1 நாளாகமம் 2 : 1 (ERVTA)
இஸ்ரவேலின் மகன்கள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
1 நாளாகமம் 2 : 2 (ERVTA)
தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் ஆகியோர் இஸ்ரவேலின் மகன்களாவார்கள்.
1 நாளாகமம் 2 : 3 (ERVTA)
யூதாவின் மகன்கள் ஏர், ஓனான், சேலா ஆகியோர் யூதாவின் மகன்கள். இந்த மூன்றுபேரும் பத்சூவா பெற்ற பிள்ளைகள். இவள் கானான் நாட்டுப் பெண். யூதாவின் முதல் மகனான ஏர், கெட்டவனாக இருப்பதைக் கர்த்தர் கண்டார். அதனால் கர்த்தர் அவனை கொன்றுவிட்டார்.
1 நாளாகமம் 2 : 4 (ERVTA)
யூதாவின் மருமகளான தாமார் அவனுக்குப் பாரேஸ், சேரா எனும் இருவரைப் பெற்றாள். ஆக யூதாவுக்கு 5 மகன்கள் இருந்தார்கள்.
1 நாளாகமம் 2 : 5 (ERVTA)
எஸ்ரோனும் ஆமூலும், பாரேசின் மகன்களாவார்கள்.
1 நாளாகமம் 2 : 6 (ERVTA)
சேராவுக்கு 5 மகன்கள். சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா ஆகியோர் ஆவார்கள்.
1 நாளாகமம் 2 : 7 (ERVTA)
சிம்ரியின் மகன் கர்மீ. கர்மீயின் மகன் ஆகார். ஆகார் இஸ்ரவேலுக்குப் பல தொல்லைகளை வரவழைத்தவன். இவன் போரில் சில பொருட்களை எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் தேவனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
1 நாளாகமம் 2 : 8 (ERVTA)
அசரியா ஏத்தானின் மகன்.
1 நாளாகமம் 2 : 9 (ERVTA)
யெர்மெயேல், ராம், கெலுபா ஆகியோர் எஸ்ரோனின் பிள்ளைகள்.
1 நாளாகமம் 2 : 10 (ERVTA)
ராமின் சந்ததியினர் ராம், அம்மினதாபின் தந்தை ஆவார். அம்மினதாப், நகசோனின் தந்தை ஆவார். நகசோன், யூத ஜனங்களின் பிரபு.
1 நாளாகமம் 2 : 11 (ERVTA)
நகசோன் சல்மாவின் தந்தை. சல்மா போவாசின் தந்தை.
1 நாளாகமம் 2 : 12 (ERVTA)
போவாஸ் ஓபேதின் தந்தை. ஓபேத் ஈசாயின் தந்தை.
1 நாளாகமம் 2 : 13 (ERVTA)
ஈசாய் எலியாபின் தந்தை. இவன் அவனது மூத்த மகன். இவனது இரண்டாவது மகன் அபினதாப். இவனது மூன்றாவது மகன் சிம்மா.
1 நாளாகமம் 2 : 14 (ERVTA)
இவனது நான்காவது மகன் நெதனெயேல், இவனது ஐந்தாவது மகன் ரதாயி.
1 நாளாகமம் 2 : 15 (ERVTA)
இவனது ஆறாவது மகன் ஓத்சேம், ஏழாவது மகன் தாவீது.
1 நாளாகமம் 2 : 16 (ERVTA)
செருயாளும் அபிகாயிலும் இவர்களது சகோதரிகள். செருயாளிற்கு அபிசாய், யோவாப், ஆசகேல் என மூன்று மகன்கள்.
1 நாளாகமம் 2 : 17 (ERVTA)
அபிகாயில் அமாசாவின் தாய், இஸ்மவேலனாகிய யெத்தேர் அமாசாவின் தந்தை.
1 நாளாகமம் 2 : 18 (ERVTA)
காலேப்பின் சந்ததியினர் காலேப் எஸ்ரோனின் மகன். காலேபிற்கு பிள்ளைகளும் அசுபா என்ற மனைவியும் இருந்தனர். அசுபா எரீயோத்தின் மகள். ஏசேர், சோபாப், அர்தோன் ஆகியோர் அவனது பிள்ளைகளாவார்கள்.
1 நாளாகமம் 2 : 19 (ERVTA)
அசுபா மரித்ததும் காலேப் எப்ராத்தை மணந்துக் கொண்டான். இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். அவர்கள் அவனுக்கு ஊர் என்று பெயரிட்டனர்.
1 நாளாகமம் 2 : 20 (ERVTA)
ஊர் ஊரியின் தந்தையானான். ஊரி பெசலெயேலின் தந்தையானான்.
