வெளிபடுத்தல் 1 : 1 (ECTA)
1.முன்னுரைநூன்முகம் இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார். அவர் தம் வானதூதரை அனுப்பித் தம் பணியாளராகிய யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார்.
வெளிபடுத்தல் 1 : 2 (ECTA)
அவர் கடவுள் அருளிய வாக்குக்கும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய உண்மைக்கும், ஏன், தாம் கண்டவை அனைத்துக்குமே சான்று பகர்ந்தார்.
வெளிபடுத்தல் 1 : 3 (ECTA)
இந்த இறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக் கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறு பெற்றோர். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.
வெளிபடுத்தல் 1 : 4 (ECTA)
2.ஆசியாவிலுள்ள திருச்சபைகளுக்குக் கடிதம் (4-5) ஆசியாவில்* உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும், அவரது அரியணைமுன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். [* விப 3:14; திவெ 4: 5 ; * ஆசியா என்பது உரோமைமாநிலங்களுள் ஒன்று. . இது இன்றைய துருக்கி நாட்டின்ஒரு பகுதி ஆகும் ]
வெளிபடுத்தல் 1 : 5 (ECTA)
[* எசா 55:4; திபா 89: 27 ]
வெளிபடுத்தல் 1 : 6 (ECTA)
ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென். [* விப 19:6; திவெ 5: 10 ]
வெளிபடுத்தல் 1 : 7 (ECTA)
இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்! [* தானி 7:13; செக் 12:10; மத் 24:30; மாற் 13:26; லூக் 21:27; யோவா 19:34,37; 1 தெச 4: 17 ]
வெளிபடுத்தல் 1 : 8 (ECTA)
“அகரமும் னகரமும் நானே”* என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே. [* திவெ 22:13; விப 3: 14 ; கிரேக்க நெடுங்கணக்கில் முதல், கடைசி எழுத்துகளான ‘அல்பாவும் ஒமேகாவும் நானே’ என்பது மூலப்பாடம்.. ]
வெளிபடுத்தல் 1 : 9 (ECTA)
கிறிஸ்துவின் காட்சி உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது.
வெளிபடுத்தல் 1 : 10 (ECTA)
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன்.
வெளிபடுத்தல் 1 : 11 (ECTA)
“நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி, எபேசு, சிமிர்னா, பெர்காம், தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, இலவோதிக்கேயா ஆகிய ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை” என்று அக்குரல் கூறியது.
வெளிபடுத்தல் 1 : 12 (ECTA)
என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன்.
வெளிபடுத்தல் 1 : 13 (ECTA)
அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார். [* தானி 7:13; 10: 5 ]
வெளிபடுத்தல் 1 : 14 (ECTA)
அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும் உறைபனிபோலும் வெண்மையாய் இருந்தது. அவருடைய கண்கள் தீப்பிழம்புபோலச் சுடர் விட்டன. [* தானி 7: 9 ; தானி 10: 6. ]
வெளிபடுத்தல் 1 : 15 (ECTA)
அவருடைய காலடிகள் உலையிலிட்ட வெண்கலம்போலப் பளபளத்தன. அவரது குரல் பெரும் வெள்ளத்தின் இரைச்சலை ஒத்திருந்தது. [* தானி 10: 6 ; எசே 1:24; 43: 2. ]
வெளிபடுத்தல் 1 : 16 (ECTA)
அவர் தம் வலக்கையில் ஏழு விண்மீன்களைக் கொண்டிருந்தார். இருபுறமும் கூர்மையான வாள் ஒன்று அவரது வாயிலிருந்து வெளியே வந்தது. அவரது முகம் நண்பகல் கதிரவன் போல் ஒளிர்ந்தது.
வெளிபடுத்தல் 1 : 17 (ECTA)
நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது; “அஞ்சாதே! முதலும் முடிவும் நானே.
வெளிபடுத்தல் 1 : 18 (ECTA)
வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. [* எசா 44:6; 48:12; திவெ 2:8; 22: 13 ]
வெளிபடுத்தல் 1 : 19 (ECTA)
எனவே, நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவை.
வெளிபடுத்தல் 1 : 20 (ECTA)
எனது வலக்கையில் நீ கண்ட ஏழு விண்மீன்கள், ஏழு பொன் விளக்குத்தண்டுகள் ஆகியவற்றின் மறைபொருள் இதுவே; ஏழு விண்மீன்கள் ஏழு திருச்சபைகளின் வான தூதர்களையும், ஏழு விளக்குத்தண்டுகள் ஏழு திருச்சபைகளையும் குறிக்கும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20