ஆதியாகமம் 39 : 1 (ERVTA)
யோசேப்பை வாங்கிய வியாபாரிகள் அவனை எகிப்தில் பார்வோனின் படைத் தலைவன் போத்திபாரிடம் விற்றார்கள்.
ஆதியாகமம் 39 : 2 (ERVTA)
ஆனால் கர்த்தர் அவனுக்கு உதவினார். யோசேப்பு ஒரு வெற்றியுள்ள மனிதன் ஆனான். அவன் தன் எஜமானனின் வீட்டில் வசித்தான்.
ஆதியாகமம் 39 : 3 (ERVTA)
கர்த்தர் யோசேப்போடு இருப்பதையும், அவன் செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தரின் உதவியால் வெற்றி பெறுவதையும் பார்த்தான்.
ஆதியாகமம் 39 : 4 (ERVTA)
அதனால் யோசேப்பைப்பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். எனவே, தனக்காக யோசேப்பு வேலை செய்வதை அனுமதித்ததுடன், தன் வீட்டைக் கவனித்துக் கொள்ளவும் வைத்தான். போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யோசேப்பு ஆளுகை செய்தான்.
ஆதியாகமம் 39 : 5 (ERVTA)
யோசேப்பைத் தனது வீடு முழுவதற்கும் அதிகாரியாக்கியதும் கர்த்தர் அந்த வீட்டையும், போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். இவை அனைத்தையும் கர்த்தர் யோசேப்புக்காகச் செய்தார். போத்திப்பாருக்குரிய வீடு மற்றும் வயல்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.
ஆதியாகமம் 39 : 6 (ERVTA)
ஆகவே போத்திபார் யோசேப்பிற்கு வீட்டிலுள்ள எல்லா பொறுப்புகளையும் கொடுத்துவிட்டான். அவன் உண்ணும் உணவைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. மனைவியுடன் பாவம் செய்ய மறுத்தல் யோசேப்பு கம்பீரமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தான்.
ஆதியாகமம் 39 : 7 (ERVTA)
கொஞ்சக் காலம் ஆனதும், யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பு மீது ஆசைப்பட ஆரம்பித்தாள். ஒரு நாள் அவனிடம், "என்னோடு பாலின உறவு கொள்ள வா" என்றாள்.
ஆதியாகமம் 39 : 8 (ERVTA)
ஆனால் யோசேப்பு மறுத்துவிட்டான். "என் எஜமானன் என்னை நம்பி வீட்டிலுள்ள எல்லாவற்றையும் ஒப்படைத்திருக்கிறார்.
ஆதியாகமம் 39 : 9 (ERVTA)
என் எஜமானன் இந்த வீட்டில் ஏறக்குறைய என்னைத் தனக்குச் சமமாக வைத்திருக்கிறார். நான் அவரது மனைவியோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. இது தவறு, தேவனுக்கு விரோதமான பாவம்" என்று கூறினான்.
ஆதியாகமம் 39 : 10 (ERVTA)
அவள் ஒவ்வொரு நாளும் யோசேப்போடு பேசி அவனை அழைத்தாள். அவனோ அவளோடு பாவத்தில் ஈடுபட மறுத்துவிட்டான்.
ஆதியாகமம் 39 : 11 (ERVTA)
ஒரு நாள் அவன் வீட்டிற்குள் வேலை செய்வதற்காகப் போனான். அப்போது வீட்டில் அவன் மட்டும் தான் இருந்தான்.
ஆதியாகமம் 39 : 12 (ERVTA)
அவனது எஜமானனின் மனைவி அவனது அங்கியை பற்றிப் பிடித்து, "என்னோடு பாலின உறவுகொள்ள வா" என்றாள். எனவே அவன் வேகமாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டான். அப்போது அவனது அங்கி அவளது கையில் சிக்கிக்கொண்டது.
ஆதியாகமம் 39 : 13 (ERVTA)
அவள் அதனைக் கவனித்தாள். நடந்ததைப்பற்றி அவள் பொய்யாகச் சொல்லத் திட்டமிட்டாள்.
ஆதியாகமம் 39 : 14 (ERVTA)
அவள் வீட்டிலுள்ள வேலைக்காரர்களை அழைத்து "பாருங்கள், நம்மை அவமானம் செய்வதற்காக இந்த எபிரெய அடிமை கொண்டு வரப்பட்டுள்ளான். அவன் வந்து என்னோடு படுக்க முயன்றான்.
ஆதியாகமம் 39 : 15 (ERVTA)
நான் சத்தமிட்டதால் அவன் ஓடிப் போய்விட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது" என்று முறையிட்டாள்.
ஆதியாகமம் 39 : 16 (ERVTA)
அவள் அந்த அங்கியை அவள் புருஷன் வரும் வரை வைத்திருந்து,
ஆதியாகமம் 39 : 17 (ERVTA)
அவனிடமும் அதே கதையைக் கூறினாள். "நீங்கள் கொண்டுவந்த எபிரெய அடிமை என்னைக் கெடுக்கப் பார்த்தான்.
ஆதியாகமம் 39 : 18 (ERVTA)
அவன் என்னருகில் வந்ததும் நான் சத்தமிட்டேன், அவன் ஓடிவிட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது" என்றாள்.
ஆதியாகமம் 39 : 19 (ERVTA)
யோசேப்பின் எஜமானன் அவனது மனைவி சொன்னதைக் கேட்டு கோபம் கொண்டான்.
ஆதியாகமம் 39 : 20 (ERVTA)
அரசனுடைய பகைவர்களைப் போடுவதற்கென்றிருந்த சிறையிலே போத்திபார் யோசேப்பைப் போட்டுவிட்டான். யோசேப்பு அங்கேயே தங்கினான்.
ஆதியாகமம் 39 : 21 (ERVTA)
ஆனால் கர்த்தர் யோசேப்போடு இருந்தார். அவர் தொடர்ந்து தனது இரக்கத்தை அவன்மீது காட்டி வந்தார். சிறையதிகாரி யோசேப்பை விரும்ப ஆரம்பித்தான்.
ஆதியாகமம் 39 : 22 (ERVTA)
யோசேப்பை கைதிகளைக் கண் காணிப்பவனாக நியமித்தான். அங்கு நடப்பவற்றுக்கு அவன் பொறுப்பாளியாக்கப்பட்டான்.
ஆதியாகமம் 39 : 23 (ERVTA)
[This verse may not be a part of this translation]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

BG:

Opacity:

Color:


Size:


Font: