எரேமியா 2 : 1 (ERVTA)
{யூதா உண்மையாக இல்லை} [PS] கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர்.
எரேமியா 2 : 2 (ERVTA)
“எரேமியா, போ. எருசலேம் ஜனங்களிடம் பேசு, அவர்களிடம், “நீ இளைய நாடாக இருந்த காலத்தில் எனக்கு உண்மை உள்ளவளாக இருந்தாய், [QBR2] இளைய மணமகளைப் போன்று, என்னைப் பின்பற்றினாய். [QBR] வனாந்தரத்தின் வழியாக என்னைப் பின்பற்றினீர்கள்; [QBR2] விவசாயத்திற்குப் பயன்படுத்தாத நிலத்தின் வழியாக என்னைப் பின்தொடர்ந்தீர்கள். [QBR]
எரேமியா 2 : 3 (ERVTA)
இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கான பரிசுத்த அன்பளிப்பாக இருந்தனர். [QBR2] அவர்கள் கர்த்தரால் சேகரிக்கப்பட்ட முதல்கனியாக இருந்தனர். [QBR] அவர்கள் காயப்படுத்த முயலும் எவரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படுவார்கள். [QBR2] அத்தீயவர்களுக்குக் கெட்டவை ஏற்படும் என்று சொல்” என்றார். [QBR] இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
எரேமியா 2 : 4 (ERVTA)
யாக்கோபின் குடும்பமே கர்த்தருடைய வார்த்தையைக் கேள், [QBR2] இஸ்ரவேலின் கோத்திரங்களே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
எரேமியா 2 : 5 (ERVTA)
கர்த்தர் சொல்லுகிறது இதுதான்: [QBR] “நான், உங்கள் முற்பிதாக்களிடம் நீதியுடன் இல்லை என நினைக்கிறீர்களா? [QBR2] அதனால்தான் அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்களா? [QBR] உங்கள் முற்பிதாக்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர். [QBR2] அவர்கள், தாங்களே உதவாக்கரைகள் ஆனார்கள். [QBR]
எரேமியா 2 : 6 (ERVTA)
உங்கள் முற்பிதாக்கள், ‘கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தார், [QBR2] கர்த்தர் எங்களை வனாந்திரத்தில் வழிநடத்தினார். [QBR] கர்த்தர் எங்களை வறண்ட பாறை நிலத்தின் வழியாக நடத்தினார். [QBR] கர்த்தர் எங்களை இருண்ட ஆபத்தான நாடுகள் வழியாக நடத்தினார், [QBR2] ஜனங்கள் எவரும் அங்கு இதற்குமுன்பு வாழவில்லை. [QBR2] ஜனங்கள் அவ்வழியாகப் பயணம் செய்ததுமில்லை, [QBR] ஆனால் கர்த்தர் எங்களை அந்த தேசத்தின் வழியாக நடத்தி வந்தார்; [QBR2] எனவே, இப்போது அவர் எங்கே இருக்கிறார்?’ ” என்று சொல்லவில்லை.
எரேமியா 2 : 7 (ERVTA)
கர்த்தர் கூறுகிறார்: “நான் உங்களை நல்ல நாட்டிற்கு கொண்டுவந்தேன், [QBR2] பல நன்மைகள் நிறைந்த ஒரு நாட்டிற்கு கொண்டுவந்தேன். [QBR] நான் இதனைச் செய்தேன், எனவே நீ அங்கு வளர்ந்த பழங்கள் மற்றும் அறுவடைகளை உண்ணமுடியும், [QBR2] ஆனால் நீங்கள் என் நாட்டை ‘அசுத்தம்’ மட்டுமே செய்தீர்கள். [QBR] நான் அந்த நல்ல நாட்டை உங்களுக்குக் கொடுத்தேன், [QBR2] ஆனால் நீங்கள் அதனை தீய இடமாகச் செய்தீர்கள்.
