ரோமர் 14 : 1 (ECTA)
சகோதரர் சகோதரிகளுக்குத் தீர்ப்பு அளிக்காதீர்கள் நம்பிக்கையில் வலுவற்றவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஆனால், கருத்து வேறுபாடுகளைப் பற்றி அவர்களோடு வாதாடாதீர்கள். [* கொலோ 2: 16 ]
ரோமர் 14 : 2 (ECTA)
நம்பிக்கை கொண்டோர் எல்லா வகை உணவையும் உண்ணலாம் எனக் கருதுகின்றனர்; வலுவற்றவரோ மரக்கறியையே உண்கின்றனர். [* கொலோ 2: 16 ]
ரோமர் 14 : 3 (ECTA)
எல்லாவகை உணவையும் உண்போர் அவ்வாறு உண்ணாதோரை இழிவாக எண்ணலாகாது; உண்ணாதோரும் உண்பவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தல் ஆகாது. ஏனெனில், கடவுள் அவர்களையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். [* கொலோ 2: 16 ]
ரோமர் 14 : 4 (ECTA)
வேறொருவருடைய வீட்டு வேலையாளிடம் குற்றம்காண்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர் நன்கு செயலாற்றுகிறாரா இல்லையா எனத் தீர்மானிப்பது அவர் தலைவரின் பொறுப்பு. அவர் நன்குதான் செயல்படுவார். ஏனெனில், தலைவர் அவரை நன்கு செயல்பட வைக்கமுடியும். [* கொலோ 2: 16 ]
ரோமர் 14 : 5 (ECTA)
ஒருநாள் மற்றொரு நாளைவிடச் சிறந்தது எனச் சிலர் கருதுகின்றனர்; வேறு சிலர் எல்லா நாளையும் ஒன்று போலவே கருதுகின்றனர். இத்தகையவற்றில், ஒவ்வொருவரும் தம் மனத்தில் செய்து கொண்ட முடிவின்படி நடக்கட்டும். [* கொலோ 2: 16 ]
ரோமர் 14 : 6 (ECTA)
மேற்சொன்னவாறு ஒரு குறிப்பிட்ட நாளைச் சிறப்பாகக் கடைப்பிடிப்பவர் ஆண்டவருக்காகவே அப்படிச் செய்கிறார். எல்லா வகை உணவையும் உண்போர் கடவுளுக்கு நன்றிகூறி உண்பதால், ஆண்டவருக்காகவே உண்கின்றனர். அவ்வாறு உண்ணாதிருப்போரும் ஆண்டவருக்காகவே உண்ணாதிருக்கின்றனர்; ஏனெனில், அவர்களும் கடவுளுக்கு நன்றி கூறுகின்றார்கள். [* கொலோ 2: 16 ]
ரோமர் 14 : 7 (ECTA)
நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை.
ரோமர் 14 : 8 (ECTA)
வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
ரோமர் 14 : 9 (ECTA)
ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சிசெலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.
ரோமர் 14 : 10 (ECTA)
அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா? [* 2 கொரி 5: 10 ]
ரோமர் 14 : 11 (ECTA)
ஏனெனில், “ஆண்டவர் சொல்கிறார்; நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்; முழங்கால் அனைத்தும் எனக்கு முன் மண்டியிடும். நாவு அனைத்தும் என்னைப் போற்றும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! [* எசா 45: 23 ]
ரோமர் 14 : 12 (ECTA)
ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்.
ரோமர் 14 : 13 (ECTA)
சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாய் இராதீர் ஆகையால், இனி ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருப்போம். மேலும், சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாகவோ இடையூறாகவோ இருப்பதில்லை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ரோமர் 14 : 14 (ECTA)
தன்னிலேயே எப்பொருளும் தீட்டானது அல்ல என, ஆண்டவர் இயேசுவுடன் இணைந்து வாழும் எனக்குத் தெரியும். இது என் உறுதியான நம்பிக்கை. எனினும், ஒரு பொருள் தீட்டானது எனக் கருதுவோருக்கு அது தீட்டானதாகவே இருக்கும்.
ரோமர் 14 : 15 (ECTA)
நீங்கள் உண்ணும் உணவு உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மனவருத்தம் உண்டாக்கினால் நீங்கள் அன்பு நெறியில் நடப்பவர்கள் அல்ல. உணவை முன்னிட்டு நீங்கள் அவர்களை அழிவுறச் செய்யாதீர்கள்; அவர்களுக்காகக் கிறிஸ்து உயிர்துறக்கவில்லையா?
ரோமர் 14 : 16 (ECTA)
ஆகவே, உங்களுக்கு நன்மையாய் இருப்பது பிறருடைய பழிச்சொல்லுக்கு இடந்தராதிருப்பதாக!
ரோமர் 14 : 17 (ECTA)
இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது.
ரோமர் 14 : 18 (ECTA)
இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர் கடவுளுக்கு உகந்தோராயும் மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பர்.
ரோமர் 14 : 19 (ECTA)
ஆகையால், அமைதிக்கு வழிவகுப்பவற்றை நாடுவோமாக! ஒருவர் மற்றவருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய முயலுவோமாக!
ரோமர் 14 : 20 (ECTA)
உணவின் பொருட்டுக் கடவுளின் படைப்பை அழிக்காதீர். எல்லா உணவும் தூயதுதான்; ஆனால் அடுத்தவருக்குத் தடையாக அமையும் எந்த உணவும் அதை உண்போருக்குத் தீயதுதான்.
ரோமர் 14 : 21 (ECTA)
உங்கள் சகோதரர் சகோதரிகளுக்குத் தடையாக இருக்குமாயின், இறைச்சி உண்பதையோ, திராட்சை மது குடிப்பதையோ, அதுபோன்ற வேறெதையும் செய்வதையோ தவிர்ப்பதே நல்லது. * 1 கொரி 8:13..
ரோமர் 14 : 22 (ECTA)
இவற்றைப்பற்றிய உறுதியான மனநிலை உங்களுக்கிருந்தால், அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்; அது கடவுளுக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும். தேர்ந்து தெளிந்து எடுத்த முடிவைச் செயல்படுத்தும்போது மனச்சான்றின் உறுத்தலுக்கு ஆளாகாதோர் பேறுபெற்றோர்.
ரோமர் 14 : 23 (ECTA)
நல்லதோ கெட்டதோ என்னும் ஐயத்தோடு உண்போர் தண்டனைத் தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில், அவர்கள் உறுதியான மனநிலையோடு செயல்படவில்லை. உறுதியான மனநிலையோடு செய்யப்படாததெல்லாம் பாவமே.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23