வெளிபடுத்தல் 16 : 1 (ECTA)
7.ஏழு கிண்ணங்கள் கோவிலிருந்து ஒலித்த ஒரு பெரும் குரலைக் கேட்டேன். “புறப்பட்டுச் செல்லுங்கள்; ஏழு கிண்ணங்களிலும் இருந்த கடவுளின் சீற்றத்தை மண்ணுலகின் மீது ஊற்றுங்கள்” என்று அந்த ஏழு வானதூதர்களுக்கும் அது சொன்னது.
வெளிபடுத்தல் 16 : 2 (ECTA)
உடனே முதலாம் வானதூதர் சென்று, தம் கிண்ணத்தில் இருந்ததை மண்ணுலகின்மீது ஊற்றினார். விலங்குக்குரிய குறியை இட்டுக்கொண்டு அதன் சிலையை வணங்கி வந்த மனிதர்மீது கொடிய துன்பம் தரக்கூடிய புண்கள் உண்டாயின. [* விப 9: 10 ]
வெளிபடுத்தல் 16 : 3 (ECTA)
பின் இரண்டாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததைக் கடலில் ஊற்றினார். அப்பொழுது அது இறந்தோரின் இரத்தம் போன்று மாறியது. உடனே கடல்வாழ் உயிரினங்கள் எல்லாம் மடிந்தன.
வெளிபடுத்தல் 16 : 4 (ECTA)
மூன்றாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததை ஆறுகள்மீதும் நீரூற்றுகள்மீதும் ஊற்றினார். உடனே அவையும் இரத்தம்போல மாறின. [* விப 7:17-21; திபா 78: 44 ]
வெளிபடுத்தல் 16 : 5 (ECTA)
நீர்நிலைகள் மீது அதிகாரம் கொண்டிருந்த வானதூதர் பின்வருமாறு சொல்லக் கேட்டேன்: “இருக்கின்றவரும் இருந்தவருமான தூயவரே, இத்தீர்ப்புகளை வழங்கும் நீர் நீதியுள்ளவர்.
வெளிபடுத்தல் 16 : 6 (ECTA)
இறைமக்களுடையவும் இறைவாக்கினர்களுடையவும் இரத்தத்தைச் சிந்திய மானிடருக்கு நீர் இரத்தத்தையே குடிக்கக் கொடுத்தீர். இது அவர்களுக்குத் தகுந்த தண்டனையே.”
வெளிபடுத்தல் 16 : 7 (ECTA)
அப்பொழுது பலிபீடத்திலிருந்து நான் கேட்ட குரல், “ஆம், கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் தீர்ப்புகள் உண்மையுள்ளவை, நீதியானவை” என்றது.
வெளிபடுத்தல் 16 : 8 (ECTA)
நான்காம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததைக் கதிரவன்மீது ஊற்றினார். அதனால் மனிதரை நெருப்பாய் எரிக்கும் வன்மையை அது பெற்றது.
வெளிபடுத்தல் 16 : 9 (ECTA)
உடனே மனிதர் கடும் வெப்பத்தால் எரிக்கப்பட்டனர். இந்த வாதைகள் மீது அதிகாரம் கொண்டிருந்த கடவுளின் பெயரை அவர்கள் பழித்தார்களே தவிர, மனம் மாறி அவரைப் போற்றிப் புகழவில்லை.
வெளிபடுத்தல் 16 : 10 (ECTA)
ஐந்தாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததை விலங்கு வீற்றிருந்த அரியணைமீது ஊற்றினார். உடனே அதன் அரசை இருள் கவ்விக்கொண்டது. துன்பம் தாங்க முடியாதவர்களாய் மனிதர் தங்கள் நாவைக் கடித்துக் கொண்டனர். [* விப 10: 21 ]
வெளிபடுத்தல் 16 : 11 (ECTA)
தங்கள் துன்பத்தையும் புண்களையும் முன்னிட்டு விண்ணகக் கடவுளைப் பழித்தார்களே தவிர, தங்கள் செயல்களைவிட்டு மனம் மாறவில்லை.
வெளிபடுத்தல் 16 : 12 (ECTA)
ஆறாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததை யூப்பிரத்தீசு பேராற்றில் ஊற்றினார். உடனே அதன் தண்ணீர் வற்றிப்போனது. அதனால் கீழை நாட்டு மன்னர்கள் பயன்படுத்த பாதை உண்டாயிற்று. [* எசா 11: 15 ]
வெளிபடுத்தல் 16 : 13 (ECTA)
அரக்கப் பாம்பின் வாயினின்றும் போலி இறைவாக்கினர்களின் வாயினின்றும் தவளை போன்ற மூன்று தீய ஆவிகள் வெளிவரக் கண்டேன்.
வெளிபடுத்தல் 16 : 14 (ECTA)
அவை அரும் அடையாளங்கள் புரியும் பேய்களின் ஆவிகள்; எல்லாம் வல்ல கடவுளின் பெரும் நாளில் போர் புரிந்திட உலகு அனைத்தின் அரசர்களை ஒன்று கூட்ட அவை புறப்பட்டுச் சென்றன.
வெளிபடுத்தல் 16 : 15 (ECTA)
“இதோ! நான் திருடனைப் போல வருகிறேன். தாங்கள் ஆடை இன்றி நடப்பதையும் பிறந்த மேனியாய் இருப்பதையும் பிறர் பார்த்திடாதவாறு தங்களின் ஆடைகளை ஆயத்தமாக வைத்திருப்போரும் விழிப்பாய் இருப்போரும் பேறுபெற்றோர்.” [* மத் 24:43,44; லூக் 12:39,40; திவெ 3: 3 ]
வெளிபடுத்தல் 16 : 16 (ECTA)
எபிரேய மொழியில் 'அருமகதோன்' எனப்படும் இடத்தில் அந்த ஆவிகள் அரசர்களை ஒன்று கூட்டின. [* 2 அர 23:29; செக் 12: 11 ]
வெளிபடுத்தல் 16 : 17 (ECTA)
ஏழாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததை வான்வெளியில் ஊற்றினார். அப்பொழுது கோவிலின் அரியணையிலிருந்து, “எல்லாம் நிறைவேற்றப்பட்டாயிற்று” என்று ஒரு பெரும் குரல் ஒலித்தது.
வெளிபடுத்தல் 16 : 18 (ECTA)
உடனே மின்னலும் இரைச்சலும் இடிமுழக்கமும் உண்டாயின. பெரியதொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. மனிதர் மண்ணில் தோன்றிய நாள்முதல் இத்துணை பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதே இல்லை. [* திவெ 8:5; 11:13, 19 ]
வெளிபடுத்தல் 16 : 19 (ECTA)
அந்த மாநகர் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. மற்ற நாடுகளின் நகர்களும் வீழ்ந்தன. கடவுள் பாபிலோன் மாநகரை நினைவில் கொண்டு தம் கடும் சீற்றம் என்ற மது நிரம்பிய கிண்ணத்தை அதற்குக் குடிக்கக் கொடுத்தார். [* எசா 51: 17 ]
வெளிபடுத்தல் 16 : 20 (ECTA)
தீவுகளெல்லாம் மறைந்துபோயின; மலைகளும் காணப்படவில்லை. [* திவெ 6: 14 ]
வெளிபடுத்தல் 16 : 21 (ECTA)
கல்மழை பெருங்கற்களாக விண்ணிலிருந்து மக்கள்மீது பெய்தது. கல்மழையால் ஏற்பட்ட இவ்வாதை மிகக் கொடியதாய் இருந்ததால், மக்கள் கடவுளைப் பழித்துரைத்தார்கள். * விப 9:23; திவெ 11:19..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21