1 நாளாகமம் 7 : 1 (ERVTA)
இசக்காருக்கு 4 மகன்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தோலா, பூவா, யசுப், சிம்ரோன் ஆகிய பெயர்களுண்டு.
1 நாளாகமம் 7 : 2 (ERVTA)
ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் ஆகியோர் தோலாவின் மகன்கள். அவர்கள் அனைவரும் தம் குடும்பத்தலைவர்களாக இருந்தனர். அவர்களும் அவர்களின் சந்ததிகளும் மிகப் பலமுள்ளவர்களாயிருந்தனர். தாவீது அரசனாகும் காலம்வரை அவர்களின் குடும்பம் வளர்ந்தது. அவர்களில் 22,600 பேர் போர் செய்ய தயாரானவர்கள்.
1 நாளாகமம் 7 : 3 (ERVTA)
ஊசியாவின் மகன்களில் ஒருவன் இஸ்ரகியா. இஸ்ரகியாவுக்கு மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா ஆகிய மகன்கள் இருந்தனர். இந்த 5 பேரும் அவர்களின் குடும்பத் தலைவராக இருந்தனர்.
1 நாளாகமம் 7 : 4 (ERVTA)
இவர்களில் 36,000 பேர் போர் செய்யத் தகுதியுடைய வீரர்களாக இருந்தனர் என வம்ச வரலாறு கூறும். அவர்கள் ஏராளமான மனைவியரும், பிள்ளைகளும் பெற்றதால் குடும்பம் பெரிதாயிற்று.
1 நாளாகமம் 7 : 5 (ERVTA)
இசக்காரின் கோத்திரங்களில் ஆக மொத்தம் 87,000 பலமிக்க வீரர்கள் இருந்தனர் என்று குடும்ப வரலாறு கூறுகிறது.
1 நாளாகமம் 7 : 6 (ERVTA)
பேலா, பெகேர், யெதியாயேல் எனும் மூன்று பேரும் பென்யமீனின் மகன்கள்.
1 நாளாகமம் 7 : 7 (ERVTA)
பேலாவிற்கு எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி எனும் மகன்கள் இருந்தனர். இவர்கள் தத்தம் குடும்பங்களின் தலைவர்களாக இருந்தனர். இவர்களிடம் 22,034 வீரர்கள் இருந்தார்கள் என குடும்ப வரலாறு கூறுகிறது.
1 நாளாகமம் 7 : 8 (ERVTA)
செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனாதோத், அதுமேத் ஆகியோர் பெகேரின் மகன்கள். இவர்கள் பெகேரின் பிள்ளைகள்.
1 நாளாகமம் 7 : 9 (ERVTA)
இவர்களின் குடும்ப வரலாறு குடும்பத் தலைவர்களைப்பற்றி கூறுகிறது. இவர்களிடம் 20,200 வீரர்கள் இருந்தனர் என்பதை குடும்ப வரலாறு காட்டுகிறது.
1 நாளாகமம் 7 : 10 (ERVTA)
யெதியாயேலின் மகன்களில் ஒருவன் பில்கான். ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் ஆகியோர் பில்கானின் மகன்கள்.
1 நாளாகமம் 7 : 11 (ERVTA)
யெதியாயேலின் மகன்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் போருக்குத் தயாராக 17,200 வீரர்கள் இருந்தனர்.
1 நாளாகமம் 7 : 12 (ERVTA)
சுப்பீமியர்களும், உப்பீமியர்களும் ஈரின் சந்ததியினர். ஊசிம் ஆகேரின் மகன்களில் ஒருவன்.
1 நாளாகமம் 7 : 13 (ERVTA)
யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் ஆகியோர் நப்தலியின் மகன்கள். இவர்கள் பில்காளியின் சந்ததியினர்.
1 நாளாகமம் 7 : 14 (ERVTA)
கீழ்க்கண்டவர்கள் மனாசேயின் சந்ததியினர்: மனாசே அராமிய வேலைக்காரி மூலம் அஸ்ரியேல் என்ற மகன் பிறந்தான். அவர்களுக்கு மாகீர் என்ற மகனும் இருந்தான். இவன் கீலேயாத்தின் தந்தை.
