தீத்து 2 : 1 (ECTA)
3.திருச்சபையில் பல்வேறு குழுக்களின் கடமைகள் நீயோ நலந்தரும் போதனைக்கேற்பப் பேசு.
தீத்து 2 : 2 (ECTA)
வயது முதிர்ந்த ஆண்கள் அறிவுத்தெளிவு, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்களாய் இருந்து நம்பிக்கை, அன்பு, மனஉறுதி ஆகியவற்றை நன்கு காத்துக்கொள்ளச் சொல்.
தீத்து 2 : 3 (ECTA)
அவ்வாறே வயது முதிர்ந்த பெண்களும் தூய நடத்தை உடையவர்களாய், புறங்கூறாதவர்களாய், குடிவெறிக்கு அடிமை ஆகாதவர்களாய், நற்போதனை அளிப்பவர்களாய் இருக்குமாறு கூறு.
தீத்து 2 : 4 (ECTA)
இவ்வாறு கற்றுக் கொடுப்பதால் இளம்பெண்கள் தங்கள் கணவரிடமும் பிள்ளைகளிடமும் அன்பு காட்டி,
தீத்து 2 : 5 (ECTA)
கட்டுப்பாடும் கற்பும் உள்ளவர்களாய் வீட்டுவேலைகளைச் செவ்வனே செய்பவர்களாய்த் தங்கள் கணவருக்குப் பணிந்திருப்பார்கள். அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது.
தீத்து 2 : 6 (ECTA)
அவ்வாறே இளைஞரும் கட்டுப்பாடு உள்ளவராய் இருக்க அறிவுரை கூறு.
தீத்து 2 : 7 (ECTA)
நற்செயல்களைச் செய்வதில் எல்லாவகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடு.
தீத்து 2 : 8 (ECTA)
யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத நலந்தரும் வார்த்தைகளைப் பேசு. அப்பொழுது எதிரிகள் நம்மைப்பற்றித் தீயன பேச எதுவுமின்றி வெட்கிப் போவார்கள்.
தீத்து 2 : 9 (ECTA)
அடிமைகள் தங்கள் தலைவர்களுக்கு அனைத்திலும் பணிந்து நடந்து, அவர்களுக்கு உகந்தவர்களாய் இருக்கவேண்டும் எதிர்த்துப் பேசலாகாது எனக் கூறு.
தீத்து 2 : 10 (ECTA)
அவர்கள் கையாடல் செய்யாது, முழு நம்பிக்கைக்குரிய நல்லவர்கள் என்று நடத்தையில் காட்ட வேண்டும். அப்பொழுது நம் மீட்பராம் கடவுளின் போதனை எல்லா வகையிலும் சிறப்புப் பெறும்.
தீத்து 2 : 11 (ECTA)
ஏனெனில், மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.
தீத்து 2 : 12 (ECTA)
நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம்.
தீத்து 2 : 13 (ECTA)
மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது.
தீத்து 2 : 14 (ECTA)
அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார். * விப 19:5; இச 4:20; 7:6; 14:2; 1 பேது 2:9..
தீத்து 2 : 15 (ECTA)
நீ இவைபற்றிப் பேசு முழு அதிகாரத்தோடும் அறிவுறுத்திக் கடிந்து கொள். யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15