சங்கீதம் 89 : 1 (ECTA)
நாடு இடருற்றபோது பாடியது
(எஸ்ராகியரான ஏத்தானின் அறப்பாடல்)
ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
சங்கீதம் 89 : 2 (ECTA)
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது.
சங்கீதம் 89 : 3 (ECTA)
நீர் உரைத்தது: ‛நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
சங்கீதம் 89 : 4 (ECTA)
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்’ (சேலா) [* 2 சாமு 7:12-16; 1 குறி 17:11-14; திபா 132:11; திப 2: 30 ]
சங்கீதம் 89 : 5 (ECTA)
ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப்
புகழ்கின்றன;
தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும்.
சங்கீதம் 89 : 6 (ECTA)
வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்?
சங்கீதம் 89 : 7 (ECTA)
தூயவர் குழுவில் அவர் அஞ்சுதற்குரிய இறைவன்; அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர்.
சங்கீதம் 89 : 8 (ECTA)
படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! உம்மைப்போல் ஆற்றல் மிக்கவர் யார்? ஆண்டவரே! உம் உண்மை உம்மைச் சூழ்ந்துள்ளது.
சங்கீதம் 89 : 9 (ECTA)
கொந்தளிக்கும் கடல்மீது நீர் ஆட்சி செலுத்துகின்றீர்; பொங்கியெழும் அதன் அலைகளை அடக்குகின்றீர்.
சங்கீதம் 89 : 10 (ECTA)
இராகாபைப் பிணமென நசுக்கினீர்; உம் எதிரிகளை உம் வலிய புயத்தால் சிதறடித்தீர்.
சங்கீதம் 89 : 11 (ECTA)
வானமும் உமதே! வையமும் உமதே! பூவுலகையும் அதில் நிறைந்துள்ள அனைத்தையும் நிலைநிறுத்தியவர் நீரே!
சங்கீதம் 89 : 12 (ECTA)
வடக்கையும் தெற்கையும் படைத்தவர் நீரே! தாபோரும் எர்மோனும் உம் பெயரைக் களிப்புடன் புகழ்கின்றன.
சங்கீதம் 89 : 13 (ECTA)
வன்மைமிக்கது உமது புயம்; வலிமைகொண்டது உமது கை; உயர்ந்து நிற்பது உம் வலக்கை;
சங்கீதம் 89 : 14 (ECTA)
நீதியும் நேர்மையும் உம் அரியணைக்கு அடித்தளம்; பேரன்பும் உண்மையும் உமக்கு முன்னே செல்லும்.
சங்கீதம் 89 : 15 (ECTA)
விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
சங்கீதம் 89 : 16 (ECTA)
அவர்கள் நாள்முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள்.
சங்கீதம் 89 : 17 (ECTA)
ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது.
சங்கீதம் 89 : 18 (ECTA)
நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர்.
சங்கீதம் 89 : 19 (ECTA)
கடவுள் தாவீதுக்கு அளித்த வாக்குறுதி முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: “வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை
உயர்த்தினேன்.
சங்கீதம் 89 : 20 (ECTA)
என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன். [* 1 சாமு 13:14; 16:12; திப 13: 22 ]
சங்கீதம் 89 : 21 (ECTA)
என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்.
சங்கீதம் 89 : 22 (ECTA)
எதிரி எவனாலும் அவனை வஞ்சிக்க முடியாது; தீயவன் எவனாலும் அவனை ஒடுக்க இயலாது.
சங்கீதம் 89 : 23 (ECTA)
அவனுடைய எதிரிகளை அவன் கண்முன் நசுக்குவேன்; அவனை வெறுப்போரை வெட்டிக் கொல்வேன்.
சங்கீதம் 89 : 24 (ECTA)
என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.
சங்கீதம் 89 : 25 (ECTA)
அவன் கையைக் கடல்வரைக்கும் அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும் எட்டச் செய்வேன்.
சங்கீதம் 89 : 26 (ECTA)
‛நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.
சங்கீதம் 89 : 27 (ECTA)
நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன். [* திவெ 1: 5 ]
சங்கீதம் 89 : 28 (ECTA)
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
சங்கீதம் 89 : 29 (ECTA)
அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன்.
சங்கீதம் 89 : 30 (ECTA)
அவன் புதல்வர் என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ, என் நீதிநெறிகளின்படி நடக்காவிடிலோ,
சங்கீதம் 89 : 31 (ECTA)
என் விதிகளை மீறினாலோ, என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காவிடிலோ, [* 89 தலைப்பு: 1 அர .. ]
சங்கீதம் 89 : 32 (ECTA)
அவர்களது குற்றத்திற்காக அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்; அவர்களின் தீச்செயலுக்காக அவர்களைக் கசையால் அடிப்பேன்;
சங்கீதம் 89 : 33 (ECTA)
ஆயினும், என் பேரன்பை தாவீதைவிட்டு விலக்கமாட்டேன்; என் வாக்குப்பிறாழாமையினின்று வழுவமாட்டேன்.