எரேமியா 2 : 8 (ERVTA)
“ ‘கர்த்தர் எங்கே?’ [QBR2] என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை, [QBR] சட்டத்தை அறிந்தவர்கள் என்னை அறிய விரும்பவில்லை, [QBR2] இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்; [QBR] தீர்க்கதரிசிகள் பாகால் என்னும் பொய்த் தெய்வம் பெயரால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். [QBR2] அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டார்கள்.”
எரேமியா 2 : 9 (ERVTA)
எனவே கர்த்தர் சொல்லுகிறதாவது: “இப்பொழுது நான் மீண்டும் உன்னைக் குற்றம்சாட்டுவேன், [QBR2] நான் உனது பேரப் பிள்ளைகளையும் குற்றம்சாட்டுவேன் என்று சொல்லுகிறார். [QBR]
எரேமியா 2 : 10 (ERVTA)
கடலைக் கடந்து கித்திமின் தீவுகளுக்குப் போ. [QBR2] கேதாருக்கு யாராவது ஒருவனை அனுப்பு, [QBR] மிகக் கவனமாகப் பார், [QBR2] எவராவது இதுபோல செய்திருக்கிறார்களா, என்று பார். [QBR]
எரேமியா 2 : 11 (ERVTA)
எந்த நாட்டவர்களாவது எப்போதாவது புதிய தெய்வங்களை தொழுதுகொள்ள [QBR2] தங்கள் பழைய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நிறுத்தினார்களா? [QBR] அவர்களின் தெய்வங்கள், தெய்வங்களே அல்ல! [QBR] ஆனால், என் ஜனங்கள், தங்கள் மகிமைமிக்க தேவனை ஆராதிப்பதைவிட்டு, [QBR2] எதற்கும் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.
எரேமியா 2 : 12 (ERVTA)
“வானங்களே, நடந்திருக்கும் இவற்றின் நிமித்தம் [QBR2] திகைப்பால் வியப்படைந்து பெரும் பயத்தால் நடுங்குங்கள்!” [QBR] இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. [QBR]
எரேமியா 2 : 13 (ERVTA)
“எனது ஜனங்கள் இரு தீயச்செயல்களைச் செய்திருக்கின்றனர்; [QBR2] அவர்கள் என்னிடமிருந்து விலகினார்கள், [QBR2] (நான் உயிருள்ள தண்ணீரின் ஊற்றாக இருக்கிறேன்). [QBR2] அவர்கள் தங்களுக்குரிய தண்ணீர்க் குழிகளைத் தோண்டினார்கள். [QBR2] (அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பினார்கள்). [QBR] ஆனால், அவர்களுடைய தண்ணீர்க்குழிகள் உடைந்தன, [QBR2] அத்தொட்டிகளில் தண்ணீர் தங்குவதில்லை.
