சங்கீதம் 95 : 1 (ECTA)
புகழ்ச்சிப் பாடல் வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
சங்கீதம் 95 : 2 (ECTA)
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.
சங்கீதம் 95 : 3 (ECTA)
ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.
சங்கீதம் 95 : 4 (ECTA)
பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன; மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.
சங்கீதம் 95 : 5 (ECTA)
கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின.
சங்கீதம் 95 : 6 (ECTA)
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
சங்கீதம் 95 : 7 (ECTA)
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! [* எபி 3:15; 4: 7 ; எபி 3:7- 11. ]
சங்கீதம் 95 : 8 (ECTA)
அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். [* எபி 3:15; 4: 7 ; எபி 3:7- 11. ; விப 17:1-7; எண் 20:2- 13. ]
சங்கீதம் 95 : 9 (ECTA)
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். [* எபி 3:7- 11 ; விப 17:1-7; எண் 20:2- 13. ]
சங்கீதம் 95 : 10 (ECTA)
நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: ‛அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்’. [* எபி 3:7- 11 ]
சங்கீதம் 95 : 11 (ECTA)
எனவே, நான் சினமுற்று, ‛நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்’ என்று ஆணையிட்டுக் கூறினேன். [* எபி 3:7- 11 ; எண் 14:20-23; இச 1:34-36; 12:9-10; எபி 4:3-5.. ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11