சங்கீதம் 97 : 1 (ECTA)
அனைத்து உலகின் தலைவர் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக!
சங்கீதம் 97 : 2 (ECTA)
மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்.
சங்கீதம் 97 : 3 (ECTA)
நெருப்பு அவர்முன் செல்கின்றது; சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.
சங்கீதம் 97 : 4 (ECTA)
அவர்தம் மின்னல்கள் பூவுலகை ஒளிர்விக்கின்றன; மண்ணுலகம் அதைக் கண்டு நடுங்குகின்றது.
சங்கீதம் 97 : 5 (ECTA)
ஆண்டவர் முன்னிலையில்,
அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.
சங்கீதம் 97 : 6 (ECTA)
வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன.
சங்கீதம் 97 : 7 (ECTA)
உருவங்களை வழிபடுவோரும் சிலைகள் பற்றிப் பெருமையடித்துக் கொள்வோரும் வெட்கத்துக்கு உள்ளாவர்; அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள். [* திபா 29:1-2.. ]
சங்கீதம் 97 : 8 (ECTA)
ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகளை
சீயோன் கேட்டு மகிழ்கின்றது; யூதாவின் நகர்கள் களிகூர்கின்றன. [* திபா 29:1-2.. ]
சங்கீதம் 97 : 9 (ECTA)
ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! [* திபா 29:1-2.. ]
சங்கீதம் 97 : 10 (ECTA)
தீமையை வெறுப்போர்மீது ஆண்டவர் அன்புகூர்கின்றார். அவர்தம் பற்றுமிகு அடியார்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்; பொல்லாரின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார்.
சங்கீதம் 97 : 11 (ECTA)
நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
சங்கீதம் 97 : 12 (ECTA)
நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12