சகரியா 6 : 1 (ECTA)
நான்கு தேர்கள் பற்றிய காட்சி மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இரு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் புறப்பட்டு வருவதைக் கண்டேன்; அம்மலைகள் வெண்கல மலைகள்.
சகரியா 6 : 2 (ECTA)
முதல் தேரில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாவது தேரில் கறுப்புக் குதிரைகளும், [* திவெ 6: 45 ]
சகரியா 6 : 3 (ECTA)
மூன்றாவதில் வெள்ளைக் குதிரைகளும், நான்காவதில் புள்ளிகளை உடைய கறுப்புநிற வலிமையான குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன. [* திவெ 6: 2 ]
சகரியா 6 : 4 (ECTA)
என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரிடம் நான் “என் தலைவரே! இவை என்ன?” என்று கேட்டேன்.
சகரியா 6 : 5 (ECTA)
அத்தூதர், “இவை அனைத்துலக ஆண்டவரின் திருமுன்னிருந்து புறப்பட்டுச் செல்கின்ற வாகனத்தின் நாற்றிசைக் காற்றுகள். [* திவெ 7: 1 ]
சகரியா 6 : 6 (ECTA)
கறுப்புக் குதிரைகள் பூட்டிய தேர் வடநாட்டை நோக்கிச் செல்கிறது; வெண்ணிறக் குதிரைகள் அவற்றைப் பின்தொடர்ந்து போகின்றன; புள்ளியுள்ள கறுப்புநிறக் குதிரைகளோ தென்னாட்டை நோக்கிச் செல்கின்றன” என்று கூறினார்.
சகரியா 6 : 7 (ECTA)
வலிமையான குதிரைகள் புறப்பட்டுச் சென்று உலகெங்கும் சுற்றிவருவதற்குத் துடித்தன. அப்போது அவர், “போய் உலகைச் சுற்றி வாருங்கள்” என்றார். அவ்வாறே அவை உலகெங்கும் சுற்றித் திரிந்தன.
சகரியா 6 : 8 (ECTA)
பின்பு அவர் என்னை நோக்கிக் கூக்குரலிட்டு, “இதோ பார்! வடநாட்டை நோக்கிச் சென்றவை அந்நாட்டில் எனது உள்ளம் அமைதி கொள்ளும்படி செய்திருக்கின்றன” என்றார்.
சகரியா 6 : 9 (ECTA)
யோசுவாவை முடிசூட்டுவிக்க ஆண்டவரது கட்டளை மீண்டும் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது:
சகரியா 6 : 10 (ECTA)
நாடுகடத்தப்பட்டுப் பாபிலோனிலிருந்து திரும்பி வந்திருக்கின்ற என் தாய், தோபியா, எதாயா என்பவர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக்கொள்; அன்றைக்கே செப்பனியாவின் மகனான யோசியாவின் இல்லத்திற்குப் போ.
சகரியா 6 : 11 (ECTA)
அங்கே அவர்களிடம் பெற்றுக்கொண்ட பொன் வெள்ளியைக் கொண்டு முடி செய்து, தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமான யோசுவாவின் தலையில் அதைச் சூட்டு;
சகரியா 6 : 12 (ECTA)
சூட்டியபின் இவ்வாறு சொல்: “படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, ‘தளிர்’ என்னும் பெயர் கொண்ட மனிதர் தம் இடத்திலிருந்து துளிர்ப்பார்; ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்புவார்; * எரே 23:5; 33:15; செக் 3:8..
சகரியா 6 : 13 (ECTA)
ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்புவதுமன்றி, அரச மாண்பைக் கொண்டவராய், அரியணையில் வீற்றிருந்து அவர் ஆட்சி செலுத்துவார்; ஓர் குருவும் தமது அரியணையில் அமர்ந்திருப்பார்;
சகரியா 6 : 14 (ECTA)
அவர்கள் இருவர்க்கிடையேயும் நல்லிணக்கம் நிலைபெறும். அந்த மணிமுடி ஆண்டவரின் கோவிலில் எல்தாய், தொபியா, எதாயா என்பவர்களுக்கும் செப்பனியாவின் மகன் யோசியாவிற்கும் நினைவுச் சின்னமாய் இருக்கும்.
சகரியா 6 : 15 (ECTA)
தொலையில் இருப்போரும் வந்து ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்பத் துணைபுரிவர்; அப்போது படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு ஆர்வத்துடன் செவிசாய்த்து நடந்தீர்களானால் இவையெல்லாம் நிறைவேறும்.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15