உபாகமம் 32 : 1 (ERVTA)
“வானங்களே, கவனியுங்கள், நான் பேசுவேன். [QBR2] பூமியே, என் வாயின் வார்த்தையைக் கேள். [QBR]
உபாகமம் 32 : 2 (ERVTA)
எனது போதனைகள் மழையைப் போன்று வரும், [QBR2] பூமியின்மேல் விழும் பனியைப் போன்றும், [QBR2] மெல்லிய புல்லின்மேல் தூறும் மழைத்துளிகள் போன்றும், [QBR2] பசும் புதர்களின்மேல் விழும் மழையைப் போன்றும் வரும். [QBR]
உபாகமம் 32 : 3 (ERVTA)
நான் கர்த்தருடைய நாமத்தைப் பேசுவேன். தேவனைப் போற்றுங்கள்!
உபாகமம் 32 : 4 (ERVTA)
“அவர் பாறை (கர்த்தர்), அவரது செயல்கள் பரிபூரணமானவை! [QBR2] ஏனென்றால் அவரது வழிகள் எல்லாம் சரியானவை! [QBR] தேவன் உண்மையும் சத்தியமும் உள்ளவர். [QBR2] அவர் நீதியும் செம்மையுமானவர். [QBR]
உபாகமம் 32 : 5 (ERVTA)
நீங்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல. [QBR2] உங்களது பாவங்கள் அவரை அசுத்தமாக்கியது. [QBR2] நீங்கள் கோணலான பொய்யர்கள். [QBR]
உபாகமம் 32 : 6 (ERVTA)
உங்களுக்காக இவ்வளவு செய்த கர்த்தருக்கு இந்த வழியிலா நீங்கள் திரும்ப கொடுப்பீர்கள்? இல்லை! [QBR2] நீங்கள் அறிவில்லாத அஞ்ஞான ஜனங்கள். [QBR] கர்த்தர் உங்களது தந்தையாக இருக்கிறார். [QBR2] அவர் உங்களை உண்டாக்கினார். அவர் உங்களைத் தாங்குகிறார்.
உபாகமம் 32 : 7 (ERVTA)
“நீண்ட காலத்திற்கு முன்பு நடந்ததை நினைத் துப்பாருங்கள். [QBR2] பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள். [QBR] உனது தந்தையைக் கேள். அவன் உனக்குச் சொல்வான். [QBR2] உங்கள் தலைவர்களைக் கேள். அவர்கள் உனக்குச் சொல்வார்கள். [QBR]
உபாகமம் 32 : 8 (ERVTA)
உன்னதமான தேவன் பூமியில் ஜனங்களைப் பிரித்து [QBR2] ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார். [QBR] அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார். [QBR2] இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார். [QBR]
உபாகமம் 32 : 9 (ERVTA)
கர்த்தருடைய ஜனங்களே அவரது பங்கு, [QBR2] யாக்கோபு (இஸ்ரவேல்) கர்த்தருக்குச் சொந்தம்.
