1 நாளாகமம் 26 : 1 (ERVTA)
வாயில் காவலர்கள் வாயில் காவலர் குழு: இவர்கள் கோராகிய வம்சத்தினர். மெஷெலேமியாவும் அவனது மகன்களும் ஆவார்கள். மெஷெலேமியா கோரேயின் மகன். இவன் ஆசாப்பின் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.
1 நாளாகமம் 26 : 2 (ERVTA)
மெஷெலேமியாவிற்கு மகன்கள் இருந்தனர். சகரியா மூத்த மகன். எதியாயேல் இரண்டாவது மகன். செபதியா மூன்றாவது மகன். யதனியேல் நான்காவது மகன்,
1 நாளாகமம் 26 : 3 (ERVTA)
ஏலாம் ஐந்தாவது மகன், யோகனான் ஆறாவது மகன், எலி யோனாய் ஏழாவது மகன்.
1 நாளாகமம் 26 : 4 (ERVTA)
ஓபேத் ஏதோமினுக்கு மகன்கள் இருந்தனர். மூத்த மகன் செமாயா, இரண்டாவது மகன் யோசபாத், மூன்றாவது மகன் யோவாக், நான்காவது மகன் சாக்கார், ஐந்தாவது மகன் நெதநெயேல்,
1 நாளாகமம் 26 : 5 (ERVTA)
ஆறாவது மகன் அம்மியேல், ஏழாவது மகன் இசக்கார், எட்டாவது மகன் பெயுள்தாயி. தேவன் உண்மையாகவே ஓபேத் ஏதோமை ஆசீர்வதித்திருந்தார்.
1 நாளாகமம் 26 : 6 (ERVTA)
ஓபேத் ஏதோமின் மகனான செமாயாவிற்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் பலமுள்ளவர்களாகத் தங்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர்.
1 நாளாகமம் 26 : 7 (ERVTA)
செமாயாவுக்கு ஒத்னி, ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத், எலிகூ, செமகியா எனும் மகன்கள் இருந்தனர். எல்சாபாத்தின் உறவினர் திறமையுள்ள வேலையாட்கள்.
1 நாளாகமம் 26 : 8 (ERVTA)
இவர்கள் அனைவரும் ஓபேத் ஏதோமின் சந்ததியினர். இவர்களும் இவர்களின் மகன்களும் உறவினர்களும் வல்லமையுள்ளவர்கள், நல்ல காவலர்கள். ஓபேத் ஏதோமிற்கு 62 சந்ததியினர் இருந்தனர்.
1 நாளாகமம் 26 : 9 (ERVTA)
மெஷெலேமியாவின் மகன்களும் உறவினர்களும் பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். மொத்தத்தில் மகன்களும் உறவினர்களுமாக 18 பேர்கள் இருந்தார்கள்.
1 நாளாகமம் 26 : 10 (ERVTA)
மெராரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாயில் காவலர்கள் ஓசாவும் இருந்தான். சிம்ரி முதன்மையானவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். உண்மையில், இவன் மூத்த மகன் அல்ல, ஆனால் அவனது தந்தை இவனை முதலில் பிறந்தவனாக வைத்தான்.
1 நாளாகமம் 26 : 11 (ERVTA)
இல்க்கியா இவனது இரண்டாவது மகன், தெபலியா மூன்றாவது மகன், சகரியா நான்காவது மகன். ஆக மொத்தம் ஓராவின் மகன்களும் உறவினர்களுமாக 13 பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 26 : 12 (ERVTA)
இவர்கள் வாயில் காவல் குழுவின் தலைவர்கள். இவர்கள் சிறப்பான வழியில் கர்த்தருடைய ஆலயத்தில் பணிசெய்து வந்தனர், இது இவர்களின் உறவினர்கள் செய்தது போன்றது.
1 நாளாகமம் 26 : 13 (ERVTA)
ஒவ்வொரு குடும்பத்திற்கும் காவல் காப்பதற்கென ஒரு வாசல் கொடுக்கப்பட்டது. வாசலைத் தேர்ந்தெடுக்க இவர்கள் சீட்டுக்குலுக்கல் முறையைப் பயன்படுத்தினார்கள். முதியவர்களும், இளைஞர்களும் சமமாக நடத்தப்பட்டனர்.
1 நாளாகமம் 26 : 14 (ERVTA)
மெஷெலேமியா கிழக்கு வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பிறகு மெஷெலேமியாவின் மகனான சகரியாவிற்கு சீட்டு குலுக்கிப் போட்டனர். இவன் ஞானமுள்ள ஆலோசகனாக இருந்தான். வடவாசல் காவலுக்கு இவன் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
1 நாளாகமம் 26 : 15 (ERVTA)
ஓபேத் ஏதோம் தென்வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். இவனது மகன்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டின் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
1 நாளாகமம் 26 : 16 (ERVTA)
மேற்குவாசல் காவலுக்கு சூப்பீமும் ஓசாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல் சாலையில் இருந்த ஷெல்லகத் வாசலையும் காவல் செய்தனர். காவலர்கள் பக்கம் பக்கமாக நின்றனர்.
1 நாளாகமம் 26 : 17 (ERVTA)
ஒவ்வொரு நாளும் ஆறு லேவியர்கள் கிழக்கு வாசலில் நின்றனர். நான்கு லேவியர்கள் தினமும் வடக்கு வாசலில் நின்றனர். ஒவ்வொரு நாளும் நான்கு லேவியர்கள் தெற்கு வாசலில் நின்றார்கள். இரண்டு லேவியர்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டு வாசலைக் காவல் காத்தனர்.