எரேமியா 2 : 14 (ERVTA)
“இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாக மாறினார்களா? [QBR2] அடிமையாகப் பிறந்த மனிதனைப்போன்று இருந்தார்களா? [QBR2] இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து செல்வத்தை ஏன் ஜனங்கள் எடுத்துக்கொண்டனர்? [QBR]
எரேமியா 2 : 15 (ERVTA)
இஸ்ரவேலை நோக்கி இளஞ்சிங்கங்கள் (பகைவர்கள்) கெர்ச்சிக்கின்றன, [QBR2] சிங்கங்கள் முழங்குகின்றன, இஸ்ரவேல் தேசத்தை சிங்கங்கள் அழித்திருக்கின்றன, [QBR] இஸ்ரவேல் நகரங்கள் எரிந்திருக்கின்றன, [QBR2] அவர்களில் எவரும் மீதமில்லை. [QBR]
எரேமியா 2 : 16 (ERVTA)
நோப், தகபானேஸ் எனும் நகரங்களின் ஜனங்கள் [QBR2] உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள். [QBR]
எரேமியா 2 : 17 (ERVTA)
இந்த தொந்தரவு உனது சொந்தக் குற்றம்! [QBR2] உங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்வழியில் நடத்தினார்: [QBR2] ஆனால், அவரிடமிருந்து நீங்கள் விலகினீர்கள். [QBR]
எரேமியா 2 : 18 (ERVTA)
யூத ஜனங்களே, இதை நினையுங்கள்: [QBR2] எகிப்துக்குப் போக இது உதவுமா? [QBR2] நைல் நதியில் தண்ணீர் குடிக்க இது உதவுமா? இல்லை! [QBR2] அசீரியாவிற்குச் செல்ல இது உதவுமா? [QBR2] ஐபிராத்து ஆற்று தண்ணீரைக் குடிக்க இது உதவுமா? இல்லை! [QBR]
எரேமியா 2 : 19 (ERVTA)
நீங்கள் தீயவற்றைச் செய்தீர்கள், [QBR2] அத்தீயவை உங்களுக்குத் தண்டனையைமட்டும் கொண்டு வரும். துன்பம் உங்களுக்கு வரும். [QBR] அத்துன்பம் உனக்குப் பாடத்தைக் கற்பிக்கும். [QBR2] இதைப்பற்றி சிந்தி! [QBR] பிறகு உன் தேவனிடமிருந்து விலகுவது எவ்வளவு கெட்டது என்பதை நீ புரிந்துகொள்வாய்; [QBR2] என்னை மதிக்காததும் எனக்குப் பயப்படாததும் தவறு!” [QBR] இச்செய்தி எனது ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தது. [QBR]
எரேமியா 2 : 20 (ERVTA)
“யூதாவே, நீண்ட காலத்திற்கு முன்பு உன் நுகத்தை எறிந்தாய், [QBR2] நீ கயிறுகளை அறுத்து எறிந்தாய், (அதனை உன்னைக் கட்டுப்படுத்த வைத்திருந்தேன்) ‘நான் உனக்கு சேவை செய்ய மாட்டேன்!’ என்று நீ சொன்னாய். [QBR] நீ வேசியைப்போன்று [QBR2] மலைகளின் மேலும் ஒவ்வொரு பச்சையான மரங்களின் கீழும் அலைந்தாய். [QBR]
எரேமியா 2 : 21 (ERVTA)
யூதாவே, நான் உன்னைச் சிறப்பான திராட்சையைப்போன்று நட்டேன். [QBR2] நீங்கள் அனைவரும் நல்ல விதைகளைப் போன்றிருந்தீர்கள், [QBR] நீங்கள் தீய பழத்தைக்கொடுக்கும் வேறுபட்ட திராட்சையாக எப்படி மாறினீர்கள்? [QBR]
எரேமியா 2 : 22 (ERVTA)
நீ உன்னை உவர்மண்ணால் கழுவினாலும், [QBR2] நீ மிகுதியான சவுக்காரத்தைப் பயன்படுத்தினாலும் நான் உனது குற்றத்தின் கறையைக் காணமுடியும்” [QBR] என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். [QBR]
எரேமியா 2 : 23 (ERVTA)
“யூதாவே, நீ என்னிடம், ‘நான் தீட்டாகவில்லை, [QBR2] நான் பாகால் விக்கிரகங்களை தொழுதுகொள்ளவில்லை’ என்று எப்படிக் கூறமுடியும்? [QBR] பள்ளத்தாக்குகளில் நீ செய்தவற்றைப்பற்றி எண்ணு, [QBR2] நீ இடத்திற்கு இடம் வேகமாக ஓடுகிற பெண் ஒட்டகத்தைப் போன்றவள். [QBR]
எரேமியா 2 : 24 (ERVTA)
நீ வனாந்தரத்திலே வாழ்கிற ஒரு கழுதையைப் போன்றவன். [QBR2] அது காமத்தின்போது மோப்பம் பிடிக்கக்கூடியது, [QBR2] அது ஆசையோடு இருக்கும்போது, அதன் போக்கை மாற்ற யாராலும் திருப்பிக் கொண்டு வரமுடியாது. [QBR] காமத்தின்போது ஒவ்வொரு கழுதையும் தான்விரும்பும் பெண் கழுதையை அடையும், [QBR2] அதனைக் கண்டுபிடிப்பது எளிது. [QBR]
எரேமியா 2 : 25 (ERVTA)
யூதாவே, விக்கிரகங்களின் பின்னால் ஓடுவதைவிடு! [QBR2] அந்த தெய்வங்களுக்காகத் தாகமாயிருப்பதை நிறுத்து. [QBR] ஆனால் நீ, ‘இதனால் பயனில்லை என்னால் அமைதியாக இருக்கமுடியாது, [QBR2] அந்த அந்நிய தெய்வங்களை நான் நேசிக்கிறேன், [QBR2] அவற்றை நான் தொழுதுகொள்ள விரும்புகிறேன்’ என்கிறாய்.
