எண்ணாகமம் 2 : 1 (ERVTA)
{முகாமிற்கான முன் ஏற்பாடுகள்} [PS] கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும்,
எண்ணாகமம் 2 : 2 (ERVTA)
“இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றியே, தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழுவும், தங்களுக்கென்று தனியான கொடியை வைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் குழுக்கொடியின் அருகிலேயே, ஒவ்வொருவனும் தங்க வேண்டும்.
எண்ணாகமம் 2 : 3 (ERVTA)
“யூதா முகாமின் கொடியானது சூரியன் உதிக்கின்ற, கிழக்குத் திசையில் இருக்க வேண்டும். யூதாவின் கோத்திரம், அக்கொடியின் அருகிலேயே தங்கள் முகாம்களை அமைத்துக்கொள்ள வேண்டும். அம்மினதாபின் மகனான நகசோன், யூதாவின் கோத்திரத்துக்குத் தலைவனாக இருப்பான்.
எண்ணாகமம் 2 : 4 (ERVTA)
அவர்கள் குழுவில் 74,600 ஆண்கள் இருந்தனர்.
எண்ணாகமம் 2 : 5 (ERVTA)
“இசக்காரின் கோத்திரம், யூதாவின் கோத்திரத்திற்கு அருகில் தங்கியிருக்க வேண்டும். சூவாரின் மகனான நெதனேயேல், இசக்கார் ஜனங்களின் தலைவனாய் இருப்பான்.
எண்ணாகமம் 2 : 6 (ERVTA)
அவனுடைய குழுவில் 54,400 ஆண்கள் இருந்தனர்.
எண்ணாகமம் 2 : 7 (ERVTA)
“செபுலோனின் கோத்திரமானது, யூதாவின் கோத்திரத்துக்கு அருகில் தங்கியிருக்க வேண்டும். ஏலோனின் மகனான எலியாப், செபுலோன் ஜனங்களின் தலைவனாவான்.
எண்ணாகமம் 2 : 8 (ERVTA)
அவர்கள் குழுவில் 57,400 ஆண்கள் இருந்தனர்.
எண்ணாகமம் 2 : 9 (ERVTA)
“யூதாவின் முகாமில் மொத்தம் 1,86,400 ஆண்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும், தங்கள் கோத்திரங்களின்படி பிரிக்கப்பட்டார்கள். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது, யூதாவின் கோத்திரமே முதலில் செல்லும்.
எண்ணாகமம் 2 : 10 (ERVTA)
“ரூபனுடைய முகாமின் கொடியைக் கொண்ட படைகள், பரிசுத்தக் கூடாரத்தின் தென்பகுதியில் இருக்கும். ஒவ்வொரு குழுவும் இக்கொடியின் அருகில் இருக்கும். சேதேயூரின் மகனான எலிசூர், ரூபன் ஜனங்களின் தலைவனாக இருப்பான்.
எண்ணாகமம் 2 : 11 (ERVTA)
இக்குழுவில் 46,500 ஆண்கள் இருந்தனர்.
எண்ணாகமம் 2 : 12 (ERVTA)
“சிமியோனின் கோத்திரம், ரூபனின் கோத்திரத்தின் அருகில் இருக்கும். சூரிஷதாவின் மகனான செலூமியேல், சிமியோன் ஜனங்களின் தலைவனாக இருப்பான்.
எண்ணாகமம் 2 : 13 (ERVTA)
இக்குழுவில் 59,300 ஆண்கள் இருந்தனர்.
எண்ணாகமம் 2 : 14 (ERVTA)
“காத்தின் கோத்திரமும், ரூபனின் கோத்திரத்தின் அருகில் இருக்கும். தேகுவேலின் மகனாகிய எலியாசாப், காத் ஜனங்களின் தலைவனாயிருப்பான்.
எண்ணாகமம் 2 : 15 (ERVTA)
இக்குழுவில் 45,650 ஆண்கள் இருந்தனர்.
எண்ணாகமம் 2 : 16 (ERVTA)
“ரூபனின் முகாமில் எல்லா கோத்திரங்களிலிருந்தும் மொத்தம் 1,51,450 ஆண்கள் இருந்தனர். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்குப் போகும்போது இக்குழு இரண்டாவதாகச் செல்லும்.
எண்ணாகமம் 2 : 17 (ERVTA)
“ஜனங்கள் பயணம் செய்யும்போது, அடுத்ததாக லேவியரின் குழு செல்ல வேண்டும். ஆசாரிப்புக் கூடாரமானது அவர்களுடைய எல்லா முகாம்களுக்கும் நடுவே இருக்க வேண்டும். அவர்கள் செல்லுகிற வரிசைப்படியே தங்கள் முகாம்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பக் கொடிகளோடுதான் பயணம் செய்யவேண்டும்.
