ஆதியாகமம் 16 : 1 (ERVTA)
{ஆகார் எனும் வேலைக்காரப்பெண்} [PS] சாராய் ஆபிராமின் மனைவி. அவளுக்கும் ஆபிராமுக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது. சாராய்க்கு ஒரு எகிப்திய வேலைக்காரப் பெண் இருந்தாள். அவள் பெயர் ஆகார்.
ஆதியாகமம் 16 : 2 (ERVTA)
சாராய் ஆபிராமிடம், “கர்த்தர் நான் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. எனவே எனது வேலைக்காரப் பெண்ணோடு செல்லுங்கள். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை என் குழந்தை போல் ஏற்றுக்கொள்வேன்” என்றாள். ஆபிராமும் தன் மனைவி சாராய் சொன்னபடி கேட்டான். [PE][PS]
ஆதியாகமம் 16 : 3 (ERVTA)
இது ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நடந்தது. சாராய் தனது வேலைக்காரப் பெண்ணை ஆபிராமுக்குக் கொடுத்தாள். (ஆகார் எகிப்திய வேலைக்காரப் பெண்)
ஆதியாகமம் 16 : 4 (ERVTA)
ஆபிராமால் ஆகார் கர்ப்பமுற்றாள். இதனால் அவளுக்குப் பெருமை ஏற்பட்டது. அவள் தன்னைத் தன் எஜமானியைவிடச் சிறந்தவளாக எண்ணினாள்.
ஆதியாகமம் 16 : 5 (ERVTA)
ஆனால் சாராய் ஆபிராமிடம், “இப்பொழுது என் வேலைக்காரப் பெண் என்னை வெறுக்கிறாள். இதற்காக நான் உம்மையே குற்றம்சாட்டுவேன். நான் அவளை உமக்குக் கொடுத்தேன். அவள் கர்ப்பமுற்றாள். பிறகு என்னைவிடச் சிறந்தவளாகத் தன்னை நினைத்துக்கொள்கிறாள். உமக்கும் எனக்கும் இடையில் கர்த்தரே நியாயந்தீர்க்கட்டும்” என்றாள். [PE][PS]
ஆதியாகமம் 16 : 6 (ERVTA)
ஆனால் ஆபிராமோ சாராயிடம், “நீ ஆகாரின் எஜமானி, நீ அவளுக்கு செய்ய விரும்புவதைச் செய்யலாம்” என்றான். எனவே சாராய் ஆகாரைக் கடினமாகத் தண்டித்தபடியால் அவள் சாராயை விட்டு ஓடிப்போனாள். [PS]
ஆதியாகமம் 16 : 7 (ERVTA)
{இஸ்மவேல்} [PS] பாலைவனத்தில் சூருக்குப் போகிற வழியில் இருந்த நீரூற்றினருகில் ஆகாரைக் கர்த்தருடைய தூதன் கண்டான்.
ஆதியாகமம் 16 : 8 (ERVTA)
தூதன் அவளிடம், “சாராயின் பணிப்பெண்ணாகிய ஆகாரே. ஏன் இங்கே இருக்கிறாய்? எங்கே போகிறாய்?” என்று கேட்டான். [PE][PS] அவளோ, “நான் சாராயிடமிருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள். [PE][PS]
ஆதியாகமம் 16 : 9 (ERVTA)
அதற்குக் கர்த்தருடைய தூதன், “சாராய் உனது எஜமானி. வீட்டிற்குத் திரும்பிப் போய் அவளுக்குக் கீழ்ப்படிந்திரு.
ஆதியாகமம் 16 : 10 (ERVTA)
உன்னிடமிருந்து ஏராளமான ஜனங்கள் தோன்றுவர், அவர்கள் எண்ண முடியாத அளவிற்கு இருப்பார்கள்” என்றான். [PE][PS]
ஆதியாகமம் 16 : 11 (ERVTA)
மேலும் கர்த்தருடைய தூதன், “ஆகார் நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய். [QBR2] உனக்கு ஒரு மகன் பிறப்பான். [QBR] அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடு. [QBR2] ஏனென்றால் நீ மோசமாக நடத்தப்பட்டதை கர்த்தர் அறிந்திருக்கிறார். உன் மகன் உனக்கு உதவுவான். [QBR]
ஆதியாகமம் 16 : 12 (ERVTA)
இஸ்மவேல் காட்டுக் கழுதையைப் போன்று முரடனாகவும், [QBR2] சுதந்திரமானவனாகவும் இருப்பான். [QBR] அவன் ஒவ்வொருவருக்கும் விரோதமாக இருப்பான். [QBR2] ஒவ்வொருவரும் அவனுக்கு விரோதமாக இருப்பார்கள். [QBR] அவன் ஒவ்வொரு இடமாகச் சுற்றித் தன் சகோதரர்கள் அருகில் குடியேறுவான். [QBR2] அவர்களுக்கும் அவன் விரோதமாக இருப்பான்” என்றான். [PS]
ஆதியாகமம் 16 : 13 (ERVTA)
கர்த்தர் ஆகாரிடம் பேசினார், அவள் அவரிடம், “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று கூறினாள். அவள், “இத்தகைய இடத்திலும் தேவன் என்னைக் காண்கிறார், பொறுப்போடு கவனிக்கிறார். நானும் தேவனைக் கண்டேன்” என்று நினைத்து இவ்வாறு சொன்னாள்.
ஆதியாகமம் 16 : 14 (ERVTA)
எனவே, அந்த கிணற்றிற்கு பீர்லாகாய் ரோயீ என்று பெயரிடப்பட்டது. அது காதேசுக்கும் பாரேத்துக்கும் இடையில் இருந்தது. [PE][PS]
ஆதியாகமம் 16 : 15 (ERVTA)
ஆகார் ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஆபிராம் இஸ்மவேல் என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 16 : 16 (ERVTA)
ஆபிராம் ஆகார் மூலம் இஸ்மவேலைப் பெறும்போது அவனுக்கு 86 வயது. [PE]
❮
❯