புலம்பல் 3 : 1 (ERVTA)
துன்பங்களின் அர்த்தம் நான் அதிகமான துன்பங்களைப் பார்த்திருக்கிற மனிதன். கர்த்தர் கம்பால் எங்களை அடித்தார். நான் இது நிகழ்ந்ததைப் பார்த்தேன்!
புலம்பல் 3 : 2 (ERVTA)
கர்த்தர் என்னை வெளிச்சத்தில் அல்ல இருட்டில் வழிநடத்தி கொண்டுவந்தார்.
புலம்பல் 3 : 3 (ERVTA)
கர்த்தர் தனது கையை எனக்கு எதிராகத் திருப்பினார். அவர் நாள்முழுதும் இதனை மீண்டும் மீண்டும் செய்தார்.
புலம்பல் 3 : 4 (ERVTA)
அவர் எனது சதையையும் தோலையும் முற்றலாக்கினார். அவர் எனது எலும்புகளை உடைத்தார்.
புலம்பல் 3 : 5 (ERVTA)
கர்த்தர் எனக்கு எதிராகக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தினார். அவர் கசப்பையும் வருத்தத்தையும் என்னைச் சுற்றிலும் வரும்படி செய்தார்.
புலம்பல் 3 : 6 (ERVTA)
அவர் என்னை இருட்டில் இருக்கும்படிச் செய்தார். நீண்ட காலமாகச் செத்துக் கிடக்கிற சிலரைப் போல என்னை அவர் செய்தார்.
புலம்பல் 3 : 7 (ERVTA)
கர்த்தர் என்னை உள்ளே வைத்து பூட்டினார். என்னால் வெளியே வரமுடியவில்லை. அவர் என்மீது கனமான சங்கிலிகளைப் போட்டார்.
புலம்பல் 3 : 8 (ERVTA)
நான் கதறினாலும் உதவி கேட்டாலும் கர்த்தர் எனது ஜெபத்தைக் கேட்பதில்லை.
புலம்பல் 3 : 9 (ERVTA)
அவர் எனது பாதையைக் கற்களால் அடைத்துவிட்டார். அவர் எனது பாதையைக் கோணலாக்கினார்.
புலம்பல் 3 : 10 (ERVTA)
கர்த்தர் என்னைத் தாக்க வரும் கரடியாய் இருக்கிறார். அவர் மறைவிடத்திலுள்ள சிங்கம் போலவும் இருக்கிறார்.
புலம்பல் 3 : 11 (ERVTA)
கர்த்தர் என் பாதையின் மீது முட்களைப் பரப்பினார். அவர் என்னைத் துண்டு துண்டாகக் கிழித்துப்போட்டார். அவர் என்னை பாழாக்கினார்.
புலம்பல் 3 : 12 (ERVTA)
அவர் தனது வில்லை தயார் செய்தார். அவரது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார்.
புலம்பல் 3 : 13 (ERVTA)
அவர் தனது அம்பை என்னுடைய வயிற்றில் எய்தார்.
புலம்பல் 3 : 14 (ERVTA)
நான் எனது ஜனங்கள் அனைவருக்கும் ஒரு வேடிக்கையாகிப் போயிருக்கிறேன். நாள் முழுவதும் அவர்கள் என்னைப்பற்றி பாடல் பாடி என்னைக் கேலிச் செய்கிறார்கள்.
புலம்பல் 3 : 15 (ERVTA)
கர்த்தர் இந்த விஷத்தை (தண்டனையை) நான் குடிக்கும்படி கொடுத்திருக்கிறார். அவர் என்னை இந்தக் கசப்பான பானத்தால் நிரப்பினார்.
புலம்பல் 3 : 16 (ERVTA)
கர்த்தர் பாறை நிலத்தில் என் பற்களைத் தள்ளினார். அவர் என்னைத் தூசியில் தள்ளினார்.
புலம்பல் 3 : 17 (ERVTA)
நான் மீண்டும் அமைதி பெறப்போவதில்லை என்று நினைத்தேன். நான் நல்லவற்றைப் பற்றி மறந்துவிட்டேன்.
புலம்பல் 3 : 18 (ERVTA)
நான் எனக்குள் “கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை நான் இழந்து விட்டேன்” என்றேன்.
புலம்பல் 3 : 19 (ERVTA)
கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும். எனக்கு வீடு இல்லை. நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும்.
புலம்பல் 3 : 20 (ERVTA)
நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன்.
புலம்பல் 3 : 21 (ERVTA)
ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன். பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன். நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்:
புலம்பல் 3 : 22 (ERVTA)
கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை. கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை.
புலம்பல் 3 : 23 (ERVTA)
ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்! கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது!