உபாகமம் 32 : 10 (ERVTA)
“கர்த்தர் யாக்கோபை (இஸ்ரவேல்) ஒரு வனாந்திரத்தில் கண்டுபிடித்தார். [QBR2] அது ஒரு காலியான காற்று மிகுந்த நிலம். [QBR] கர்த்தர் அவனைக் காப்பாற்றுவதற்கு யாக்கோபுவைச் சுற்றி வளைத்துக்கொண்டார். [QBR2] அவர் அவனை தன் சொந்த கண்மணியைப் போல் காத்தார். [QBR]
உபாகமம் 32 : 11 (ERVTA)
கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு கழுகைப்போன்று இருந்தார். [QBR2] ஒரு கழுகு தன் குஞ்சுகளைப் பறக்கக் கற்பிக்கும்போது, அவற்றைக் கூட்டிலிருந்து கீழேதள்ளும். [QBR] பின் அது தன் குஞ்சுகளைக் காப்பதற்கு அவற்றோடு பறக்கும். [QBR2] அவை விழும்போது தன் இறக்கைகளை விரித்து அவற்றைப் பிடித்துக்கொள்ளும், [QBR] அது பாதுகாப்பான இடத்திற்குக் குஞ்சுகளைச் சிறகுகளில் தாங்கி எடுத்துச் செல்லும். [QBR2] கர்த்தர் இதனைப் போன்றவர். [QBR]
உபாகமம் 32 : 12 (ERVTA)
கர்த்தர் ஒருவரே யாக்கோபை வழி நடத்தினார். [QBR2] அயல்நாட்டு தெய்வங்கள் எவரும் அவனுக்கு உதவவில்லை. [QBR]
உபாகமம் 32 : 13 (ERVTA)
கர்த்தர் மலைநாட்டை அடக்கி ஆளும்படி யாக்கோபை வழிநடத்தினார். [QBR2] யாக்கோபு வயல்களிலுள்ள அறுவடைகளை எடுத்துக் கொண்டான். [QBR] கர்த்தர் யாக்கோபிற்குப் பாறையிலிருந்து தேனைக் கொடுத்தார். [QBR2] கடினமான பாறைகளிலிருந்து ஒலிவ எண்ணெய் பாயும்படிச் செய்தார். [QBR]
உபாகமம் 32 : 14 (ERVTA)
கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பசுவிலிருந்து வெண்ணெயையும், ஆடுகளிலிருந்து பாலையும் கொடுத்தார். [QBR2] அவர் இஸ்ரவேலுக்குப் பாசானிலுள்ள ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பையும், [QBR] சிறந்த கோதுமையையும் கொடுத்தார். [QBR2] இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள், சிவந்த வண்ணமுடைய திராட்சைரசத்தையும் குடித்தீர்கள்.
உபாகமம் 32 : 15 (ERVTA)
“ஆனால் யெஷுரன் கொழுத்துப் போய் கொழுத்த காளையைப்போன்று உதைத்தான் [QBR2] (ஆமாம், நீங்கள் நன்றாகப் போஷிக்கப்பட்டீர்கள்! நீங்கள் திருப்தியாகி கொழுத்தீர்கள்.) [QBR] அவன் தன்னை உண்டாக்கின தேவனை விட்டு விலகினான். [QBR2] தன்னை இரட்சித்த பாறையை (தேவன்) விட்டு ஓடினான். [QBR]
உபாகமம் 32 : 16 (ERVTA)
கர்த்தருடைய ஜனங்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டனர், கர்த்தரை எரிச்சல் அடையும்படி செய்தனர். [QBR2] கர்த்தர் விக்கிரகங்களை வெறுக்கிறார். ஆனால் அவரது ஜனங்கள் வெறுக்கத்தக்க விக்கிரகங்களை தொழுதுகொண்டு தேவனுக்குக் கோபமூட்டினார்கள். [QBR]
உபாகமம் 32 : 17 (ERVTA)
அவர்கள் உண்மையில் தெய்வங்கள் அல்லாத பிசாசுகளுக்குப் பலியிட்டனர். [QBR2] அவைகள் இதுவரை அவர்கள் அறிந்திராத புதிய பொய்த் தெய்வங்கள் ஆகும். [QBR2] அவைகள் உங்களது முற்பிதாக்கள் அறிந்திராத தெய்வங்கள் ஆகும். [QBR]
உபாகமம் 32 : 18 (ERVTA)
நீ உன்னை உண்டாக்கிய பாறையை (தேவன்) விட்டுவிலகினாய். [QBR2] உனக்கு வாழ்வு தந்த உன் தேவனை நீ மறந்தாய்.
