2 இராஜாக்கள் 6 : 1 (ERVTA)
தீர்க்கதரிசிகளின் குழு எலிசாவிடம், "நாங்கள் அங்கிருக்கும் இடத்தில் தங்கியிருக்கிறோம், ஆனால் அது மிகவும் சிறியது.
2 இராஜாக்கள் 6 : 2 (ERVTA)
நாம் யோர்தான் ஆற்றுவெளிக்குப் போய் கொஞ்சம் மரங்களை வெட்டிவருவோம். ஒவ்வொருவரும் ஒரு மரத்தடி கொண்டுவந்தால் வசிப்பதற்கு ஒரு இடம் அமைக்கலாம்" என் றனர். எலிசாவும், "நல்லது, போய் செய்யுங்கள்" என்றான்.
2 இராஜாக்கள் 6 : 3 (ERVTA)
அவர்களில் ஒருவன், "எங்களோடு வாரும்" என்று அழைத்தான். எலிசாவும், "நல்லது நான் உங்களோடு வருகிறேன்" என்றான்.
2 இராஜாக்கள் 6 : 4 (ERVTA)
எனவே எலிசாவும் தீர்க்கதரிசிகளின் குழுவோடு சென்றான். அவர்கள் யோர்தான் ஆற்றை அடைந்ததும் சில மரங்களை வெட்ட ஆரம்பித்தனர்.
2 இராஜாக்கள் 6 : 5 (ERVTA)
ஆனால் ஒரு மனிதன் மரத்தை வெட்டும்போது, அவனது கோடரியின் தலை கழன்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. அதற்கு அவன், "ஐயோ என் எஜமானனே! அது கடனாக வாங்கியதாயிற்றே!" என்று கூறினான்.
2 இராஜாக்கள் 6 : 6 (ERVTA)
தேவமனுஷனோ, (எலிசா) "எங்கே அது விழுந்தது?" என்று கேட்டான். அந்த மனிதன் எலிசாவிற்குக் கோடரி விழுந்த இடத்தைக் காட்டினான். அவன், (எலிசா) ஒரு கொம்பை வெட்டி அதை தண்ணீருக்குள் எறிந்தான். அது (மூழ்கிவிட்ட) இரும்புக்கோடரியை மிதக்கச் செய்தது.
2 இராஜாக்கள் 6 : 7 (ERVTA)
எலிசா, "கோடரியை எடுத்துக்கொள்" என்றான். பிறகு அவன் கை வைத்து அதனை எடுத்துக்கொண்டான். ஆராமின் அரசன் இஸ்ரவேல் அரசனைத் தந்திரமாகப் பிடிக்க முயற்சிக்கிறான்
2 இராஜாக்கள் 6 : 8 (ERVTA)
ஆராமின் அரசன் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரை ஆரம்பித்தான். வேலைக்காரர்களோடும் படை அதிகாரிகளோடும் ஆலோசனை கூட்டம் நடத்தினான். அரசன், "இந்த இடத்தில் ஒளிந்திருங்கள். இஸ்ரவேலின் படைகள் வரும்போது தாக்க வேண்டும்" என்றான்.
2 இராஜாக்கள் 6 : 9 (ERVTA)
ஆனால் தேவமனிதனோ (எலிசாவோ) இஸ்ரவேல் அரசனுக்கு ஒரு தூதுவனை அனுப்பி, "எச்சரிக்கையாய் இரு! அந்த வழியாகப் போகாதே! ஆராமியப் படை வீரர்கள் ஒளிந்திருக்கிறார்கள்!" என்று சொல்லச் செய்தான்.
2 இராஜாக்கள் 6 : 10 (ERVTA)
உடனே அரசன் எலிசாவின் எச்சரிக்கைச் செய்தியை தன் படைவீரர்களுக்கு அந்த இடத்திற்கு அனுப்பி பெரும் எண்ணிக்கையில் அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றினான்.
2 இராஜாக்கள் 6 : 11 (ERVTA)
இதை அறிந்ததும் ஆராமின் அரசன் மிகவும் குலைந்து போனான். அவன் தன் அதிகாரிகளை அழைத்து, "நம் திட்டத்தை இஸ்ரவேல் அரசனுக்கு வெளிப்படுத்திய ஒற்றன் உங்களில் யார்?" என்று கேட்டான்.
2 இராஜாக்கள் 6 : 12 (ERVTA)
ஒரு அதிகாரி, "எங்கள் அரசனும் ஆண்டவனுமானவரே! நம்மில் எவரும் ஒற்றராகவில்லை. நீங்கள் உங்களுடைய படுக்கையறையில் பேசுகின்ற பல இரகசியங்களையுங் கூட, இஸ்ரவேலில் இருந்துவந்த தீர்க்கதரிசி எலிசாவால் இஸ்ரவேல் அரசனிடம் சொல்ல முடியும்!" என்றான்.
