சங்கீதம் 88 : 1 (ECTA)
உதவிக்காக வேண்டல்
(கோராகியரின் புகழ்ப்பாடல்; பாடகர் தலைவர்க்கு: ‘நோயின் துயரில்’ என்ற மெட்டு; எஸ்ராகியரான ஏமானின் அறப்பாடல்)
ஆண்டவரே! என் மீட்பின் கடவுளே! பகலில் கதறுகிறேன்; இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன்.
சங்கீதம் 88 : 2 (ECTA)
என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்!
சங்கீதம் 88 : 3 (ECTA)
ஏனெனில், என் உள்ளம் துன்பத்தால் நிறைந்துள்ளது; என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.
சங்கீதம் 88 : 4 (ECTA)
படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக நானும் கணிக்கப்படுகின்றேன்; வலுவிழந்த மனிதரைப்போல் ஆனேன்.
சங்கீதம் 88 : 5 (ECTA)
இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்; கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்; அவர்களை ஒருபோதும் நீர் நினைப்பதில்லை; அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள்.
சங்கீதம் 88 : 6 (ECTA)
ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்! காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டு விட்டீர்.
சங்கீதம் 88 : 7 (ECTA)
உமது சினம் என்னை அழுத்துகின்றது; உம் அலைகள் அனைத்தும் என்னை வருத்துகின்றன. (சேலா)
சங்கீதம் 88 : 8 (ECTA)
எனக்கு அறிமுகமானவர்களை என்னைவிட்டு விலகச்செய்தீர்; அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; நான் வெளியேற இயலாவண்ணம் அடைபட்டுள்ளேன்.
சங்கீதம் 88 : 9 (ECTA)
துயரத்தினால் என் கண் மங்கிப்போயிற்று; ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்; உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன். [* திவெ 15:4.. ]
சங்கீதம் 88 : 10 (ECTA)
இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்? கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ? (சேலா)
சங்கீதம் 88 : 11 (ECTA)
கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா? அழிவின் தலத்தில் உமது உண்மை அறிவிக்கப்படுமா?
சங்கீதம் 88 : 12 (ECTA)
இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா? மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா?
சங்கீதம் 88 : 13 (ECTA)
ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்.
சங்கீதம் 88 : 14 (ECTA)
ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்? உமது முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைக்கின்றீர்?
சங்கீதம் 88 : 15 (ECTA)
என் இளமைமுதல் நான் துன்புற்று மடியும் நிலையில் உள்ளேன்; உம்மால் வந்த பெருந் திகிலால் தளர்ந்து போனேன்.
சங்கீதம் 88 : 16 (ECTA)
உமது வெஞ்சினம் என்னை மூழ்கடிக்கின்றது; உம் அச்சந்தரும் தாக்குதல்கள் என்னை அழிக்கின்றன.
சங்கீதம் 88 : 17 (ECTA)
அவை நாள் முழுவதும் வெள்ளப்பெருக்கென என்னைச் சூழ்ந்து கொண்டன; அவை எப்பக்கமும் என்னை வளைத்துக்கொண்டன.
சங்கீதம் 88 : 18 (ECTA)
என் அன்பரையும் தோழரையும் என்னைவிட்டு அகற்றினீர்; இருளே என் நெருங்கிய நண்பன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18