உபாகமம் 32 : 19 (ERVTA)
“கர்த்தர் இதனைப் பார்த்து கலக்கமடைந்தார், அவரது ஜனங்களை நிராகரித்தார். [QBR2] ஏனென்றால், அவரது குமாரரும், குமாரத்திகளும் அவருக்குக் கோபமூட்டினர்! [QBR]
உபாகமம் 32 : 20 (ERVTA)
அதனால் கர்த்தர் கூறினார், [QBR] ‘நான் அவர்களிடமிருந்து திரும்புவேன். [QBR2] அப்போது அவர்களுக்கு என்ன ஏற்படும் என்பதை அவர்கள் பார்க்கட்டும்! [QBR] அவர்கள் மிகவும் கலகக்கார ஜனங்களாய் இருக்கின்றனர். [QBR] அவர்கள் தம் பாடங்களைப் படிக்காத பிள்ளைகளைப் போன்று இருக்கின்றார்கள். [QBR]
உபாகமம் 32 : 21 (ERVTA)
அவர்கள் பிசாசுகளை தொழுதுகொண்டு என்னைப் பொறாமைபடும்படிச் செய்தனர். [QBR2] இவ்விக்கிரகங்கள் உண்மையான தேவன் அல்ல. [QBR] அவர்கள் பயனற்ற விக்கிரகங்கள் மூலம், என்னைக் கோபமடையச் செய்தனர். [QBR2] எனவே, நான் இஸ்ரவேலுக்குப் பொறாமையை உண்டாக்குவேன். ஒரு தேசமாக மதிக்கப்படாத மூட ஜனங்களின் மூலம் நானும் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்குவேன். [QBR]
உபாகமம் 32 : 22 (ERVTA)
எனது கோபம் எரியும் நெருப்பைப் போன்றது. [QBR2] அது நரகத்தின் ஆழம்வரை செல்கிறது. [QBR2] அது பூமியையும், பூமி உற்பத்தி செய்யும் பொருட்களையும் எரிக்கிறது. [QBR2] அது மலைகளின் அஸ்திவாரங்களையும் எரிக்கிறது!
உபாகமம் 32 : 23 (ERVTA)
“ ‘நான் இஸ்ரவேலர்களுக்குத் துன்பங்களைக் கொண்டுவருவேன். [QBR2] நான் அவர்கள் மீது எனது அம்புகளை எய்வேன். [QBR]
உபாகமம் 32 : 24 (ERVTA)
அவர்கள் பசியால் மெலிந்து பலவீனம் அடைவார்கள். [QBR2] பயங்கரமான நோய்கள் அவர்களை அழிக்கும். [QBR] நான் அவர்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன். [QBR2] விஷப் பாம்புகளும் பல்லிகளும் அவர்களைக் கடிக்கும். [QBR]
உபாகமம் 32 : 25 (ERVTA)
வீரர்கள் அவர்களை வீதிகளில் கொல்லுவார்கள். [QBR] அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே பயப்படுவார்கள். [QBR2] படைவீரர்கள் இளைஞர்களையும், [QBR] இளம் பெண்களையும் கொல்வார்கள். [QBR2] அவர்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் கொல்வார்கள்.
உபாகமம் 32 : 26 (ERVTA)
“ ‘நான் இஸ்ரவேலர்களை அழிக்க விரும்பினேன். [QBR2] எனவே ஜனங்கள் அவர்களை முழுமையாக மறப்பார்கள்! [QBR]
உபாகமம் 32 : 27 (ERVTA)
அவர்களது பகைவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை நான் அறிவேன். [QBR2] பகைவருக்கு அது புரியாது, [QBR] அவர்கள் பெருமை கொண்டு சொல்வார்கள். [QBR2] “கர்த்தர் இஸ்ரவேலை அழிக்கவில்லை. நாங்கள் எங்கள் சொந்த பலத்தால் வென்றோம்!” ’
உபாகமம் 32 : 28 (ERVTA)
“இஸ்ரவேல் ஜனங்கள் அறிவில்லாதிருக்கிறார்கள். [QBR2] அவர்கள் புரிந்துகொள்கிறதில்லை. [QBR]
உபாகமம் 32 : 29 (ERVTA)
அவர்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் புரிந்திருக்கக்கூடும். [QBR2] என்ன நடந்திருக்கக் கூடும் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள்! [QBR]
உபாகமம் 32 : 30 (ERVTA)
ஒருவனால் 1,000 பேரைத் துரத்த முடியுமா? [QBR2] இரண்டு பேரால் 10,000 பேரை ஓடவைக்க முடியுமா? [QBR] கர்த்தர் அவர்களை எதிரிகளுக்குக் கொடுத்திருந்தால் மட்டுமே அது நிகழும்! [QBR2] அவர்களின் பாறையானவர் (தேவன்) அடிமைகளைப்போன்று விற்றிருந்தால் மட்டுமே அது நிகழும்! [QBR]
உபாகமம் 32 : 31 (ERVTA)
எதிரிகளின் ‘பாறையானவன்’ நமது பாறையானவரைப் (கர்த்தர்) போன்று பலமுள்ளவன் அல்ல. [QBR] நமது பகைவர்கள் கூட இதனைத் தெரிந்திருக்கின்றார்கள்! [QBR]
உபாகமம் 32 : 32 (ERVTA)
பகைவர்களின் திராட்சைத் தோட்டங்களும், வயல்களும் சோதோம் மற்றும் கொமோராவைப் போன்று அழிக்கப்படும். [QBR] அவர்களது திராட்சைப் பழங்கள் விஷமுள்ளதாகும். [QBR2]
உபாகமம் 32 : 33 (ERVTA)
அவர்களது திராட்சைரசம் பாம்பு விஷம் போன்றிருக்கும்.