எண்ணாகமம் 2 : 18 (ERVTA)
“எப்பிராயீமுடைய முகாமின் கொடியையுடைய படைகள் மேற்கு பக்கத்தில் தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். அம்மியூதின் மகனான எலிஷாமா எப்பிராயீமின் ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான்.
எண்ணாகமம் 2 : 19 (ERVTA)
இக்குழுவில் மொத்தம் 40,500 ஆண்கள் இருந்தனர்.
எண்ணாகமம் 2 : 20 (ERVTA)
“மனாசேயின் கோத்திரமானது எப்பிராயீமுடைய குடும்பத்துக்கு அருகில் தங்க வேண்டும். பெதாசூரின் மகனான கமாலியேல், மனாசே ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான்.
எண்ணாகமம் 2 : 21 (ERVTA)
இக்குழுவில் மொத்தம் 32,200 ஆண்கள் இருந்தனர்.
எண்ணாகமம் 2 : 22 (ERVTA)
“பென்யமீனின் கோத்திரமும் எப்பிராயீமுடைய குடும்பத்துக்கு அருகில் தங்க வேண்டும். கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான்.
எண்ணாகமம் 2 : 23 (ERVTA)
அக்குழுவில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை 35,400 ஆகும்.
எண்ணாகமம் 2 : 24 (ERVTA)
“எப்பிராயீமின் குழு தங்கி இருக்கும் இடத்தில், மொத்தத்தில் 1,08,100 ஆண்கள் இருந்தார்கள். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது, மூன்றாவதாக இவர்கள் செல்ல வேண்டும்.
எண்ணாகமம் 2 : 25 (ERVTA)
“தாண் குழுவின் கொடியானது வடக்குப் புறத்தில் இருக்க வேண்டும். தாணின் கோத்திரங்கள், அங்கே தங்கள் முகாம்களை அமைத்திருப்பார்கள். அம்மிஷதாயின் மகனான அகியேசேர், தாண் ஜனங்களின் தலைவனாக இருப்பான்.
எண்ணாகமம் 2 : 26 (ERVTA)
இந்தக் குழுவில் 62,700 ஆண்கள் இருந்தனர்.
எண்ணாகமம் 2 : 27 (ERVTA)
“ஆசேரின் கோத்திரத்தினர் தாணின் கோத்திரத்தினரை அடுத்து இருப்பார்கள். ஓகிரானின் மகனான பாகியேல், ஆசேர் ஜனங்களின் தலைவனாக இருப்பான்.
எண்ணாகமம் 2 : 28 (ERVTA)
இக்குழுவில், 41,500 ஆண்கள் இருந்தனர்.
எண்ணாகமம் 2 : 29 (ERVTA)
“நப்தலியின் கோத்திரத்தினரும் தாணின் கோத்திரத்தினருக்கு அடுத்துக் கூடாரமிட்டு இருப்பார்கள். ஏனானின் மகனாகிய அகீரா, நப்தலி ஜனங்களின் தலைவனாக இருப்பான்.
எண்ணாகமம் 2 : 30 (ERVTA)
இக்குழுவில் 53,400 ஆண்கள் இருந்தனர்.
எண்ணாகமம் 2 : 31 (ERVTA)
“தாணின் குழு தங்கி இருக்கும் இடத்தில் மொத்தத்தில் 1,57,600 ஆண்கள் இருந்தார்கள். மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது, கடைசியில் செல்ல வேண்டியவர்கள் இவர்களே, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பக் கொடிகளோடு இருக்க வேண்டும்” என்று கூறினார். [PS]
எண்ணாகமம் 2 : 32 (ERVTA)
இவர்கள்தான் இஸ்ரவேல் ஜனங்கள். அவர்கள் குடும்பவாரியாகக் கணக்கிடப்பட்டனர். எல்லா முகாம்களிலும் இருந்த மொத்த இஸ்ரவேல் ஆண்களின் எண்ணிக்கை 6,03,550 ஆகும்.
எண்ணாகமம் 2 : 33 (ERVTA)
மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, லேவியர்களை மற்ற இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்த்து எண்ணவில்லை. [PE][PS]
எண்ணாகமம் 2 : 34 (ERVTA)
கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தனர். ஒவ்வொரு குழுவும் தமது சொந்தக் கொடியின் கீழ் தங்கி இருந்தது. அனைவரும் தங்கள் குடும்பம், மற்றும் கோத்திரத்தின்படியே பிரயாணப்பட்டு போனார்கள். [PE]
❮
❯