புலம்பல் 3 : 24 (ERVTA)
நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார், ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.
புலம்பல் 3 : 25 (ERVTA)
கர்த்தர் தனக்காகத் காத்திருக்கும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார். கர்த்தர் அவரைத் தேடும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
புலம்பல் 3 : 26 (ERVTA)
ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ள கர்த்தருக்காக அமைதியாகக் காத்திருப்பது நல்லது.
புலம்பல் 3 : 27 (ERVTA)
ஒருவன் கர்த்தருடைய நுகத்தை அணிந்துகொள்ளுவது நல்லது. ஒருவன், தன் இளமை காலத்திலிருந்தே அந்த நுகத்தடியைச் சுமப்பது நல்லது.
புலம்பல் 3 : 28 (ERVTA)
கர்த்தர் நுகத்தை அவன் மீது வைக்கும்போது, அந்த மனிதன் தனியாகவும் அமைதியாகவும் இருப்பான்.
புலம்பல் 3 : 29 (ERVTA)
அம்மனிதன் கர்த்தருக்கு முன் தன் முகம் தரையில் படும்படி குப்புற விழுந்து வணங்க வேண்டும். அதில் இன்னும் நம்பிக்கை இருக்கலாம்.
புலம்பல் 3 : 30 (ERVTA)
அம்மனிதன் தன் ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறு கன்னத்தைத் திருப்பவேண்டும். அம்மனிதன் ஜனங்கள் தன்னை நிந்திக்கும்படி அனுமதிக்கவேண்டும்.
புலம்பல் 3 : 31 (ERVTA)
கர்த்தர் என்றென்றும் ஜனங்களை புறக்கணிக்கமாட்டார் என்பதை அம்மனிதன் நினைவில்கொள்ளவேண்டும்.
புலம்பல் 3 : 32 (ERVTA)
கர்த்தர் தண்டிக்கும்போது அவனுக்கும் இரக்கத்தையும் வெளிபடுத்துகிறார். அவரது பேரன்பாலும் கருணையாலும் அன்பாலும் அவனுக்கு இரக்கம் வெளிப்படுகிறது.
புலம்பல் 3 : 33 (ERVTA)
கர்த்தர் ஜனங்களைத் தண்டிக்க விரும்புவதில்லை. அவர் ஜனங்கள் மகிழ்ச்சியற்று இருப்பதை விரும்புவதில்லை.
புலம்பல் 3 : 34 (ERVTA)
கர்த்தர் இவற்றை விரும்புவதில்லை. யாரோ ஒருவன் பூமியிலுள்ள அனைத்து சிறைக் கைதிகளையும் தன் காலுக்கடியில் நசுக்குவதை அவர் விரும்புவதில்லை.
புலம்பல் 3 : 35 (ERVTA)
யாரோ ஒருவன் இன்னொருவனுக்கு அநியாயமானவனாக இருப்பதை அவர் விரும்புவதில்லை. ஆனால் சில ஜனங்கள் உன்னதமான தேவனுக்கு முன்பாக அத்தீயவற்றைச் செய்கிறார்கள்.
புலம்பல் 3 : 36 (ERVTA)
கர்த்தர், ஒருவன் இன்னொருவனை ஏமாற்றுவதை விரும்புவதில்லை. கர்த்தர் இத்தகைய எவற்றையுமே விரும்புவதில்லை.
புலம்பல் 3 : 37 (ERVTA)
ஏதாவது நிகழவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டால் எவராலும் சொல்லவும் முடியாது, நிகழச் செய்யவும் முடியாது.
புலம்பல் 3 : 38 (ERVTA)
உன்னதமான தேவனே நல்லதும் தீயதும் நிகழும்படி கட்டளையிடுகிறார்.
புலம்பல் 3 : 39 (ERVTA)
ஒருவனது பாவங்களுக்காகக் கர்த்தர் தண்டிக்கும்போது உயிரோடுள்ள எவனும் புகார் கூற முடியாது.
புலம்பல் 3 : 40 (ERVTA)
நாம் நம்முடைய செயல்களைச் சோதித்து ஆராய்வோம். பிறகு கர்த்தரிடம் திரும்புவோம்.
புலம்பல் 3 : 41 (ERVTA)
பரலோகத்தின் தேவனிடம் நமது கைகளோடு இதயத்தையும் ஏறெடுப்போம்.
புலம்பல் 3 : 42 (ERVTA)
நாம் அவரிடம், “நாங்கள் பாவம் செய்தோம், பிடிவாதமாயிருந்தோம். இதனால் எங்களை நீர் மன்னிக்காமல் இருந்தீர்.