உபாகமம் 32 : 34 (ERVTA)
“கர்த்தர் கூறுகிறார், [QBR] ‘நான் அந்தத் தண்டனையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். [QBR2] நான் அதனை எனது சேமிப்பு அறையில் பூட்டியுள்ளேன்! [QBR]
உபாகமம் 32 : 35 (ERVTA)
அவர்கள் தீமையான கிரியைகளைச் செய்யும்போது [QBR2] நான் அதற்குத் தண்டனையை வைத்திருப்பேன். [QBR] அவர்கள் தவறானவற்றைச் செய்ததால் நான் அவர்களைத் தண்டிப்பேன். [QBR] அவர்களின் துன்ப காலம் அருகில் உள்ளது. [QBR2] அவர்களது தண்டனை விரைவில் வரும்.’
உபாகமம் 32 : 36 (ERVTA)
“கர்த்தர் தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பார். [QBR2] அவர்கள் அவரது வேலைக்காரர்கள், அவர்களுக்கு அவர் இரக்கம் காண்பிப்பார். [QBR] அவர்களது வல்லமை போய்விட்டதை அவர் பார்ப்பார். [QBR2] அவர்களில் அடிமைகளும், சுதந்திரமானவர்களும் ஏகமாய் உதவியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர் பார்ப்பார். [QBR]
உபாகமம் 32 : 37 (ERVTA)
பின்னர் கர்த்தர் கூறுவார், [QBR2] ‘பொய்த் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள்? [QBR2] பாதுகாப்பிற்காக நீங்கள் ஓடிய “பாறை” எங்கே? [QBR]
உபாகமம் 32 : 38 (ERVTA)
அப்பொய்த் தெய்வங்கள் உங்கள் பலிகளில் உள்ள கொழுப்பைத் தின்றன. [QBR2] அவை உங்கள் காணிக்கையில் உள்ள திராட்சை ரசத்தைக் குடித்தன. [QBR] எனவே அந்தத் தெய்வங்கள் எழுந்து உங்களுக்கு உதவட்டும். [QBR2] அவை உங்களைக் காக்கட்டும்!
உபாகமம் 32 : 39 (ERVTA)
“ ‘இப்பொழுது நானே, நான் ஒருவரே தேவனாக இருக்கிறதைப் பார்! [QBR2] வேறு தேவன் இல்லை. நான் ஜனங்களை மரிக்கச் செய்வேன். [QBR] நானே ஜனங்களை உயிருடன் வைப்பேன். [QBR2] நான் ஜனங்களைக் காயப்படுத்த முடியும். [QBR] நான் அவர்களைக் குணப்படுத்தவும் முடியும். [QBR2] எனது அதிகாரத்திலிருந்து ஒருவனும் இன்னொருவனைக் காப்பாற்ற முடியாது. [QBR]
உபாகமம் 32 : 40 (ERVTA)
நான் எனது கையைப் பரலோகத்தை நோக்கி உயர்த்தி, இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். [QBR2] நான் என்றென்றும் ஜீவித்திருக்கிறவர் என்பதினால் அவை நிகழும் என்பதும் உண்மையாகும்! [QBR]
உபாகமம் 32 : 41 (ERVTA)
நான் எனது பளபளக்கும் வாளைக் கூர்மைப்படுத்துவேன். [QBR2] எனது எதிரிகளைத் தண்டிக்க அதனைப் பயன்படுத்துவேன். [QBR2] அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் கொடுப்பேன். [QBR]
உபாகமம் 32 : 42 (ERVTA)
எனது பகைவர்கள் கொல்லப்படுவார்கள். [QBR] கைதிகளாக சிறைபிடிக்கப்படுவார்கள். [QBR] எனது அம்புகள் அவர்களது இரத்தத்தால் மூடப்படும். [QBR] அவர்களது வீரர்களின் தலைகளை எனது வாள் வெட்டும்.’
