சங்கீதம் 94 : 1 (ECTA)
ஆண்டவரே அனைவரின் நீதிபதி அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா! ஆண்டவரே! அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா, ஒளிர்ந்திடும்! [* 1 கொரி 3:20.. ]
சங்கீதம் 94 : 2 (ECTA)
உலகின் நீதிபதியே, எழுந்தருளும்; செருக்குற்றோர்க்கு உரிய தண்டனையை அளியும்.
சங்கீதம் 94 : 3 (ECTA)
எத்துணைக் காலம், ஆண்டவரே! எத்துணைக் காலம் பொல்லார் அக்களிப்பர்?
சங்கீதம் 94 : 4 (ECTA)
அவர்கள் இறுமாப்புடன் பேசுகின்றனர்; தீமைசெய்வோர் அனைவரும் வீம்பு பேசுகின்றனர்.
சங்கீதம் 94 : 5 (ECTA)
ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்; உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.
சங்கீதம் 94 : 6 (ECTA)
கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்; திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர்.
சங்கீதம் 94 : 7 (ECTA)
‘ஆண்டவர் இதைக் கண்டு கொள்வதில்லை; யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை’ என்கின்றனர்.
சங்கீதம் 94 : 8 (ECTA)
மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்; மதிகேடரே, எப்பொழுது நீங்கள் அறிவு பெறுவீர்கள்?
சங்கீதம் 94 : 9 (ECTA)
செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?
சங்கீதம் 94 : 10 (ECTA)
மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவூட்டுபவர் தண்டியாமல் இருப்பாரோ?
சங்கீதம் 94 : 11 (ECTA)
மானிடரின் எண்ணங்கள் வீணானவை; இதனை ஆண்டவர் அறிவார்.
சங்கீதம் 94 : 12 (ECTA)
ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்;
சங்கீதம் 94 : 13 (ECTA)
அவர்களின் துன்ப நாள்களில் அவர்களுக்கு அமைதி அளிப்பீர். பொல்லார்க்குக் குழி வெட்டப்படும்.
சங்கீதம் 94 : 14 (ECTA)
ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார்.
சங்கீதம் 94 : 15 (ECTA)
தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர்.
சங்கீதம் 94 : 16 (ECTA)
என் சார்பில் பொல்லார்க்கு எதிராக எழுபவர் எவர்? என் சார்பில் தீமை செய்வோர்க்கு எதிராக நிற்பவர் எவர்?
சங்கீதம் 94 : 17 (ECTA)
ஆண்டவர் எனக்குத் துணை நிற்காதிருந்தால், என் உயிர் விரைவில் மௌன உலகிற்குச் சென்றிருக்கும்!
சங்கீதம் 94 : 18 (ECTA)
‘என் அடி சறுக்குகின்றது’ என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று.
சங்கீதம் 94 : 19 (ECTA)
என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.
சங்கீதம் 94 : 20 (ECTA)
சட்டத்திற்குப் புறம்பாகத் தீமை செய்யும் ஊழல்மிகு ஆட்சியாளர் உம்மோடு ஒன்றாக இணைந்திருக்க முடியுமோ?
சங்கீதம் 94 : 21 (ECTA)
நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க அவர்கள் இணைகின்றனர்; மாசற்றோர்க்குக் கொலைத்தீர்ப்பு அளிக்கின்றனர்.
சங்கீதம் 94 : 22 (ECTA)
ஆண்டவரோ எனக்கு அரண் ஆனார்; என் கடவுள் எனக்குப் புகலிடம் தரும் பாறை ஆகிவிட்டார்.
சங்கீதம் 94 : 23 (ECTA)
அவர்கள் இழைத்த தீங்கை அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்; அவர்கள் செய்த தீமையின் பொருட்டு அவர்களை அழிப்பார்; நம் கடவுளாம் ஆண்டவர் அவர்களை அழித்தே தீர்வார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23