ஏசாயா 38 : 1 (ERVTA)
எசேக்கியாவின் சுகவீனம் அந்த நேரத்தில், எசேக்கியா சுகவீனம்அடைந்தான். அவன் மரணத்துக்கு சமீபமாயிருந்தான். ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசி அவனைப் பார்க்க வந்தான். ஏசாயா அரசனிடம், “இவற்றை உன்னிடம் சொல்லுமாறு கர்த்தர் கூறினார்: நீ விரைவில் மரிப்பாய். எனவே, நீ மரித்தபிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உனது குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும். நீ மீண்டும் குணமடையமாட்டாய்!” என்று கூறினான்.
ஏசாயா 38 : 2 (ERVTA)
எசேக்கியா ஆலயத்தின் சுவரின் பக்கம் திரும்பி ஜெபம் செய்யத் தொடங்கினான்.
ஏசாயா 38 : 3 (ERVTA)
“கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உண்மையாக உமக்குச் சேவை செய்ததை நினைத்தருளும். நீர் நல்லது என்று கூறியவற்றையே நான் செய்திருக்கிறேன்” என்று அவன் சொன்னான். பிறகு எசேக்கியா மிக உரத்த குரலில் கதறத் தொடங்கினான்.
ஏசாயா 38 : 4 (ERVTA)
ஏசாயா கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றான்.
ஏசாயா 38 : 5 (ERVTA)
ஏசாயா, “எசேக்கியாவிடம் போய் உனது முற்பிதாவான தாவீதின் தேவனாகிய கர்த்தர் சொன்னவை இதுதான் என்று அவனிடம் கூறு. உனது ஜெபத்தை நான் கேட்டேன். உனது கண்ணீரை நான் பார்த்தேன். நான் உனது வாழ்க்கையில் 15 ஆண்டுகளைக் கூட்டுவேன்.
ஏசாயா 38 : 6 (ERVTA)
நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா அரசனிடமிருந்து காப்பாற்றுவேன் நான் இந்த நகரத்தை பாதுகாப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார் என்றான்.
ஏசாயா 38 : 7 (ERVTA)
அவர் இவற்றையெல்லாம் செய்வார் என்பதைக் காண்பிக்கும்படி கர்த்தரிடமிருந்து வந்த அடையாளம் இதுதான்.
ஏசாயா 38 : 8 (ERVTA)
“பார், ஆகாசு சூரிய கடியாரத்தில் படிக்குப்படி இறங்கின சூரிய நிழலை பத்துப் படிகள் பின்னிட்டுத் திருப்புகிறேன். முன்பு இருந்த இடத்திலிருந்து சூரிய நிழல் பத்துப்பாகை பின்னால் போகும்” என்றான்.
ஏசாயா 38 : 9 (ERVTA)
எசேக்கியா நோயிலிருந்து குணமடைந்ததும் அவனிடமிருந்து வந்த கடிதம் இதுதான்.
ஏசாயா 38 : 10 (ERVTA)
நான் முதுமையடையும்வரை வாழ்வேன் என்று நான் எனக்குள் சொன்னேன். ஆனால் பிறகு பாதாளத்தின் வாசல்கள் வழியாகச் செல்லும் எனது நேரம் வந்தது.
ஏசாயா 38 : 11 (ERVTA)
எனவே, நான் சொன்னேன்: “கர்த்தரை நான் இனிமேல் உயிரோடு இருக்கிறவர்களின் நாட்டில் பார்க்கமாட்டேன். இனிமேல் பூமியிலுள்ள ஜனங்களோடு இருந்து ஜனங்களை நான் காணமாட்டேன்.
ஏசாயா 38 : 12 (ERVTA)
எனது வீடு, எனது மேய்ப்பனுடைய கூடாரம் கீழே தள்ளப்படுவதுபோல் என்னிடமிருந்து எடுக்கப்படும். நெசவு செய்கிறவன் பாவினை அறுப்பது போல் நான் முடிந்து போகிறேன். எனது வாழ்வை அவ்வளவு சிறிய காலத்திற்குள் நீ முடித்தாய்!
