சங்கீதம் 92 : 1 (ECTA)
புகழ்ச்சிப்பாடல்
(ஓய்வு நாளுக்கான புகழ்ப்பாடல்)
ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.
சங்கீதம் 92 : 2 (ECTA)
காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்
சங்கீதம் 92 : 3 (ECTA)
பத்துநரம்பு வீணையோடும் தம்புரு, சுரமண்டல இசையோடும் எடுத்துரைப்பது நன்று.
சங்கீதம் 92 : 4 (ECTA)
ஏனெனில், ஆண்டவரே! உம் வியத்தகு செயல்களால் என்னை மகிழ்வித்தீர்; உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து நான் மகிழ்ந்து பாடுவேன்.
சங்கீதம் 92 : 5 (ECTA)
ஆண்டவரே! உம் செயல்கள் எத்துணை மேன்மையாவை; உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.
சங்கீதம் 92 : 6 (ECTA)
அறிவிலிகள் அறியாததும் மூடர் உணராததும் இதுவே:
சங்கீதம் 92 : 7 (ECTA)
பொல்லார் புல்லைப்போன்று செழித்து வளரலாம்; தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்! ஆனால், அவர்கள் என்றும் அழிவுக்கு உரியவரே;
சங்கீதம் 92 : 8 (ECTA)
நீரோ ஆண்டவரே! என்றுமே உயர்ந்தவர்.
சங்கீதம் 92 : 9 (ECTA)
ஏனெனில், ஆண்டவரே! உம் எதிரிகள் – ஆம், உம் எதிரிகள் – அழிவது திண்ணம்; தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டுபோவர்.
சங்கீதம் 92 : 10 (ECTA)
காட்டைருமைக்கு நிகரான வலிமையை எனக்கு அளித்தீர்; புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.
சங்கீதம் 92 : 11 (ECTA)
என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டேன்; எனக்கு எதிரான பொல்லார்க்கு நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன். [* மத் 4:6; லூக் 4: 10 ]
சங்கீதம் 92 : 12 (ECTA)
நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். [* மத் 4:6; லூக் 4: 11 ]
சங்கீதம் 92 : 13 (ECTA)
ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். [* லூக் 10:19.. ]
சங்கீதம் 92 : 14 (ECTA)
அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;
சங்கீதம் 92 : 15 (ECTA)
‛ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை’ என்று அறிவிப்பர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15