1 நாளாகமம் 26 : 18 (ERVTA)
நான்கு லேவியர்கள் மேற்குப்புறமான வழியில் இருந்தனர். வெளிப்புறமான வழியில் இரண்டு லேவியர்கள் காவல் செய்தனர்.
1 நாளாகமம் 26 : 19 (ERVTA)
இவர்களே வாயில் காவலர்கள் குழுவினர். இவர்கள் கோராக் மற்றும் மெராரி குடும்பத்தினர்.
1 நாளாகமம் 26 : 20 (ERVTA)
கருவூல அதிகாரிகளும் மற்ற அதிகாரிகளும் அகியா, லேவியர் கோத்திரத்தில் உள்ளவன். தேவனுடைய ஆலயத்தில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்ட பொக்கிஷ அறைக்குப் பொறுப்பாளியாக இருந்தான். பரிசுத்தமான பொருட்கள் வைக்கப்பட்ட அறைக்கும் பொறுப்பாளியாக இவன் இருந்தான்.
1 நாளாகமம் 26 : 21 (ERVTA)
லாதான் கெர்சோனியானின் குடும்பத்தில் உள்ளவன். லாதானின் கோத்திரத்தில் யெகியேலி தலைவர்களுள் ஒருவனாயிருந்தான்.
1 நாளாகமம் 26 : 22 (ERVTA)
யெகியேலியின் மகன் சேத்தாம், சேத்தாமின் சகோதரன் யோவேல். இவர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்தனர்.
1 நாளாகமம் 26 : 23 (ERVTA)
மற்ற தலைவர்கள் அமரம், இத்சாகார், எப்ரோன், ஊசியேல் ஆகியோரின் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 26 : 24 (ERVTA)
செபுவேல் கருவூலப் பொறுப்பாளனாக இருந்தான். இவன் கெர்சோமின் மகன். கெர்சோம் மோசேயின் மகன்.
1 நாளாகமம் 26 : 25 (ERVTA)
கீழ்க்கண்டவர்கள் சுபவேலின் உறவினர்கள், எலியேசர் மூலமாக வந்த உறவினர்கள். எலியேசரின் மகனான ரெகபியா, ரெகபியாவின் மகனான எஷாயா, எஷாயாவின் மகனான யோராம், யோராமின் மகனான சிக்கிரி, சிக்கிரியின் மகனான செலோமித்.
1 நாளாகமம் 26 : 26 (ERVTA)
செலோமித்தும் இவனது உறவினர்களும் ஆலயத்திற்காக தாவீது சேகரித்த அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளரானார்கள். படையில் உள்ள அதிகாரிகளும் ஆலயத்திற்காகப் பொருட்களைக் கொடுத்தனர்.
1 நாளாகமம் 26 : 27 (ERVTA)
அவர்கள் போரில் கைப்பற்றிய பொருட்களைக் கொடுத்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயம் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்களைத் தந்தார்கள்.
1 நாளாகமம் 26 : 28 (ERVTA)
செலோமித்தும், அவனது உறவினரும் தீர்க்கதரிசியான சாமுவேலும், கீஸின் மகனான சவுலும், நேரின் மகனான அப்னேரும், செருயாவின் மகனான யோவாபும் கொடுத்த பரிசுத்தமானப் பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். ஜனங்கள் கொடுத்த பரிசுத்தமானப் பொருட்களையும் பாதுகாத்தனர்.
1 நாளாகமம் 26 : 29 (ERVTA)
இத்சாகார் குடும்பத்திலிருந்து கெனானியாவும் அவனது மகன்களும் ஆலயத்துக்கு வெளியேயுள்ளவற்றைக் கவனித்துக் கொண்டனர். அவர்கள் காவலர்களாகவும், நீதிபதிகளாகவும் இஸ்ரவேலின் பல இடங்களிலும் பணியாற்றினார்கள்.
1 நாளாகமம் 26 : 30 (ERVTA)
எப்ரோன் குடும்பத்தில் அசபியா தோன்றினான். இவனும் இவனது உறவினர்களும் கர்த்தருக்கான வேலைகள் அனைத்துக்கும் பொறுப்பாளிகளாக இருந்தனர். யோர்தான் ஆற்றுக்கு மேற்கே உள்ள இஸ்ரவேல் பகுதியில் அரசனது வேலைகளையும் கவனித்துக் கொண்டனர். 1,700 பலமிக்கவர்கள் அசபியாவின் குழுவில் இருந்தனர்.
1 நாளாகமம் 26 : 31 (ERVTA)
எப்ரோனின் வம்சவரலாறு: இவர்களின் தலைவனாக எரியா இருந்ததாகக் கூறும், தாவீதின் 40வது ஆட்சியாண்டில் குடும்ப வரலாற்றின் மூலம் திறமையும் சக்தியும் கொண்டவர்களைத் தேடும்படி கட்டளையிட்டான். அவர்களில் சிலர் எப்ரோன் வம்சத்தவர்களாக கீலேயாத் நாட்டின் ஏசேரில் கண்டுபிடித்தனர்.
1 நாளாகமம் 26 : 32 (ERVTA)
எரியாவிற்கு 2,700 உறவினர்கள் இருந்தனர். அவர்கள் வல்லமை வாய்ந்தவர்களாகவும், குடும்பத் தலைவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு தாவீது அரசன், தேவன் மற்றும் அரசனின் எல்லா வேலைகளையும் செய்யுமாறு ஆணையிட்டான். ரூபினியர், காதியர், மனாசேயின் கோத்திரத்தில் பாதிப்பேர்கள் ஆகியோரைக் கவனிக்கும்படியும் வைத்தான்.
❮
❯