புலம்பல் 3 : 43 (ERVTA)
நீர் கோபத்தால் மூடப்பட்டு எங்களைத் துரத்தினீர். நீர் எங்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!
புலம்பல் 3 : 44 (ERVTA)
ஜெபம் எதுவும் வந்து சேராதபடி நீர் உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
புலம்பல் 3 : 45 (ERVTA)
மற்ற நாட்டு ஜனங்களுக்கிடையே எங்களை குப்பையாகவும் அருவருக்கத்தக்கவர்களாகவும் ஆக்கினீர்.
புலம்பல் 3 : 46 (ERVTA)
எங்களது பகைவர்கள் எல்லாம் எங்களுடன் கோபத்தோடு பேசுகிறார்கள்.
புலம்பல் 3 : 47 (ERVTA)
நாங்கள் பயந்திருக்கிறோம். நாங்கள் குழியில் விழுந்திருக்கிறோம். நாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் உடைந்திருக்கிறோம்!” என்கிறேன்.
புலம்பல் 3 : 48 (ERVTA)
எனது கண்களில் கண்ணீர் ஓடை பாய்கின்றது! எனது ஜனங்களின் அழிவினால் நான் அழுகிறேன்.
புலம்பல் 3 : 49 (ERVTA)
எனது கண்களில் கண்ணீர் நிறுத்தப்படாமல் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன! நான் அழுதுகொண்டேயிருக்கிறேன்!
புலம்பல் 3 : 50 (ERVTA)
கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை, நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்! நீர் பரலோகத்திலிருந்து பார்க்கிறவரை நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்!
புலம்பல் 3 : 51 (ERVTA)
எனது நகரத்தில் பெண்களுக்கு என்ன ஏற்பட்டது என்று பார்க்கும்போது என் கண்கள் என்னைத் துக்கமுறச் செய்தன.
புலம்பல் 3 : 52 (ERVTA)
அந்த ஜனங்கள் காரணம் இல்லாமலேயே எனக்குப் பகைவர்கள் ஆனார்கள். ஆனால் அவர்கள் என்னைப் பறவையைப்போன்று வேட்டையாடினார்கள்.
புலம்பல் 3 : 53 (ERVTA)
நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள். அவர்கள் என்மீது கல்லையும் எறிந்தார்கள்.
புலம்பல் 3 : 54 (ERVTA)
என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது. “நான் முடிந்து போனேன்” என்று எனக்குள் சொன்னேன்.
புலம்பல் 3 : 55 (ERVTA)
கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன். நான் பள்ளத்திற்குள்ளிருந்து உமது நாமத்தைச் சொல்லி அழைத்தேன்.
புலம்பல் 3 : 56 (ERVTA)
நீர் எனது சத்தத்தைக் கேட்டீர். நீர் உமது காதுகளை மூடவில்லை. நீர் என்னை மீட்பதற்கு மறுக்கவில்லை.
புலம்பல் 3 : 57 (ERVTA)
நான் உம்மை அழைத்த நாளன்று நீர் என்னிடம் வந்தீர். “பயப்படாதே” என்று நீர் என்னிடம் சொன்னீர்.
புலம்பல் 3 : 58 (ERVTA)
கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர். நீர் எனது உயிரை மீண்டும் எனக்காக மீட்டுக் கொண்டு வந்தீர்.
புலம்பல் 3 : 59 (ERVTA)
கர்த்தாவே, நீர் எனது துன்பங்களைப் பார்த்தீர். இப்பொழுது எனக்காக எனது வழக்கை நியாயந்தீரும்.
புலம்பல் 3 : 60 (ERVTA)
எனது பகைவர்கள் எவ்வாறு என்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களையெல்லாம் நீர் பார்த்திருக்கிறீர்.
புலம்பல் 3 : 61 (ERVTA)
கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர்.
புலம்பல் 3 : 62 (ERVTA)
எல்லா நேரத்திலும் எனது பகைவர்களின் வார்த்தைகளும் எண்ணங்களும் எனக்கு எதிராக இருக்கின்றன.
புலம்பல் 3 : 63 (ERVTA)
கர்த்தாவே, அவர்கள் உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும், என்னை எவ்வாறு பரிகாசம் செய்கிறார்கள் என்று பாரும்!
புலம்பல் 3 : 64 (ERVTA)
கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்! அவர்கள் செய்திருப்பதை அவர்களுக்குத் திருப்பிக்கொடும்!
புலம்பல் 3 : 65 (ERVTA)
அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்! பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்!
புலம்பல் 3 : 66 (ERVTA)
அவர்களைக் கோபத்தோடு துரத்தும்! அழியும்! கர்த்தாவே, வானத்தின் கீழே அவர்களை அழித்துவிடும்!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66