சங்கீதம் 89 : 34 (ECTA)
என் உடன்படிக்கையை நான் மீறமாட்டேன். என் வாக்குறுதியை நான் மாற்றமாட்டேன்.
சங்கீதம் 89 : 35 (ECTA)
ஒரே முறையாய் என் புனிதத்தின் மீது ஆணையிட்டுக் கூறினேன்; ஒருபோதும் அவனுக்கு நான் பொய் உரைக்கமாட்டேன்.
சங்கீதம் 89 : 36 (ECTA)
அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்; அவனது அரியணை கதிரவன் உள்ளளவும் என்முன் நிலைக்கும்.
சங்கீதம் 89 : 37 (ECTA)
அது விண்ணின் உண்மையான சான்றென உறுதியாயிருக்கும்; நிலாவென என்றென்றும் நிலைத்திருக்கும்.” (சேலா)
சங்கீதம் 89 : 38 (ECTA)
அரசரின் தோல்வி குறித்துப் புலம்பியது ஆயினும், திருப்பொழிவு பெற்றவரை இப்போது நீர் புறக்கணித்துத் தள்ளிவிட்டீர்; அவர்மீது கடுஞ்சினம் கொண்டுள்ளீர்.
சங்கீதம் 89 : 39 (ECTA)
உம் ஊழியருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை வெறுத்து ஒதுக்கினீர்; அவரது மணிமுடியைப் புழுதில் தள்ளி இழிவுபடுத்தினீர்.
சங்கீதம் 89 : 40 (ECTA)
அவருடைய மதில்களைத் தகர்த்துவிட்டீர்; அவருடைய அரண்களைப் பாழடையச் செய்தீர்.
சங்கீதம் 89 : 41 (ECTA)
வழிப்போக்கர் அனைவரும் அவரைக் கொள்ளையிடுகின்றனர்; அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு அவர் ஆளானார்.
சங்கீதம் 89 : 42 (ECTA)
அவருடைய எதிரிகளின் கை ஓங்கச் செய்தீர்; அவருடைய பகைவர் அனைவரும் அக்களிக்கச் செய்தீர்.
சங்கீதம் 89 : 43 (ECTA)
அவரது வாளின் முனையை வளைத்துவிட்டீர்; போரில் அவரால் எதிர்த்து நிற்க முடியாதபடி செய்தீர்.
சங்கீதம் 89 : 44 (ECTA)
அவரது மாட்சி அவரைவிட்டு விலகச் செய்தீர்; அவரது அரியணையைக் கீழே தள்ளிவிட்டீர்,
சங்கீதம் 89 : 45 (ECTA)
அவரது இளமையைச் சுருக்கிவிட்டீர்; அவருக்கு வெட்கத்தை ஆடையாக்கினீர். (சேலா)
சங்கீதம் 89 : 46 (ECTA)
விடுதலைக்காக வேண்டல் எவ்வளவு காலம் மறைந்திருப்பீர் ஆண்டவரே! என்றென்றுமா? எவ்வளவு காலம் உமது சினம் நெருப்பென எரிந்து கொண்டிருக்கும்?
சங்கீதம் 89 : 47 (ECTA)
எங்கள் ஆயுள் எவ்வளவு குறுகியது என்பதை நினைத்தருளும்; மானிடர் அனைவரையும் வீணாகவா படைத்துள்ளீர்?
சங்கீதம் 89 : 48 (ECTA)
என்றும் சாவைக் காணாமல் இருப்பவர் எவர்? பாதாளத்தின் பிடியினின்று தன்னைக் காத்துக் கொள்பவர் எவர்? (சேலா)
சங்கீதம் 89 : 49 (ECTA)
என் தலைவரே! தொடக்க காலத்தில் நீர் காட்டிய பேரன்பு எங்கே? தாவீதுக்கு உமது வாக்குப் பிறாழாமையை முன்னிட்டு உறுதியாகக் கூறியது எங்கே?
சங்கீதம் 89 : 50 (ECTA)
என் தலைவரே! உம் ஊழியர்மீது சுமத்தப்படும் பழியை நினைத்துப்பாரும்; மக்களினங்களின் பழிச்சொற்கள்
அனைத்தையும்
என் நெஞ்சில் தாங்குகிறேன்.
சங்கீதம் 89 : 51 (ECTA)
ஆண்டவரே! உம் எதிரிகள் அவர் மேல் பழி சுமத்துகின்றனர்;
அவர்கள் உம்மால்
திருப்பொழிவு பெற்றவரைச் சென்றவிடமெல்லாம் தூற்றுகின்றனர்.
சங்கீதம் 89 : 52 (ECTA)
ஆண்டவர் என்றென்றும் புகழப்பெறுவாராக! ஆமென், ஆமென்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52