2 இராஜாக்கள் 6 : 13 (ERVTA)
அதற்கு அரசன், ஆட்களை அனுப்பி "போய் எலிசாவை கண்டுபிடியுங்கள். நான் அவனைப் பிடித்துக்கொண்டுவர ஆட்களை அனுப்புவேன்" என்றான். வேலைக்காரர்களோ, "எலிசா தோத்தானில் இருக்கிறார்" என்றனர்.
2 இராஜாக்கள் 6 : 14 (ERVTA)
பிறகு அரசன் குதிரைகள், இரதங்கள், பெரும் படை ஆகியோரைத் தோத்தானுக்கு அனுப்பினான். அவர்கள் இரவில் அந்நகரை முற்றுகை இட்டனர்.
2 இராஜாக்கள் 6 : 15 (ERVTA)
தேவ மனிதனின் (எலிசாவின்) வேலைக்காரன் காலையில் விரைவில் எழுந்து, வெளியே சென்றபோது படைவீரர்கள், குதிரைகள், மற்றும் இரதங்கள் ஆகியவற்றைக் கண்டான். எலிசாவின் வேலைக்காரன் (அவரிடம் ஓடி வந்து), "எஜமானரே! நாம் என்ன செய்யமுடியும்?" என்று கேட்டான்.
2 இராஜாக்கள் 6 : 16 (ERVTA)
எலிசாவோ, "பயப்படவேண்டாம், ஆராம் அரசனுக்காகப் போரிடும் வீரர்களை விட நமக்காக போரிடும் வீரர்கள் அதிகம்" என்றான்.
2 இராஜாக்கள் 6 : 17 (ERVTA)
பிறகு அவன் ஜெபம் செய்து "கர்த்தாவே! என் வேலைக்காரனின் கண்ணை திறந்துவிடும். அதனால் அவன் கண்டுகொள்வான்" என்று வேண்டிக்கொண்டான். அந்த வேலைக்காரனின் கண்களை கர்த்தர் திறந்தார். அவன் பார்த்தபோது, மலை முழுவதும் படை வீரர்களும் குதிரைகளும் இரதங்களும் நிற்பதைப் பார்த்தான் அவர்கள் எலிசாவை சுற்றியிருந்தனர்!
2 இராஜாக்கள் 6 : 18 (ERVTA)
பின் அவர்கள் (ஆராமியர்கள்) கீழே இறங்கி எலிசாவிடம் வந்துநின்றதும், அவன் கர்ததரிடம், "இம்மனிதர்கள் குருடாகப் போகும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்" என்றான். பிறகு கர்த்தர் எலிசா வேண்டிக்கொண்டபடியே ஆராமியர்களை குருடாக்கினார்.
2 இராஜாக்கள் 6 : 19 (ERVTA)
எலிசா அவர்களைப் பார்த்து, "இது சரியான வழியல்ல. இது சரியான நகரமும் அல்ல. என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை நீங்கள் தேடுகிறவரிடம் அழைத்துப் போவேன்" என்றான். பிறகு அவர்களை சமாரியாவிற்கு அழைத்துப்போனான்.
2 இராஜாக்கள் 6 : 20 (ERVTA)
அவர்கள் சமாரியாவை அடைந்ததும் எலிசா "கர்த்தாவே, இப்போது இந்த மனிதர்களின் கண்களைத் திறக்கச்செய்யும். எனவே அவர்கள் பார்க்க முடியும்" என்றான். பிறகு கர்த்தர் அவர்களின் கண்களைத் திறந்தார். அவர்கள் சமாரியாவின் நடுவே இருப்பதை பார்த்தனர்!
2 இராஜாக்கள் 6 : 21 (ERVTA)
இஸ்ரவேலின் அரசன் ஆராமிய படைகளைக் கண்டதும் எலிசாவிடம் "என் தந்தையே, இவர்களைக் கொல்லட்டுமா? இவர்களைக் கொல்லட்டுமா?" என்று கேட்டான்.
2 இராஜாக்கள் 6 : 22 (ERVTA)
அதற்கு எலிசா, "இவர்களைக் கொல்ல வேண்டாம். நீ உனது வாளாலும் வில்லாலும் போரில் கைப்பற்றிய வீரர்களைக் கொல்லக்கூடாது! இவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்களை உண்ணவும் குடிக்கவும்விடு. பின் எஜமானனிடம் செல்லவும் அனுமதிகொடு" என்றான்.
2 இராஜாக்கள் 6 : 23 (ERVTA)
ஆராமியப் படைக்காக இஸ்ரவேல் அரசன் நிறைய உணவைத் தயாரித்தான்.. ஆராமியப்படை உண்டு குடித்தது. பிறகு, இஸ்ரவேல் அரசன் ஆராமியப்படையை ஆராமுக்கு அனுப்பினான். ஆராமியப் படையினர் தங்களது எஜமானனிடம் திரும்பச் சென்றார்கள். பறிமுதல் செய்வதற்காக இஸ்ரவேலுக்குள் ஆராமியர்கள் அதற்கு மேல் படைகளை அனுப்பவில்லை.