1 நாளாகமம் 2 : 21 (ERVTA)
பின்னர், எஸ்ரோனுக்கு அறுபது வயது ஆனதும், அவன் மாகீரின் மகளை மணந்துக் கொண்டான். மாகீர் கிலெயாத்தின் தந்தை. எஸ்ரோன் மாகீரின் மகளோடு பாலின உறவுகொண்டான். அவள் செகூப்பை பெற்றாள்.
1 நாளாகமம் 2 : 22 (ERVTA)
செகூப் யாவீரின் தந்தை. யாவீருக்கு கிலேயாத் நிலத்தில் 23 நகரங்கள் இருந்தன.
1 நாளாகமம் 2 : 23 (ERVTA)
ஆனால் கேசூரும் ஆராமும் யாவீரின் ஊர்களை எடுத்துக்கொண்டார்கள். அவற்றுள் ஜாயிர் நகர் மற்றும் கேனாத் நகரும் அதனைச் சுற்றியுள்ள 60 சிற்றூர்களும் அடங்கும். இந்நகரங்களும் ஊர்களும் கிலேயாத்தின் தந்தையான, மாகீரின் மகன்களுக்கு உரியவை.
1 நாளாகமம் 2 : 24 (ERVTA)
எஸ்ரோன் எப்ராத்தாவில் உள்ள ஊரான காலேப்பில் மரித்தான். மரித்த பிறகு, அவன் மனைவியான அபியாள் ஒரு மகனைப் பெற்றாள். அவனது பெயர் அசூர். அவன் தெக்கொவாவின் தந்தை.
1 நாளாகமம் 2 : 25 (ERVTA)
யெர்மெயேலின் சந்ததியினர் யெர்மெயேல் எஸ்ரோனின் முதல் மகன். யெர்மெயேலுக்கு ராம், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா எனும் பிள்ளைகள் இருந்தனர். இவர்களில் ராம் மூத்த மகன்.
1 நாளாகமம் 2 : 26 (ERVTA)
யெர்மெயேலுக்கு, அத்தாராள் எனும் பேருடைய இன்னொரு மனைவியும் இருந்தாள். இவள் ஓனாமின் தாய்.
1 நாளாகமம் 2 : 27 (ERVTA)
யெர்மெயேலின் மூத்தமகனான ராமிற்குப் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மாஸ், யாமின், எக்கேர் ஆகியோராகும்.
1 நாளாகமம் 2 : 28 (ERVTA)
ஓனாவிற்கு சம்மாய், யாதா என்ற பிள்ளைகள் இருந்தனர். சம்மாயிற்கு நாதாப், அபிசூர் எனும் பிள்ளைகள் இருந்தனர்.
1 நாளாகமம் 2 : 29 (ERVTA)
அபிசூரின் மனைவியின் பெயர் அபியாயேல், அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அக்பான், மோளித் என்பவை அவர்களின் பெயர்.
1 நாளாகமம் 2 : 30 (ERVTA)
சேலேத்தும், அப்பாயிமும் நாதாப்பின் மகன்கள். சேலேத் பிள்ளைப்பேறு இல்லாமலேயே மரித்துப் போனான்.
1 நாளாகமம் 2 : 31 (ERVTA)
அப்பாயீமின் மகன் இஷி, இஷியின் மகன் சேசான், சேசானின் மகன் அக்லாய்
1 நாளாகமம் 2 : 32 (ERVTA)
யாதா சம்மாயின் சகோதரன், யெத்தெரும் யோனத்தானும் யாதாவின் மகன்கள், யெத்தெர் பிள்ளைப்பேறு இல்லாமலே மரித்துப்போனாள்.
1 நாளாகமம் 2 : 33 (ERVTA)
பேலேத்தும் சாசாவும் யோனத்தானின் மகன்கள். இதுவே யெர்மெயேலின் குடும்பப் பட்டியலாகும்.
1 நாளாகமம் 2 : 34 (ERVTA)
சேசானுக்கு மகன்கள் இல்லை. அவனுக்கு குமாரத்திகளே இருந்தனர். சேசாறுக்கு எகிப்திலுள்ள யர்கா என்ற பேருள்ள வேலைக்காரன் இருந்தான்.
1 நாளாகமம் 2 : 35 (ERVTA)
சேசான்யர்காவைத் தன் மகள் மணந்துகொள்ளும்படி அனுமதித்தான். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் அத்தாயி.