ஏசாயா 38 : 13 (ERVTA)
ஒரு சிங்கத்தைப் போன்ற நான் எல்லா இரவுகளிலும் கதறினேன். ஆனால் எனது நம்பிக்கைகள் சிங்கம் எலும்புகளைத் தின்பது போன்று நொறுக்கப்பட்டன. இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எனது வாழ்வை நீ முடித்துவிட்டாய்.
ஏசாயா 38 : 14 (ERVTA)
ஒரு புறாவைப்போன்று அலறினேன். ஒரு பறவையைப்போன்று அலறினேன். எனது கண்கள் சோர்ந்துபோயின. ஆனால் நான் தொடர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனது ஆண்டவரே! நான் அதிகமாய் ஒடுங்கிப் போகிறேன். எனக்கு உதவிட வாக்களிப்பீர்!”
ஏசாயா 38 : 15 (ERVTA)
நான் என்ன சொல்லமுடியும். என்ன நிகழும் என்று எனது ஆண்டவர் கூறினார். அவை நிகழ எனது எஜமானர் காரணமாக இருப்பார். இந்தத் தொல்லைகளை நான் எனது ஆத்துமாவிற்குள் வைத்திருந்தேன். எனவே இப்போது நான் எனது வாழ்வுமுழுவதும் பணிவுள்ளவனாக இருப்பேன்.
ஏசாயா 38 : 16 (ERVTA)
எனது ஆண்டவரே! இந்தக் கடின நேரத்தைப் பயன்படுத்தி எனது ஆவியை மீண்டும் வாழச் செய்யும். என் ஆவி பலமும் நலமும் பெற உதவும். நான் நலம் பெற உதவும்! நான் மீண்டும் வாழ உதவும்!
ஏசாயா 38 : 17 (ERVTA)
பார்! எனது தொல்லைகள் போகின்றன! இப்போது எனக்கு சமாதானம் உள்ளது. நீர் என்னை மிகவும் நேசிக்கிறீர். நான் கல்லறையில் அழுகும்படிவிடமாட்டீர். எனது பாவங்களையெல்லாம் மன்னித்தீர், எனது பாவங்களை வெகு தொலைவிற்கு எறிந்தீர்.
ஏசாயா 38 : 18 (ERVTA)
மரித்த ஜனங்கள் உம்மைப் புகழ்ந்து பாடுவதில்லை. பாதாளத்திலுள்ள ஜனங்களும் உம்மைத் துதிப்பதில்லை. மரித்த ஜனங்கள் தமக்கு உதவுமாறு உம்மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள். அவர்கள் தரையில் உள்ள பாதாளத்துக்குள் செல்கிறார்கள். அவர்கள் மீண்டும் பேசமாட்டார்கள்.
ஏசாயா 38 : 19 (ERVTA)
இன்று என்னைப்போன்று உயிருடன் இருக்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கும் ஜனங்களாக உள்ளனர். ஒரு தந்தை தன் பிள்ளைகளிடம், “உம்மை நம்ப முடியும்” என்று சொல்லவேண்டும்.
ஏசாயா 38 : 20 (ERVTA)
எனவே, நான் சொல்கிறேன்: “கர்த்தர் என்னைக் காப்பாற்றினார் எனவே நாங்கள் பாடுவோம். எங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் பாடல்களை இசைப்போம்”.
ஏசாயா 38 : 21 (ERVTA)
பிறகு எசேக்கியாவிடம் ஏசாயா, “நீ அத்திப்பழங்களை பசையைபோன்று குழைத்து உனது புண்ணின்மேல் தடவவேண்டும். பிறகு நீ குணம் பெறுவாய்” என்றான்.
ஏசாயா 38 : 22 (ERVTA)
ஆனால் எசேக்கியா ஏசாயாவிடம், “நான் குணமடைவேன் என்பதையும், நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போக இயலும் என்பதையும் நீரூபிக்கும் அடையாளம் எது?” என்று கேட்டிருந்தான்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22