1 நாளாகமம் 7 : 15 (ERVTA)
மாகீர் உப்பீமியர் மற்றும் சுப்பீமியர்களிடமிருந்தும் ஒரு பெண்ணை மணந்துக்கொண்டான். அவளது பெயர் மாக்காள். மாகீரின் சகோதரியின் பெயரும் மாக்காள். மாக்காளின் இரண்டாவது மனைவியின் பெயர் செலோப்பியாத். செலோப்பியாத்திற்கு மகள்கள் மட்டுமே இருந்தார்கள்.
1 நாளாகமம் 7 : 16 (ERVTA)
மாகீரின் மனைவியான மாக்காளிற்கு ஒரு மகன் இருந்தான். மாக்காள் தனது மகனுக்குப் பேரேஸ் என்று பெயரிட்டாள். பேரேஸின் சகோதரனின் பெயர் சேரேஸ். சேரேசுக்கு, ஊலாம், ரேகேம் எனும் மகன்கள் இருந்தனர்.
1 நாளாகமம் 7 : 17 (ERVTA)
ஊலாம் மகன் பேதான். இவர்கள் கீலேயாத்தின் சந்ததியினர். கீலேயாத் மாகீரின் மகன். மாகீர் மனாசேயின் மகன்.
1 நாளாகமம் 7 : 18 (ERVTA)
மாகீரின் சகோதரியான அம்மொளெ கேத்திற்கு இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோர் மகன்கள்.
1 நாளாகமம் 7 : 19 (ERVTA)
அகியான், சேகேம், லிக்கே, அனியாம் ஆகியோர் செமிதாவின் மகன்கள்.
1 நாளாகமம் 7 : 20 (ERVTA)
கீழ்க்கண்டவை எப்பிராயீமின் சந்ததியினரின் பெயர்கள். எப்பிராயீமின் மகன் சுத்தெலாக். எப்பிராயீமின் மகன்களில் ஒருவன் சுத்தெலாக், சுத்தெலாக்கின் மகன் பேரேத், பேரேத்தின் மகன் தாகாத்
1 நாளாகமம் 7 : 21 (ERVTA)
தாகாத்தின் மகன் எலாதா, எலாதாவின் மகன் தாகாத், தாகாத்தின் மகன் சாபாத், சாபாத்தின் மகன் சுத்தெலாக். காத் நகரில் வளர்ந்த சிலர் எத்சோர், எலீயாத் ஆகியோரை கொன்றனர். எசேரும், எலீயட்டும் ஆடு மாடுகளைத் திருடும்பொருட்டு காத் நகருக்குச் சென்றார்கள் என்னும் காரணத்தால் இவர்கள் கொல்லப்பட்டார்கள்.
1 நாளாகமம் 7 : 22 (ERVTA)
எத்சேர், எலீயாத் ஆகியோரின் தந்தை எப்பிராயீம். இவர்கள் மரித்துப் போனதால் இவன் அதிக நாட்கள் துக்கம் கொண்டாடினான். எப்பிராயீமின் குடும்பத்தினர் வந்து ஆறுதல் சொன்னார்கள்.
1 நாளாகமம் 7 : 23 (ERVTA)
பிறகு, இவன் தன் மனைவியோடு பாலின உறவு கொண்டான். அவள் கர்ப்பமுற்று ஒரு மகனைப் பெற்றாள். அவன் தன் மகனுக்குப் பெரீயா என்று பெயர் வைத்தான். ஏனென்றால் அவன் பிறந்தபொழுது குடும்பத்துக்குப் பல தீங்குகள் ஏற்பட்டன.
1 நாளாகமம் 7 : 24 (ERVTA)
எப்பிராயீமின் மகள் பெயர் சேராள். இவள் கீழ்பெத்ரோன், மேல் பெத்ரோன், கீழ் ஊசேன் சேரா, மேல் ஊசேன் சேரா ஆகியவற்றைக் கட்டினாள்.