2 இராஜாக்கள் 6 : 24 (ERVTA)
இதற்குப் பிறகு, ஆராமிய அரசனான பெனாதாத்தும் முழுப்படைகளையும் சேர்த்து சமாரியாவைத் தாக்கினான். சமாரியாவைக் கைப்பற்றினான்.
2 இராஜாக்கள் 6 : 25 (ERVTA)
வீரர்கள் நகருக்குள் உணவு வராதபடி தடுத்து விட்டனர். எனவே சமாரியாவில் பஞ்சமும் பட்டினியும் அதிகரித்தது. அங்கு ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுகளுக்கும், புறாக்களுக்குப் போடும் கால்படி புறா புழுக்கை ஐந்து வெள்ளி காசுகளுக்கும் மிக மோசமாக விற்கப்பட்டன.
2 இராஜாக்கள் 6 : 26 (ERVTA)
ஒரு நாள் இஸ்ரவேல் அரசன் நகரச்சுவரின் மேல் நடந்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் அவனிடம், "எனது அரசனாகிய ஆண்டவனே, என்னைக் காப்பாற்றும்!" என்று சத்தமிட்டாள்.
2 இராஜாக்கள் 6 : 27 (ERVTA)
அதற்கு அரசன் அவளிடம், "கர்த்தரே உன்னைக் காப்பாற்றாவிட்டால் நான் எவ்வாறு உன்னைக் காப்பாற்றமுடியும்? உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. தூற்றி சுத்தம் செய்த தானியத்திலிருந்து செய்த மாவு அல்லது திராட்சையை நசுக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட திராட்சை ரசம் என எதுவுமில்லை" என்றான்
2 இராஜாக்கள் 6 : 28 (ERVTA)
பிறகு அரசன் அவளிடம், "உனது பிரச்சனை என்ன?" என்றான். அதற்கு அவள், "நானும் அந்தப் பெண்ணும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அதன்படி என்னிடம் இவள் ‘நீ உன் மகனை தா. நாம் அவனைக் (கொன்று) தின்போம். பிறகு நான் என் மகனைத் தருவேன். அவனை நாளைத் தின்னலாம் என்றாள்.
2 இராஜாக்கள் 6 : 29 (ERVTA)
அதன்படி என் மகனை வேகவைத்து தின்றுவிட்டோம். பிறகு மறுநாள் நான் அவளிடம், ‘எனக்கு உன் மகனைத் தா. எனவே நாம் அவனைக் கொன்றுத் தின்போம்’ என்றேன். ஆனால் ஒளித்து வைத்திருக்கிறாள்!" என்றாள்.
2 இராஜாக்கள் 6 : 30 (ERVTA)
அரசன் அந்த பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டதும், தன் துக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். அரசன் சுவர் வழியாகச் செல்லும்பொழுது, அரசன் தனது உடைகளுக்கடியில் சாக்குத்துணியை அணிந்திருந்ததை ஜனங்கள் பார்த்தார்கள். அது அரசன் துக்கமாயிருப்பதைக் காண்பித்தது.
2 இராஜாக்கள் 6 : 31 (ERVTA)
அரசன் எலிசாவின் மீது கோபங்கொண்டு, "சாப்பாத்தின் மகனான எலிசாவின் தலையானது அவனது உடலில் இன்றைக்கும் தொடர்ந்து இருந்தால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்!" என்றான்.
2 இராஜாக்கள் 6 : 32 (ERVTA)
எலிசாவிடம் அரசன் ஒரு தூதுவனை அனுப்பினான். எலிசா தன் வீட்டில் சில மூப்பர்களோடு இருந்தான். தூதுவன் வருமுன் அவன் (எலிசா), "கொலைக்காரனின் மகன் (இஸ்ரவேல் அரசன்) என் தலையை வெட்ட ஆட்களை அனுப்பியுள்ளான்! தூதுவன் வருகிறபோது கதவுகளை அடையுங்கள்! அவனுக்கு எதிராக வேகமாகப் பிடியுங்கள்! அவனை உள்ளே விடாதீர்கள்! அவனுக்குப் பின்னால் அவனது எஜமானின் காலடி சத்தம் கேட்கிறது!" என்றான்.
2 இராஜாக்கள் 6 : 33 (ERVTA)
இவ்வாறு எலிசா மூப்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போதே தூதுவன் வந்தான். அவன், "கர்த்தரிடமிருந்தே இந்த பிரச்சனை வந்துள்ளது. எதற்காக இனி கர்த்தருக்காக காத்திருக்கவேண்டும்?" எனக் கேட்டான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: