சங்கீதம் 87 : 1 (ECTA)
பெருமை மிகு எருசலேம்
(கோராகியரின் புகழ்ப்பாடல்)
நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
சங்கீதம் 87 : 2 (ECTA)
யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
சங்கீதம் 87 : 3 (ECTA)
கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. (சேலா)
சங்கீதம் 87 : 4 (ECTA)
எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‛இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.
சங்கீதம் 87 : 5 (ECTA)
‛இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.
சங்கீதம் 87 : 6 (ECTA)
மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‛இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார். (சேலா)
சங்கீதம் 87 : 7 (ECTA)
ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‛எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர்.

1 2 3 4 5 6 7