1 நாளாகமம் 7 : 25 (ERVTA)
எப்பிராயீமின் மகன் ரேப்பாக், ரேப் பாக்கின் மகன் ரேசேப், ரேசேப்பின் மகன் தேலாக், தேலாக்கின் மகன் தாகான்.
1 நாளாகமம் 7 : 26 (ERVTA)
தாகானின் மகன் லாதான், லாதானின் மகன் அம்மியூத், அம்மியூத்தின் மகன் எலி ஷாமா
1 நாளாகமம் 7 : 27 (ERVTA)
எலிஷாமாவின் மகன் நூன், நூனின் மகன் யோசுவா.
1 நாளாகமம் 7 : 28 (ERVTA)
கீழ்க்கண்ட நகரங்களிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் எப்பிராயீமின் சந்ததியினர் குடியிருந்தனர். அவை, பெத்தேலும், அதைச் சார்ந்த கிராமங்களும், கீழ்ப்புறமுள்ள நாரானும், மேற்கேயுள்ள கேசேரும், அதைச் சார்ந்த கிராமங்களும், சீகேமும் அதைச் சார்ந்த கிராமங்களும், அய்யா வரையுள்ள இடங்களும் அதைச் சார்ந்த கிராமங்களும்.
1 நாளாகமம் 7 : 29 (ERVTA)
மனாசே ஜனங்களின் எல்லையுள்ள மெத்செயானும், அதைச் சார்ந்த கிராமங்களும் தானாக், மெகிதோ, தோர் ஆகிய நகரங்களும் அவற்றின் அருகில் உள்ள சிறு நகரங்களும். இவ்விடங்களில் யோசேப்பின் சந்ததியினர் குடியிருந்தார்கள். யோசேப்பு இஸ்ரவேலின் மகன்.
1 நாளாகமம் 7 : 30 (ERVTA)
இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா ஆகியோர் ஆசேரின் மகன்கள். இவர்களது சகோதரியின் பெயர் சேராள்.
1 நாளாகமம் 7 : 31 (ERVTA)
ஏபேர், மல்கியேல் ஆகியோர் பெரீயாவின் மகன்கள், மல்கியேல் பிர்சாவீத்தின் தந்தை.
1 நாளாகமம் 7 : 32 (ERVTA)
ஏபேர், யப்லோத்தையும் சோமேரையும் ஒத்தாமையும் இவர்களின் சகோதரியான சூகாளையும் பிள்ளைகளாகப் பெற்றான்.
1 நாளாகமம் 7 : 33 (ERVTA)
யப்லேத்திற்குப் பாசாக், பிம்மால், அஸ்வாத் ஆகிய மகன்கள் பிறந்தனர். இவர்கள் யப்லோத்தின் பிள்ளைகள்.
1 நாளாகமம் 7 : 34 (ERVTA)
அகி, ரோகா, எகூபா, ஆராம் ஆகியோர் சோமேரின் மகன்கள்.
1 நாளாகமம் 7 : 35 (ERVTA)
சோமேரின் சகோதரன் ஏலேம். சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் ஆகியோர் ஏலேமின் மகன்கள்.
1 நாளாகமம் 7 : 36 (ERVTA)
சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா.
1 நாளாகமம் 7 : 37 (ERVTA)
பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா ஆகியோர் சோபாக்கின் மகன்கள்.
1 நாளாகமம் 7 : 38 (ERVTA)
யெத்ரேனுக்கு எப்புனே, பிஸ்பா, ஆரா ஆகிய மகன்கள் இருந்தனர்.
1 நாளாகமம் 7 : 39 (ERVTA)
உல்லாவிற்கு ஆராக், அன்னியேல், ரித்சியா ஆகிய மகன்கள் இருந்தனர்.
1 நாளாகமம் 7 : 40 (ERVTA)
இவர்கள் அனைவரும் ஆசேரின் சந்ததியினர். இவர்கள் குடும்பத் தலைவர்கள், இவர்கள் மகத்தான மனிதர்கள், இவர்கள் வலிமைமிக்க வீரர்கள், திறமைமிக்க வீரர்களான இவர்களில் 26,000 பேர் போர் செய்வதற்குத் தயாரான வீரர்களாக இருந்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: