எசேக்கியேல் 19 : 1 (ERVTA)
தேவன் என்னிடம் கூறினார்: “இஸ்ரவேல் தலைவர்களைப் பற்றிய இந்த சோகப் பாடலை நீ பாடவேண்டும்.
எசேக்கியேல் 19 : 2 (ERVTA)
“ ‘உன்னுடைய தாய், அங்கு ஆண் சிங்கங்களுடன் படுத்திருக்கும் பெண் சிங்கத்தைப் போலிருக்கிறாள். அவள், இளம் ஆண் சிங்கங்களுடன் படுக்கச் சென்றாள். பல குட்டிகளை பெற்றெடுத்தாள்.
எசேக்கியேல் 19 : 3 (ERVTA)
தனது குட்டிகளில் ஒன்று எழும்புகிறது. அது பலமான இளஞ்சிங்மாக வளர்ந்திருக்கிறது. அது தனது உணவைப் பிடிக்கக் கற்றிருக்கிறது. அது மனிதனைக் கொன்று தின்றது.
எசேக்கியேல் 19 : 4 (ERVTA)
“ ‘அது கெர்ச்சிப்பதை ஜனங்கள் கேட்டனர். அவர்கள் அதனை வலையில் பிடித்தனர்! அதன் வாயில் கொக்கிகளைப் போட்டனர்: அதனை எகிப்துக்குக் கொண்டு போனார்கள்.
எசேக்கியேல் 19 : 5 (ERVTA)
“ ‘அக்குட்டி தலைவனாகும் என்று தாய்ச்சிங்கம் நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால் இப்போது அது நம்பிக்கையிழந்துவிட்டது. எனவே அது தனது அடுத்த குட்டியை எடுத்தது. சிங்கமாவதற்குரிய பயிற்சியைக் கொடுத்தது.
எசேக்கியேல் 19 : 6 (ERVTA)
அது பெரிய சிங்கத்தோடு வேட்டைக்குப் போனது. அது பலமான இளம் சிங்கமாயிற்று. அது தனது உணவைப் பிடிக்கக் கற்றது. அது மனிதனைக் கொன்று தின்றது.
எசேக்கியேல் 19 : 7 (ERVTA)
அது அரண்மனைகளைத் தாக்கியது. அது நகரங்களை அழித்தது. அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அதன் கெர்ச்சினையைக் கேட்டு பேசப் பயந்தனர்.
எசேக்கியேல் 19 : 8 (ERVTA)
பிறகு அதனைச் சுற்றி வாழ்ந்த ஜனங்கள் அதற்கு ஒரு வலை அமைத்தனர். அவர்கள் அதனைத் தம் வலையில் பிடித்தனர்.
எசேக்கியேல் 19 : 9 (ERVTA)
அவர்கள் கொக்கிகளைப் போட்டு அதனைப் பூட்டினார்கள். அவர்கள் அதனை வலைக்குள் வைத்தனர். எனவே அவர்கள் பாபிலோன் அரசனிடம் கொண்டு போனார்கள். இப்பொழுது அதன் கெர்ச்சினையை இஸ்ரவேல் மலைப் பகுதிகளில் நீங்கள் கேட்க முடியாது,
எசேக்கியேல் 19 : 10 (ERVTA)
“ ‘உனது தாய் தண்ணீர் கரையில் நடப்பட்ட திராட்சைக் கொடியைப் போன்றவள். அவளுக்கு மிகுதியான தண்ணீர் இருந்தது. எனவே அவள் தழைத்த திராட்சைக் கொடியாயிருந்தாள்.
எசேக்கியேல் 19 : 11 (ERVTA)
பிறகு அவள் நிறைய கிளைகளோடு வளர்ந்தாள். அந்தக் கிளைகள் கைத்தடிகளைப் போன்றிருந்தன. அக்கிளைகள் அரசனின் செங்கோலைப் போன்றிருந்தன. அத்திராட்சைக் கொடி மேலும் மேலும் உயரமாக வளர்ந்தது, அது பல கிளைகளைப் பெற்று மேகங்களைத் தொட்டன.
எசேக்கியேல் 19 : 12 (ERVTA)
ஆனால் அக்கொடி வேரோடு பிடுங்கப்பட்டு தரையில் வீசியெறியப்பட்டது. சூடான கிழக்குக் காற்று வந்து பழங்களை காய வைத்தது. பலமான கிளைகள் ஒடிந்தன. அவை நெருப்பில் எறியப்பட்டன.
எசேக்கியேல் 19 : 13 (ERVTA)
“ ‘இப்போது திராட்சைக் கொடி வனாந்தரத்தில் நடப்படுகிறது. இது வறண்ட தாகமுள்ள நிலம்.
எசேக்கியேல் 19 : 14 (ERVTA)
பெரிய கிளையிலிருந்து நெருப்பு பரவியது. அந்நெருப்பு அதன் கிளைகளையும் பழங்களையும் எரித்தது. எனவே இனிமேல் அதில் கைத்தடி இல்லை. அரசனின் செங்கோலும் இல்லை.’ இது மரணத்தைப்பற்றிய சோகப் பாடல். இது மரணத்தைப்பற்றிய துன்பப் பாடலாகப் பாடப்பட்டது.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14