ஒரு மகள் இருந்தாள்.
எண்ணாகமம் 26 : 47 (ERVTA)
இவர்கள் அனைவரும் ஆசேரின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 53,400 பேர் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 48 (ERVTA)
48 நப்தலியினுடைய குடும்பத்தில் உள்ள குடும்பங்கள்: யாத்சியேல்-யாத்சியேலியரின் குடும்பம், கூனி-கூனியரின் குடும்பம்.
எண்ணாகமம் 26 : 49 (ERVTA)
எத்சேர்-எத்சேரியரின் குடும்பம். சில்லேமின்-சில்லேமியரின் குடும்பம்.
எண்ணாகமம் 26 : 50 (ERVTA)
50 இவர்கள் அனைவரும் நப்தலியின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 45,400 பேர் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 51 (ERVTA)
51 எனவே மொத்தம் 601, 730 இஸ்ரவேல் ஆண்கள் இருந்தனர்.
எண்ணாகமம் 26 : 52 (ERVTA)
கர்த்தர் மோசேயிடம்,
எண்ணாகமம் 26 : 53 (ERVTA)
“இந்த நாடானது பங்கிடப்பட்டு இவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோத்திரமும் போதுமான நிலத்தைப் பெற்றுக்கொள்ளும்.
எண்ணாகமம் 26 : 54 (ERVTA)
பெரிய கோத்திரம் மிகுதியான நிலத்தைப் பெறும். சிறிய கோத்திரம் குறைந்த அளவு நிலத்தைப் பெறும். அவர்கள் பெற்றுள்ள இந்த நாடானது சமமாகப் பங்கு வைக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்படும்.
எண்ணாகமம் 26 : 55 (ERVTA)
ஆனால் நீயோ சீட்டுக் குலுக்கல் முறை மூலமே எந்தப் பகுதி எந்தக் கோத்திரத்திற்கு உரியது என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கோத்திரமும் தனது பங்கினைப் பெற வேண்டும். அப்பங்கானது கோத்திரத்தின் பெயரிலேயே கொடுக்கப்பட வேண்டும்.
எண்ணாகமம் 26 : 56 (ERVTA)
சிறியதும் பெரியதுமான அனைத்து கோத்திரத்திற்கும் நிலங்கள் கொடுக்கப்படும். இதனை முடிவுசெய்ய சீட்டு குலுக்கல் முறையைக் கையாளவேண்டும்” என்றார்.
எண்ணாகமம் 26 : 57 (ERVTA)
57 அவர்கள் லேவியின் கோத்திரத்தையும் எண்ணிக் கணக்கிட்டனர். லேவியின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: கெர்சோன்-கெர்சோனியரின் குடும்பம். கோகாத்-கோகாத்தியரின் குடும்பம். மெராரி-மெராரியரின் குடும்பம்.
எண்ணாகமம் 26 : 58 (ERVTA)
58 ஆகிய இவை லேவியரின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: லிப்னீயரின் குடும்பம், எப்ரோனியரின் குடும்பம், மகலியரின் குடும்பம், மூசியரின் குடும்பம், கோராகியரின் குடும்பம் அம்ராமும் கோகாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன்
எண்ணாகமம் 26 : 59 (ERVTA)
அம்ராமின் மனைவியின் பெயர் யோகெபேத். இவளும் லேவியின் கோத்திரத்தில் உள்ளவள். அவள் எகிப்திலே பிறந்தவள். யோகெபேத்தும் அம்ராமும் ஆரோனையும் மோசேயையும் பெற்றனர். அவர்களுக்கு மிரியம் என்ற மகளும் உண்டு.
எண்ணாகமம் 26 : 60 (ERVTA)
ஆரோன் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரின் தந்தை.
எண்ணாகமம் 26 : 61 (ERVTA)
ஆனால் நாதாபும் அபியூவும் மரித்துப்போனார்கள். ஏனென்றால் அவர்கள் அங்கீகரிக்கப்படாத அக்கினியால் கர்த்தருக்கு பலியைச் செலுத்தினார்கள்.
எண்ணாகமம் 26 : 62 (ERVTA)
லேவியின் கோத்திரத்தில் ஆண்கள் மொத்தம் 23,000 பேர் இருந்தனர். ஆனால் இவர்கள் மற்ற இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்த்து எண்ணி கணக்கிடப்படவில்லை. அவர்கள், மற்றவர்களுக்குக் கர்த்தர் கொடுத்த நாட்டின் பங்குகளையும் பெறவில்லை.
எண்ணாகமம் 26 : 63 (ERVTA)
மோசேயும் எலெயாசாராகிய ஆசாரியனும் சேர்ந்து அனைத்து ஜனங்களையும் எண்ணிக் கணக்கிட்டனர். மோவாபின் யோர்தான் பள்ளத்தாக்கில் இருந்தபோது அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிட்டனர். இந்த இடம் யோர்தானுக்கு அப்பால் எரிகோவின் அருகில் இருந்தது.
எண்ணாகமம் 26 : 64 (ERVTA)
பல ஆண்டுகளுக்கு முன்னால், சீனாய் பாலைவனத்தில் மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிட்டனர். ஆனால் அவர்கள் மரித்துவிட்டனர். அவர்களில் யாரும் உயிரோடு இல்லை.
எண்ணாகமம் 26 : 65 (ERVTA)
ஏனென்றால் அவர்கள் அனைவரும் பாலைவனத்திலேயே மரித்துப் போவார்கள் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால் அவர்கள் மரித்தார்கள். அவர்களில் இருவர் மட்டுமே உயிரோடு இருந்தனர். ஒருவன், எப்புன்னேயின் மகனான காலேப். இன்னொருவன் நூனின் மகனாகிய யோசுவா.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65