வெளிபடுத்தல் 22 : 1 (ECTA)
பின்பு, அந்த வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு, [* எசே 47:1; செக் 14: 8 ]
வெளிபடுத்தல் 22 : 2 (ECTA)
நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வுதரும் மரம் இருந்தது.* மாதத்திற்கு ஒருமுறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனி தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை. [* தொநூ 2: 9 ; * ‘நகரின் தெரு நடுவிலும் ஆற்றின் இரு மருங்கிலும் வாழ்வு தரும் மரங்கள் இருந்தன’ என்றும் மொழிபெயர்க்கலாம். ]
வெளிபடுத்தல் 22 : 3 (ECTA)
சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; [* செக் 14: 11 ]
வெளிபடுத்தல் 22 : 4 (ECTA)
அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும்.
வெளிபடுத்தல் 22 : 5 (ECTA)
இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள். [* எசா 60:19; தானி 7: 18 ]
வெளிபடுத்தல் 22 : 6 (ECTA)
கிறிஸ்துவின் வருகை பின்னர், அந்த வானதூதர் என்னிடம், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார்.
வெளிபடுத்தல் 22 : 7 (ECTA)
இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.
வெளிபடுத்தல் 22 : 8 (ECTA)
யோவானாகிய நானே இவற்றையெல்லாம் கண்டேன், கேட்டேன். அப்பொழுது இவற்றை எனக்குக் காட்டிய வானதூதரை வணங்கும் பொருட்டு அவருடைய காலடியில் விழுந்தேன்.
வெளிபடுத்தல் 22 : 9 (ECTA)
அவரோ என்னிடம், “வேண்டாம். உனக்கும் இறைவாக்கினர்களான உன் சகோதரர் சகோதரிகளுக்கும், இந்த நூலில் உள்ள வாக்குகளைக் கடைப்பிடிப்போருக்கும் நான் உடன் பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” என்றார்.
வெளிபடுத்தல் 22 : 10 (ECTA)
அவர் தொடர்ந்து என்னிடம் பின்வருமாறு கூறினார்: “இந்த நூலில் உள்ள இறைவாக்குகளை முத்திரையிட்டு வைக்காதே; இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.
வெளிபடுத்தல் 22 : 11 (ECTA)
இதற்கிடையில், தீங்குபுரிவோர் தீங்குபுரிந்து கொண்டே இருக்கட்டும்; இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற்றைச் செய்து கொண்டே இருக்கட்டும்; தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும். [* தானி 12: 10 ]
வெளிபடுத்தல் 22 : 12 (ECTA)
“இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது. [* எசா 40:10; 62:11; திபா 28:4; எரே 17: 10 ]
வெளிபடுத்தல் 22 : 13 (ECTA)
அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே. [* திவெ 1:8, 17; 2:8; எசா 44:6; 48: 12 ]
வெளிபடுத்தல் 22 : 14 (ECTA)
“தங்கள் ஆடைகளைத் துவைத்துக் கொண்டோர் பேறுபெற்றோர். வாழ்வு தரும் மரத்தின்மீது அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் வாயில்கள் வழியாக நகருள் நுழைவார்கள்.
வெளிபடுத்தல் 22 : 15 (ECTA)
நடத்தைகெட்டோர்,* சூனியக்காரர், பரத்தைமையில் ஈடுபடுவோர், கொலையாளிகள், சிலைவழிபாட்டினர், பொய்ம்மை நாடி அதன்படி நடப்போர் ஆகிய அனைவரும் அதில் நுழைய மாட்டார்கள். * ‘நாய்கள்’ என்பது மூலப்பாடம்..
வெளிபடுத்தல் 22 : 16 (ECTA)
10.முடிவுரை “திருச்சபைகளுக்காக உங்கள்முன் இவ்வாறு சான்று பகருமாறு இயேசுவாகிய நான் என் வானதூதரை அனுப்பியுள்ளேன். தாவீதின் குலக்கொழுந்தும், வழித்தோன்றலும் நானே! ஒளிபடைத்த விடிவெள்ளியும் நானே!” [* எசா 11:1, 10 ]
வெளிபடுத்தல் 22 : 17 (ECTA)
தூய ஆவியாரும் ஆட்டுக்குட்டியின் மணமகளும் சேர்ந்து, “வருக! வருக!” என்கிறார்கள். இதைக் கேட்போரும், “வருக! வருக!” எனச் சொல்லட்டும். தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும்.” [* எசா 55: 1 ]
வெளிபடுத்தல் 22 : 18 (ECTA)
இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்: இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார். [* இச 4:2, 12: 32 ]
வெளிபடுத்தல் 22 : 19 (ECTA)
இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார். [* இச 4:2, 12: 32 ]
வெளிபடுத்தல் 22 : 20 (ECTA)
இவற்றுக்குச் சான்று பகர்பவர், “ஆம், விரைவாகவே வருகிறேன்” என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.
வெளிபடுத்தல் 22 : 21 (ECTA)
ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21