செப்பனியா 1 : 1 (ECTA)
ஆமோனின் மகன் யோசியா யூதாவின் அரசனாய் இருந்தபொழுது செப்பனியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. இவர் எசேக்கியாவின் கொள்ளுப் பேரனும் அமரியாவின் பேரனும் கெதலியாவின் மகனுமான கூசியின் மைந்தர் ஆவார். [* 2 அர 22:1-23:30; 2 குறி 34:1-35:27.. ]
செப்பனியா 1 : 2 (ECTA)
ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள் “மண்ணுலகில் எதுவும் இராதவாறு
செப்பனியா 1 : 3 (ECTA)
அனைத்தையும் அழித்துவிடுவேன்,” என்கிறார் ஆண்டவர். “மனிதரையும் விலங்குகளையும் அழிப்பேன்; வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் ஒழிப்பேன்; கொடியவர்களை இடறிவிழச் செய்வேன்; மனிதஇனம் மண்ணுலகில் இல்லாதவாறு அற்றுப் போகச் செய்வேன்,” என்கிறார் ஆண்டவர்.
செப்பனியா 1 : 4 (ECTA)
யூதாவுக்கும் எருசலேமில் வாழும் அனைவர்க்கும் எதிராக நான் கையை ஓங்குவேன். பாகால் வழிபாட்டில் எஞ்சியிருப்பதையும் அந்தச் சிலை வழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் அழித்து விடுவேன்.
செப்பனியா 1 : 5 (ECTA)
வீட்டின் மேல்தளத்திலிருந்து வான் படைகளை வணங்குவோரையும், ஆண்டவரை வணங்கி அவர் பெயராலும் மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும் ஆணையிடுவோரையும் ஒழித்து விடுவேன்.
செப்பனியா 1 : 6 (ECTA)
ஆண்டவரைவிட்டு விலகிச் செல்வோரையும் ஆண்டவரைத் தேடாது, அவரை அறிய முயலாது இருப்போரையும் அழித்துவிடுவேன்.
செப்பனியா 1 : 7 (ECTA)
தலைவராகிய ஆண்டவர் திருமுன் மௌனமாயிருங்கள்; ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; பலி ஒன்றை ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்; தாம் அழைத்தவர்களை அவர் புனிதப்படுத்தியுள்ளார்
செப்பனியா 1 : 8 (ECTA)
ஆண்டவரது பலியின் நாளில் தலைவர்களையும் அரசனுடைய புதல்வர்களையும் வெளிநாட்டு ஆடை அணிந்துள்ள அனைவரையும் தண்டிப்பேன்.
செப்பனியா 1 : 9 (ECTA)
வாயிற்படியை மிதிக்காமல் தாண்டி வந்து, தங்கள் தலைவனின் வீட்டை வன்செயலாலும் வஞ்சனையாலும் நிரப்புகிறவர்களை அந்நாளில் தண்டிப்பேன்.
செப்பனியா 1 : 10 (ECTA)
ஆண்டவர் கூறுகின்றார்: “அந்நாளில் எருசலேமின் மீன் வாயிலிருந்து கூக்குரலும், புதிய நகர்ப் பகுதியிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து இடிந்துவிழும் பேரொலியும் கேட்கும்.
செப்பனியா 1 : 11 (ECTA)
நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்போரே! கதறி அழுங்கள்; ஏனெனில், வணிகர் அனைவர்க்கும் அழிவு வருகின்றது; பணம் படைத்தவர் அனைவரும் வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்;
செப்பனியா 1 : 12 (ECTA)
அக்காலத்தில், நான் கையில் விளக்கேந்திக் கொண்டு எருசலேமைச் சோதித்துப் பார்ப்பேன்; ‘ஆண்டவர் நன்மையும் செய்யார்; தீமையும் செய்யார்’ என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு பஞ்சணையில் சாய்ந்து கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன்.
செப்பனியா 1 : 13 (ECTA)
அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்படும்; வீடுகள் பாழாக்கப்படும்; அவர்கள் வீடுகள் கட்டிக்கொள்வார்கள்; ஆனால் அவற்றில் குடியிருக்கப்போவதில்லை; திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்தாலும், அவற்றின் இரசத்தைக் குடிக்கப் போவதில்லை.”
செப்பனியா 1 : 14 (ECTA)
ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது; அது விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது; ஆண்டவரது நாளின் பேரொலி கசப்பை உண்டாக்கும்; மாவீரனையும் கலங்கி அலறும்படி செய்யும்.
செப்பனியா 1 : 15 (ECTA)
அந்த நாள் கடும் சினத்தின் நாள்; துன்பமும் துயரமும் நிறைந்த நாள்; பேரழிவும் பேரிழப்பும் கொண்டு வரும் நாள்; இருட்டும் காரிருளும் கவிந்த நாள்;
செப்பனியா 1 : 16 (ECTA)
அரண்சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக எக்காளமும் போர் முழக்கமும் கேட்கும் நாள்.
செப்பனியா 1 : 17 (ECTA)
மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்; பார்வையற்றோர்போல் அவர்கள் தடுமாறுவர்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தனர்; அவர்களது இரத்தம் புழுதி போல் கொட்டப்படும்; சதைப்பிண்டம் சாணம்போல் எறியப்படும்.
செப்பனியா 1 : 18 (ECTA)
ஆண்டவரது சினத்தின் நாளில், அவர்களது வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றா. உலகம் முழுவதும் அவரது வெஞ்சினத் தீக்கு இரையாகும். உலகில் வாழும் அனைவரையும் அவர் நொடிப்பொழுதில் முற்றிலும் அழித்துவிடுவார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18