புலம்பல் 5 : 1 (ERVTA)
கர்த்தருக்கு ஒரு ஜெபம் கர்த்தாவே, எங்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணிப்பாரும். எங்களது அவமானத்தை நோக்கிப்பாரும்!
புலம்பல் 5 : 2 (ERVTA)
எங்கள் நாடு அந்நியர்களுக்கு உரியதான சொத்தாக மாறிற்று. எங்கள் வீடுகள் அயல் நாட்டுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
புலம்பல் 5 : 3 (ERVTA)
நாங்கள் அநாதைகளாயிருக்கிறோம். எங்களுக்குத் தந்தை இல்லை. எங்கள் தாய்மார்கள் விதவைகளைப்போன்று ஆனார்கள்.
புலம்பல் 5 : 4 (ERVTA)
நாங்கள் குடிக்கிற தண்ணீரையும் விலைக்கு வாங்க வேண்டியதிருக்கிறது. நாங்கள் பயன்படுத்துகிற விறகுக்கும் விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது.
புலம்பல் 5 : 5 (ERVTA)
எங்கள் கழுத்துகளில் நுகத்தைப் பூட்டிக்கொள்ள வற்புறுத்தப்படுகிறோம். நாங்கள் களைத்துப்போகிறோம். எங்களுக்கு ஓய்வில்லை.
புலம்பல் 5 : 6 (ERVTA)
நாங்கள் எகிப்தோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். நாங்கள் போதுமான அப்பங்களைப் பெற அசீரியாவோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
புலம்பல் 5 : 7 (ERVTA)
எங்கள் முற்பிதாக்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தனர். இப்போது அவர்கள் மரித்துப்போனார்கள். இப்பொழுது நாங்கள் அவர்கள் செய்த பாவத்துக்காகத் துன்பப்படுகிறோம்.
புலம்பல் 5 : 8 (ERVTA)
அடிமைகள் எங்களது ஆள்வோர்களாக ஆகியிருக்கின்றனர். அவர்களிடமிருந்து எவராலும் எங்களைக் காப்பாற்ற முடியவில்லை.
புலம்பல் 5 : 9 (ERVTA)
நாங்கள் உணவைப்பெற வாழ்க்கையில் அபாயத்தை எதிர்கொள்கிறோம். வனாந்திரத்தில் மனிதர்கள் வாள்களோடு நின்றுக்கொண்டிருக்கின்றனர்.
புலம்பல் 5 : 10 (ERVTA)
எங்கள் தோல் வறுக்கும் சட்டியைப்போன்று சூடாக உள்ளது. எங்களுக்கு பசியினால் அதிகமாய் காய்ச்சல் உள்ளது.
புலம்பல் 5 : 11 (ERVTA)
பகைவர்கள் சீயோன் பெண்களை கற்பழித்தனர். யூதாவின் நகரங்களில் அவர்கள் பெண்களை கற்பழித்தனர்.
புலம்பல் 5 : 12 (ERVTA)
பகைவர்கள் எங்கள் இளவரசர்களை தூக்கிலிட்டனர். எங்கள் மூப்பர்களை அவர்கள் கௌரவிக்கவில்லை.
புலம்பல் 5 : 13 (ERVTA)
பகைவர்கள் எங்கள் இளைஞர்களை எந்திர ஆலைகளில் தானியத்தை அரைக்கும்படிச் செய்தனர். எங்கள் இளைஞர்கள் மரத்தடிகளின் சுமையால் கீழே இடறி விழுந்தார்கள்.
புலம்பல் 5 : 14 (ERVTA)
மூப்பர்கள் இனி நகரவாசல்களில் உட்காருவதில்லை. இளைஞர்கள் இனி இசை எழுப்புவதில்லை.
புலம்பல் 5 : 15 (ERVTA)
எங்கள் இதயத்தில் இனி மகிழ்ச்சியே இல்லை. எங்கள் நடனம் மரித்தவர்களுக்கான ஒப்பாரியாக மாறிவிட்டது.
புலம்பல் 5 : 16 (ERVTA)
எங்கள் தலையிலிருந்து கிரீடம் கீழே விழுந்துவிட்டது. எங்களுக்கு எங்கள் பாவங்களால் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது.
புலம்பல் 5 : 17 (ERVTA)
இவற்றால் எங்கள் இதயம் நோயுற்றிருக்கிறது. எங்கள் கண்களால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.
புலம்பல் 5 : 18 (ERVTA)
சீயோன் மலை வெறு நிலமாகிவிட்டது. சீயோன் மலையைச் சுற்றி நரிகள் ஓடித் திரிகின்றன.
புலம்பல் 5 : 19 (ERVTA)
ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் ஆளுகிறீர், உமது இராஜ சிங்காசனம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
புலம்பல் 5 : 20 (ERVTA)
கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் எங்களை மறந்துவிட்டது போன்று இருக்கின்றீர். எங்களை நெடுங்காலமாக தனியே விட்டுவிட்டதுபோன்று இருக்கின்றீர்.
புலம்பல் 5 : 21 (ERVTA)
கர்த்தாவே, உம்மிடம் மீண்டும் எங்களைக் கொண்டுவாரும். நாங்கள் மகிழ்ச்சியோடு உம்மிடம் திரும்பி வருவோம். எங்கள் வாழ்க்கையை முன்பு இருந்ததுபோன்று ஆக்கும்.
புலம்பல் 5 : 22 (ERVTA)
நீர் எங்கள் பேரில் கடுங்கோபமாக இருந்தீரே. எங்களை நீர் முழுமையாக நிராகரித்துவிட்டீரா?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22