உபாகமம் 32 : 43 (ERVTA)
“இந்த உலகம் முழுவதும் தேவஜனங்களுக்காக மகிழவேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு அவர் உதவுகிறார். [QBR2] அவர்களது வேலைகாரர்களைக் கொன்ற ஜனங்களை அவர் தண்டிக்கிறார். [QBR] அவர் அவரது பகைவர்களுக்கு ஏற்ற தண்டனைகளைக் கொடுக்கிறார். [QBR] அவர் அவரது நாட்டையும், ஜனங்களையும் சுத்தம் செய்கிறார்.” [PS]
உபாகமம் 32 : 44 (ERVTA)
{மோசே அவனது பாடலை ஜனங்களுக்குக் கற்றுத்தருகிறான்} [PS] மோசே வந்து அவனது பாடலில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்கும்படி பாடினான். நூனின் மகனாகிய யோசுவாவும் மோசேயோடு இருந்தான்.
உபாகமம் 32 : 45 (ERVTA)
மோசே இவற்றை ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்து முடித்தபோது
உபாகமம் 32 : 46 (ERVTA)
அவன் அவர்களிடம், “இன்று நான் உங்களுக்குச் சொன்ன அனைத்துக் கட்டளைகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தில் உள்ள கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும்படி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லவேண்டும்.
உபாகமம் 32 : 47 (ERVTA)
இந்தப் போதனைகளை முக்கியமற்றவை என்று நீங்கள் எண்ணவேண்டாம். அவை உங்கள் ஜீவன் ஆகும். இந்தப் போதனைகள் மூலம், யோர்தான் ஆற்றைக் கடந்துபோய் நீங்கள் சுதந்தரிக்கத் தயாராக இருக்கும் தேசத்தில் நீண்ட வாழ்வை வாழப்போகிறீர்கள்” என்றான். [PS]
உபாகமம் 32 : 48 (ERVTA)
{நேபோ மலையின்மேல் மோசே} [PS] கர்த்தர் மோசேயிடம் அதே நாளில் பேசினார். கர்த்தர்,
உபாகமம் 32 : 49 (ERVTA)
“அபாரீம் எனும் மலைகளுக்குப் போ, எரிகோவிற்கு எதிர்ப்புறமாக இருக்கிற மோவாப் நாட்டிலுள்ள நேபோ மலையின்மேல் ஏறு. பிறகு நீ, இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்வதற்காக நான் கொடுக்கிற, கானான் நாட்டினைப் பார்க்க முடியும்.
உபாகமம் 32 : 50 (ERVTA)
நீ அந்த மலைமீது மரணமடைவாய். உன் சகோதரன் ஆரோன் ஓர் மலைமீது மரித்து முற்பிதாக்களிடம் சேர்ந்ததுபோல் நீயும் உன் முற்பிதாக்களிடம் சேருவாய்.
உபாகமம் 32 : 51 (ERVTA)
ஏனென்றால், நீங்கள் இருவரும் எனக்கு எதிராக பாவம் செய்தீர்கள். நீங்கள் காதேசிலே மேரிபாவின் தண்ணீர் அருகில் இருந்தீர்கள். அது சீன் வனாந்தரத்திலே இருந்தது. அங்கே, இஸ்ரவேல் ஜனங்கள் முன்பாக, நான் பரிசுத்தமானவர் என்று நீ கனப்படுத்தவில்லை.
உபாகமம் 32 : 52 (ERVTA)
எனவே, இப்போது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கிற தேசத்தை நீ பார்க்கலாம். ஆனால், நீ அந்த தேசத்திற்குள் செல்லமுடியாது” என்று கூறினார். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52

BG:

Opacity:

Color:


Size:


Font: