வெளிபடுத்தல் 13 : 1 (ECTA)
கடலிலிருந்து வெளியே வந்த விலங்கு அப்பொழுது ஒரு விலங்கு கடலிலிருந்து வெளியே வரக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் கொம்புகளில் பத்து மணிமுடிகளும் தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்களும் காணப்பட்டன. [* தானி 7:3; திவெ 17:3,7- 12 ]
வெளிபடுத்தல் 13 : 2 (ECTA)
நான் கண்ட அந்த விலங்கு சிறுத்தைபோல் இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்கள்போன்றும் வாய் சிங்கத்தின் வாய்போன்றும் இருந்தன. அந்த அரக்கப்பாம்பு தன் வல்லமையையும் அரியணையையும் பேரதிகாரத்தையும் அதற்கு அளித்தது. [* தானி 7:4- 6 ]
வெளிபடுத்தல் 13 : 3 (ECTA)
அந்த விலங்கின் தலைகளுள் ஒன்று உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய அளவுக்குப் படுகாயப்பட்டிருந்ததுபோல் தோன்றியது; ஆனால், அந்தப் படுகாயம் குணமாகியிருந்தது. மண்ணுலகு முழுவதும் வியப்புற்று அவ்விலங்கைப் பின் தொடர்ந்தது.
வெளிபடுத்தல் 13 : 4 (ECTA)
அரக்கப்பாம்பு அவ்விலங்குக்குத் தன் அதிகாரத்தை அளித்திருந்ததால், மக்கள் அப்பாம்பை வணங்கினார்கள்; “விலங்குக்கு ஒப்பானவர் யார்? அதனுடன் போரிடக் கூடியவர் யார்?” என்று கூறி அவ்விலங்கையும் வணங்கினார்கள்.
வெளிபடுத்தல் 13 : 5 (ECTA)
ஆணவப் பேச்சுப் பேசவும் கடவுளைப் பழித்துரைக்கவும் அவ்விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது; நாற்பத்திரண்டு மாதம் அது அதிகாரம் செலுத்த விடப்பட்டது; [* தானி 7:8,25; 11: 36 ]
வெளிபடுத்தல் 13 : 6 (ECTA)
கடவுளையும் அவரது பெயரையும் உறைவிடத்தையும் விண்ணகத்தில் குடியிருப்போரையும் பழித்துரைக்கத் தொடங்கியது. [* தானி 7:8,25; 11: 36 ]
வெளிபடுத்தல் 13 : 7 (ECTA)
இறைமக்களோடு போர்தொடுக்கவும் அவர்களை வெல்லவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது; குலத்தினர், மக்களினத்தினர், மொழியினர், நாட்டினர் ஆகிய அனைவர்மீதும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. [* தானி 7: 21 ]
வெளிபடுத்தல் 13 : 8 (ECTA)
மண்ணுலகில் வாழ்வோர் அனைவரும் அதை வணங்குவர். இவர்கள் கொலை செய்யப்பட்ட ஆட்டுக்குட்டி வைத்திருக்கும் வாழ்வின் நூலில் உலகம் தோன்றியது முதல் பெயர் எழுதப்படாதோர். [* திபா 69: 28 ]
வெளிபடுத்தல் 13 : 9 (ECTA)
கேட்கச் செவி உடையோர் கேட்கட்டும்;
வெளிபடுத்தல் 13 : 10 (ECTA)
“சிறையிலிடப்பட வேண்டியவர் சிறையிலிடப்படுவர்; வாளால் கொல்லப்பட வேண்டியவர் வாளால் மடிவர்.” ஆகவே இறைமக்களுக்கு மனவுறுதியும் நம்பிக்கையும் தேவை. * எரே 15:2; 43:11..
வெளிபடுத்தல் 13 : 11 (ECTA)
மண்ணிலிருந்து வெளியே வந்த விலங்கு பின்னர், மற்றொரு விலங்கு மண்ணிலிருந்து வெளியே வரக் கண்டேன். ஆட்டுக்கிடாயின் கொம்புகளைப் போன்று இரு கொம்புகள் அதற்கு இருந்தன. ஆனால், அது அரக்கப்பாம்பு போன்று பேசியது.
வெளிபடுத்தல் 13 : 12 (ECTA)
அவ்விலங்கு முதலாம் விலங்கின் முழு அதிகாரத்தையும் அதன் முன்னிலையில் செயல்படுத்தியது. உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய படு காயத்தினின்று குணம் பெற்றிருந்த முதல் விலங்கை மண்ணுலகும் அதில் வாழ்வோரும் வணங்கும்படி செய்தது.
வெளிபடுத்தல் 13 : 13 (ECTA)
அது பெரிய அடையாளச் செயல்கள் செய்தது; மனிதர் பார்க்க விண்ணிலிருந்து மண்மீது நெருப்பு விழும்படியும் செய்தது.
வெளிபடுத்தல் 13 : 14 (ECTA)
இவ்வாறு முதல் விலங்கின் முன்னிலையில் அது செய்யும்படி அனுமதிக்கப்பட்டிருந்த அந்த அரும் அடையாளங்களால் மண்ணுலகில் வாழ்வோரை ஏமாற்றியது; வாளால் படுகாயப்பட்டிருந்தும் உயிர் வாழ்ந்த அவ்விலங்குக்குச் சிலை ஒன்று செய்யுமாறு அவர்களிடம் கூறியது.
வெளிபடுத்தல் 13 : 15 (ECTA)
அச்சிலையைப் பேசவைக்கவும் அதனை வணங்காதவர்களைக் கொலை செய்யவும் அதற்கு உயிர் கொடுக்குமாறு இரண்டாம் விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது.
வெளிபடுத்தல் 13 : 16 (ECTA)
சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது.
வெளிபடுத்தல் 13 : 17 (ECTA)
இவ்வாறு, அந்த விலங்கின் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக்கொள்ளாத எவராலும் விற்கவோ வாங்கவோ முடியவில்லை.
வெளிபடுத்தல் 13 : 18 (ECTA)
இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை. புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18