எரேமியா 2 : 26 (ERVTA)
“ஒரு திருடன் பிடிபட்டபோது, [QBR2] வெட்கப்படுகிறான், அதைப்போன்று, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் வெட்கப்படுகிறார்கள். [QBR] அரசர்களும் தலைவர்களும் வெட்கப்படுகிறார்கள். [QBR2] ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுகிறார்கள். [QBR]
எரேமியா 2 : 27 (ERVTA)
அந்த ஜனங்கள் மரத்துண்டுகளோடு பேசுகிறார்கள்! [QBR2] அவர்கள், ‘நீ என் தந்தை’ என்கிறார்கள். [QBR] அந்த ஜனங்கள் பாறையோடு பேசுகிறார்கள். [QBR2] அந்த ஜனங்கள், ‘நீ எனக்குப் பிறப்பைக் கொடுத்தாய்’ என்றனர். [QBR] அவர்கள் அனைவரும் வெட்கப்படுவார்கள். [QBR] அந்த ஜனங்கள் என்னைப் பார்க்கமாட்டார்கள். [QBR2] அவர்கள் எனக்குத் தம் முதுகைக் காட்டினார்கள். [QBR] ஆனால் யூதாவின் ஜனங்கள் துன்பம் அடையும்போது, அவர்கள் என்னிடம் வந்து, [QBR2] ‘எங்களைக் காப்பாற்றும்!’ என்பார்கள். [QBR]
எரேமியா 2 : 28 (ERVTA)
அந்த விக்கிரகங்கள் வந்து உன்னைக் காப்பாற்றட்டும்!நீங்களாகச் செய்த அந்த விக்கிரகங்கள் எங்கே? [QBR2] நீங்கள் துன்பப்படும்போது அந்த விக்கிரகங்கள் வந்து உங்களைக் காப்பாற்றுகிறதா என்று பார்க்கலாம்! [QBR] யூதாவே, உனது எண்ணற்ற நகரங்களைப் போன்றே நிறைய விக்கிரகங்களைப் பெற்றுள்ளாய்!