1 நாளாகமம் 2 : 36 (ERVTA)
அத்தாயி நாதானின் தந்தை, நாதான் சாபாத்தின் தந்தை,
1 நாளாகமம் 2 : 37 (ERVTA)
சாபாத் எப்லாலின் தந்தை, எப்லால் ஓபேத்தின் தந்தை,
1 நாளாகமம் 2 : 38 (ERVTA)
ஓபேத் ஏகூவின் தந்தை, ஏகூ அசரியாவின் தந்தை,
1 நாளாகமம் 2 : 39 (ERVTA)
அசரியா ஏலேத்ஸின் தந்தை, ஏலேத்ஸ் எலெயாசாவின் தந்தை,
1 நாளாகமம் 2 : 40 (ERVTA)
எலெயாசா சிஸ்மாயின் தந்தை, சிஸ்மாய் சல்லூமின் தந்தை,
1 நாளாகமம் 2 : 41 (ERVTA)
சல்லூம் எக்கமியாவின் தந்தை, எக்கமியா எலிசாமாவின் தந்தை.
1 நாளாகமம் 2 : 42 (ERVTA)
காலேபின் குடும்பம் காலேப் யெர்மெயேலின் சகோதரன். காலேபின் முதல் மகன் மேசா. மேசா சீப்பின் தந்தை. மேசாவின் மற்றொரு மகன் மெரேசா. மெரேசா எப்ரோனின் தந்தை.
1 நாளாகமம் 2 : 43 (ERVTA)
கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா ஆகியோர் எப்ரோனின் மகன்கள்.
1 நாளாகமம் 2 : 44 (ERVTA)
செமாராகிமின் தந்தை. ராகிம் யோர்க்கேயாமின் தந்தை. ரெக்கேம் சம்மாயின் மகன்.
1 நாளாகமம் 2 : 45 (ERVTA)
சம்மாய் மாகோனின் தந்தை, மாகோன் பெத்சூரின் தந்தை.
1 நாளாகமம் 2 : 46 (ERVTA)
காலேபின் வேலைக்காரியாக எப்பாள் இருந்தாள். அவள் ஆரான், மோசா, காசே ஆகியோரின் தாய். ஆரான் காசேசின் தந்தை.
1 நாளாகமம் 2 : 47 (ERVTA)
ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் ஆகியோர் யாதாயின் மகன்கள்.
1 நாளாகமம் 2 : 48 (ERVTA)
மாகா காலேப்பின் இன்னொரு வேலைக்காரி. அவள் சேபேர் திர்கானா ஆகியோரின் தாயானாள்.
1 நாளாகமம் 2 : 49 (ERVTA)
மாகா, சாகாப், சேவா ஆகியோருக்கும் தாயானாள். சாகாப் மத்மன்னாவின் தந்தையானான். சேவா மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தந்தையானான். காலேபின் மகள் அக்சாள்.
1 நாளாகமம் 2 : 50 (ERVTA)
இது காலேபின் சந்ததியாரின் விபரமாகும். ஊர், காலேபின் முதல் மகன். அவன் எப்ராத்தானிடம் பிறந்தான். கீரியாத் யாரீமை உருவாக்கிய சோபால்,
1 நாளாகமம் 2 : 51 (ERVTA)
பெத்லெகேமை உருவாக்கிய சல்மா, பெத்காதேரை உருவாக்கிய ஆரேப்பு ஆகியோர் ஊரின் மகன்கள் ஆவார்கள்.
1 நாளாகமம் 2 : 52 (ERVTA)
சோபால் கீரியாத்யாரீமினை உருவாக்கியவன். இது சோபாலின் சந்ததியாரின் விபரம். ஆராவோ, ஆசியம் மெனுகோத்தின் பாதியளவு ஜனங்களும்
1 நாளாகமம் 2 : 53 (ERVTA)
கீரியாத்யாரீமின் கோத்திரங்களும் எத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோர் ஆவார்கள். மிஸ்ராவியரிடமிருந்து சோராத்தியரும் எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.
1 நாளாகமம் 2 : 54 (ERVTA)
இது சல்மா சந்ததியின் விபரமாகும்: பெத்லேகேம், நேத்தோபாத், அதரோத், பெத்யோவாப் ஆகிய நகர ஜனங்களும் மானாத்தியரில் பாதி ஜனங்களும் சோரியரில் பாதி ஜனங்களும்
1 நாளாகமம் 2 : 55 (ERVTA)
யாபேசில் குடியிருந்த எழுத்தாளர்களின் குடும்பங்கள், திராத்தியரும், சிமாத்தியரும் சுக்காத்தியரும் ஆவர். பெத்ரேகாப்பின் தந்தையான அம்மாத்திலிருந்து வந்த கேனியர்களே கணக்கர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55