எரேமியா 2 : 29 (ERVTA)
“ஏன் என்னோடு நீ வாதிடுகிறாய்? [QBR2] நீங்கள் அனைவரும் எனக்கு எதிராக உள்ளீர்கள்” [QBR] என்று கர்த்தர் சொல்லுகிறார். [QBR]
எரேமியா 2 : 30 (ERVTA)
“யூதாவின் ஜனங்களே, நான் உங்களைத் தண்டித்தேன். [QBR2] ஆனால் அது உதவவில்லை. [QBR] நீங்கள் தண்டிக்கப்பட்டபோது [QBR2] என்னிடம் திரும்பி வரவில்லை. [QBR] உங்களிடம் வந்த தீர்க்கதரிசிகளை வாளால் கொன்றீர்கள் நீங்கள் ஆபத்தான சிங்கத்தைப் போன்றவர்கள். [QBR] நீங்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றீர்கள்.” [QBR]
எரேமியா 2 : 31 (ERVTA)
இத்தலைமுறையில் உள்ளவர்களே, கர்த்தருடைய செய்தியில் கவனம் செலுத்துங்கள்! “இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் வனாந்தரத்தைப்போல் இருந்திருக்கிறேனா? [QBR2] நான் அவர்களுக்கு இருண்டதும் பயங்கரமானதுமான நிலமாக இருந்திருக்கிறேனா? [QBR] ஏன் என் ஜனங்கள், ‘நாங்கள் எங்கள் வழியில் போக சுதந்தரம் உள்ளவர்கள். [QBR2] கர்த்தாவே, நாங்கள் உம்மிடம் வரமாட்டோம்!’ என்றனர். [QBR] ஏன் அவற்றை அவர்கள் சொன்னார்கள்? [QBR]
எரேமியா 2 : 32 (ERVTA)
ஒரு இளம் பெண்ணால் தன் நகைகளை மறக்க முடியாது. [QBR2] ஒரு மணமகள் தனது ஆடைகளை மறக்க முடியாது. [QBR] ஆனால் என் ஜனங்கள் பலமுறை என்னை மறந்துவிட்டார்கள், அவைகள் எண்ண முடியாதவை.
எரேமியா 2 : 33 (ERVTA)
“யூதாவே, உனக்கு நேசர்களை (பொய்த் தெய்வங்கள்) எவ்வாறு விரட்டிப்பிடிப்பது என்று தெரியும். [QBR2] நீங்கள் உண்மையில் தீமை செய்யக் கற்றிருக்கிறீர்கள். [QBR]
எரேமியா 2 : 34 (ERVTA)
உங்கள் கைகளில் இரத்தம் இருக்கிறது! [QBR2] இது ஏழைகளின் இரத்தம்; அப்பாவிகளின் இரத்தம். [QBR] உங்கள் வீட்டை உடைத்தவர்களை நீ பிடிக்கவில்லை! [QBR2] எவ்விதக் காரணமும் இல்லாமல் அவர்களைக் கொன்றாய்! [QBR]
எரேமியா 2 : 35 (ERVTA)
ஆனால் இன்றும் நீ, ‘நான் அப்பாவி. [QBR2] தேவனுக்கு என்மீது கோபமில்லை’ என்று சொல்லுகிறாய். [QBR] எனவே நானும் உன்னைப் ‘பொய்யன்’ எனக் குற்றம்சாட்டுவேன். [QBR2] ஏனென்றால் நீ, ‘நான் எவ்விதத் தப்பும் செய்யவில்லை’ என்று சொல்லுகிறாய். [QBR]
எரேமியா 2 : 36 (ERVTA)
உன் மனதை மாற்றிக்கொள்வது உனக்கு மிக எளிதாகலாம். [QBR2] அசீரியா உன்னை அதிருப்திப்படுத்தினான், எனவே அசீரியாவை விட்டு விலகினாய். [QBR] உதவிக்காக எகிப்திடம் போனாய். [QBR2] ஆனால் எகிப்தும் உன்னை அதிருப்திப்படுத்தும். [QBR]
எரேமியா 2 : 37 (ERVTA)
எனவே நீ இறுதியாக எகிப்தையும் விட்டுப் போய்விடுவாய். [QBR2] உன் முகத்தை வெட்கத்திற்குள் மறைத்துக்கொள்வாய். [QBR] நீ அந்த நாடுகளை நம்பினாய், [QBR2] ஆனால் கர்த்தர் அந்நாடுகளை வெறுத்தார், எனவே அவர்களால் உன் வெற்றிக்கு உதவ முடியாது. [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37

BG:

Opacity:

Color:


Size:


Font: